மந்திரி புசார் நடவடிக்கைக்கு ஒரு சபாஷ், தனியார் மயம் போக்கிரித்தனமாகி விட்டது

“தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவையைக் கூட அரசியல் மயமாக்க முடியும்- பிஎன் சேவகர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டதே அதற்குக் காரணம்.”

 

 

 

 

சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள சிலாங்கூர் விருப்பம்

அக்குவினாஸ்: மாநில அரசாங்கம் சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதை நான் ஆதரிக்கிறேன். வீடமைப்பாளர் என்ற முறையில் எனக்கு சபாஷ்-உடன் தொடர்புகள் உண்டு. நீர் வளத் தொழிலில் தனக்குள்ள ஏகபோக உரிமையை பயன்படுத்தி அது மிரட்டுவதும் ஊழலில் ஈடுபடுவதும் எனக்குத் தெரியும்.

எம் பிஜே: அது உண்மை என்றால் அரசியல் ஆதாயத்தைப் பெறுவதற்காக சபாஷ் தண்ணீர் பற்றாக்குறையை ஜோடித்துள்ளது. அதனைச் செய்யும் போது பாதுகாப்பு ஏதுமில்லாத குடிமக்களுக்குச் சிரமத்தைக் கொண்டு வருகின்றது. நமது சமுதாயத்தில் இத்தகைய இழிவான எண்ணங்களைக் கொண்ட மக்களும் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

கென்சான்: மந்திரி புசார் காலித் இப்ராஹிம் அவர்களே, நீர் விநியோக நடவடிக்கைகளை அதனிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். அது சிலாங்கூரை மிரட்டுவதற்கு அனுமதிக்காதீர்கள்.

சபாஷ் தலைவர் அம்னோ ஆள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அம்னோ ஆட்கள் மாநிலத்தில் நிலைத்தன்மையைச் சீர்குலைக்க எல்லா வகையான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். அவர்கள் நோக்கம் அம்னோ மீண்டும் சிலாங்கூரைக் கைப்பற்ற வகை செய்வதாகும்.

சராஜுன் ஹுடா: அதுதான் மக்களுக்காக வேலை செய்யும் பொறுப்புள்ள அரசாங்கமாகும். சபாஷ் நிறுவனத்தை மாநில அரசு சிறப்பாக நிர்வாகம் செய்யும் என்பது மாநில மக்களுக்குத் தெரியும்.

தண்ணீர் மக்களுக்குச் சொந்தமானது. ஆகவே அதனை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும். பிஎன், மாநில அரசை மருட்டி சிலாங்கூர் மக்களை பிணையாக வைத்துள்ளது.

அடையாளம் இல்லாதவன்#06659895: மலேசியா தோற்றம் பெற்ற நாள் முதல் கூட்டரசு அரசாங்கம் எதிர்க்கட்சிகள் வசமுள்ள மாநில அரசுகளை மருட்டி வந்துள்ளது.

சிலாங்கூர் அரசு தனது முடிவை செயல்படுத்த வேண்டும். நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம். கூட்டரசு அரசாங்கம் எப்போதும் பொய்களை ஜோடிக்கிறது.

ஹாங் துவா பிஜே: காலித்-துக்கு ஒரு சபாஷ். சிலாங்கூர் மக்களாகிய நாங்கள் உங்களை இறுதி வரை ஆதரிப்போம். உங்கள் நிலையில் உறுதியாக நில்லுங்கள். கூட்டரசு அரசாங்கத்துக்கு அடி பணிய வேண்டாம்.

தெளிந்த நீர்: அதற்கு கூட்டரசு அரசாங்கம் ஒப்புக் கொள்ளுமா ?  நான் அவ்வாறு நினைக்கவில்லை. தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவையைக் கூட அரசியல் மயமாக்க முடியும்- பிஎன் சேவகர்களுக்கு கடந்த கால பிஎன் நிர்வாகங்கள் வர்த்தகச் சலுகைகள் கொடுத்ததே அதற்குக் காரணம்.

அந்தத் தனியார் மயம் போக்கிரித்தனமாகி விட்டது.

ஒடின்: தண்ணீர் மாநில விவகாரமாகும் கூட்டரசு விஷயம் அல்ல.

மூன் டைம்: அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் வெளியிடுகின்ற செய்திகளைப் படித்தால் நாளையே சிலாங்கூரில் ஒரு துளி தண்ணீர் கூட இருக்காது என எண்ணத் தோன்றும்.

சபாஷ் தனது சலுகையை நிலை நிறுத்திக் கொள்ள எல்லா வழிகளிலும் போராடுகின்றது. அதனால் அது பொய்களைப் பரப்புகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனச் சொல்கிறது.

உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமானால் அந்த நீர் தேக்கங்களை நேரில் சென்று பாருங்கள். அதனைத்தான் சிலாங்கூர் மந்திரி புசார் செய்திருக்க வேண்டும்.

அடையாளம் இல்லாதவன் #59879079: அந்த நீர் தேக்கங்களில் தண்ணீர் அளவு குறித்த படங்களை எளிதாக வெளியிட்டு விடலாமே. அவற்றை மறைப்பது கடினம். காலித் அவர்களே உங்கள் வார்த்த்தைகளுக்கு ஆதரவாக படங்களை வெளியிடுங்கள்.

அடையாளம் இல்லாதவன் #19098644: புத்ராஜெயாவில் நாளை தண்ணீர் பங்கீட்டை தொடங்குங்கள். அதற்கு அடுத்த நாள் ஜோடிக்கப்பட்ட தண்ணீர் பற்றாக்குறை மாயமாக அகன்று விடும்.

பெர்ட் தான்: சபாஷ் நடத்தும் மாயாஜாலத்தினால் தண்ணீர் கிடைக்கா விட்டால் நாம் சபாஷ் நிர்வாகத் தலைவர் ரோஸாலி இஸ்மாயில், தலைமை நிர்வாக அதிகாரி ருஸ்லான் ஹசான் வீடுகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

பெர்சே 2.0 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னாள் அம்னோ குண்டர்கள்  கூடியது போன்று தனியார் வீடுகளுக்கு முன்பு கூடுவது சட்டப்பூர்வமானது என நமது மூத்த போலீஸ் அதிகாரிகளே சொல்லி விட்டனர்.

தாய்கோதாய்: அடுத்து பிஎன், நாம் சுவாசிக்கும் காற்றைக் கூட- தனியார் மயமாக்கத் தொடங்கும்.

TAGS: