தண்ணீர் சர்ச்சை- சிலாங்கூர் நீர் தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன

“தண்ணீர் பங்கீட்டை அமலாக்க வேண்டியிருக்கும் என சபாஷ் ஏன் சிலாங்கூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் ?”

சிலாங்கூர் அணைக்கட்டுக்களில் நீர் அளவு முழுமையாக உள்ளது என்கிறார் லியூ

பெர்ட் தான்: ‘என் கிண்ணம் நிரம்பி வழிகிறது’ என்பதைப் போல நமது தேவைகளுக்கு அதிகமாகவே தண்ணீர் இருக்கிறது.

நீர் தேக்கங்களில் தண்ணீர் அளவு குறைவாக இருப்பதாகவும் அதனால் தண்ணீர் பங்கீட்டை அமலாக்க வேண்டியிருக்கும் என சபாஷ் ஏன் சிலாங்கூர் மக்களிடையே அச்சத்தை பரப்ப வேண்டும் ?

எதிர்வரும் ரமதான் மாதத்தில் முஸ்லிம்கள் தங்களுக்கும் விற்பதற்கும் உணவுப் பொருட்களையும் கேக்-களையும் தயாரிப்பர் என்பதால் அச்சம் மேலும் அதிகமாகி உள்ளது.

அது அப்பட்டமான பொய் என்பது இப்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீர் தேக்கங்களில் தண்ணீர் முழு அளவில் உள்ளன. ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக சபாஷ் மீது போலீசில் புகார் செய்ய முடியுமா ?

இது அரசியல் சதியாகும். புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றினால் சபாஷ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிப்முங்: அந்த பிரச்சாரத்துக்கு பின்னணியில் இருப்பது அம்னோவைத் தவிர வேறு யாருமில்லை. வழக்கம் போல அது மக்களிடையே அச்சத்தை மூட்டுகிறது. சிலாங்கூரை இழந்த அது அந்த மாநிலத்துக்கு எதிராக சதி செய்கின்றது.

“என்ன விலை கொடுத்தாவது புத்ராஜெயாவைத் தற்காக்க வேண்டும்” என பிரதமர் நஜிப் ரசாக் சொன்னது நினைவில் இருக்கிறதா ? அந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

அடுத்த அம்னோ சதி என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கஸக்: சபாஷ் அம்னோ சேவகர் நிறுவனமாகும். அது நமக்கு நன்கு தெரியும். பக்காத்தான் மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்க அம்னோ முழு மூச்சாக செயல்படுகிறது. முக்கிய நாளேடுகள் ஒரு தரப்புச் செய்திகளை மட்டுமே வெளியிடுவதும் நமக்குத் தெரியும்.

ஆனால் நாம் முட்டாள்கள் அல்ல. தண்ணீர் நிர்வாகத்தை மாநில அரசாங்கம் உடனடியாக ஏற்றுக் கொள்வதை நாங்கள் ஆதரிக்கிறோம்.

மோகன் காந்தி: நீர் பற்றாக்குறையை ஏற்படுத்த சபாஷ், அம்னோ/பிஎன் -உடன் ஒத்துழைக்கிறது என்பது வெள்ளிடைமலை. எல்லா நீர் தேக்கங்களிலும் நீர் நிரம்பி  வழிகின்றது. கால ஒட்டத்தில் படிப்படியாக சுத்திகரிக்கப்பட்ட நீர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது தானே ?

முன்மொழியப்பட்டுள்ள பெரிதும் உயர்த்தப்பட்டுள்ள லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான கட்டுமானச் செலவுகள் மூலம் பணத்தை உறிஞ்சுவதே முக்கிய பிரச்னையாகும்.

இப்போது இயங்கும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைக் கொண்டு நன்றாக திட்டமிடுவது தான் முக்கியம். இவ்வளவு ஆண்டுகளாகியும் ரோஸாலிக்கு அது தெரியவில்லையா ?

திருஎம்: இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியப் பாடம் இது தான். தண்ணீர் நெருக்கடி இருக்கிறதோ இல்லையோ தண்ணீரை நாம் வீணாக்கக் கூடாது.

மலேசியர்கள் குறிப்பாக சிலாங்கூர் மக்களும் கோலாலம்பூர் மக்களும் தண்ணீரை அதிகமாக விரயம் செய்கின்றனர். தண்ணீர் விரயத்தை கட்டுப்படுத்த நாம் அனைவரும் நடவடிக்கைகளை எடுப்போம்.

பார்வையாளன்: அம்னோவும் அதன் சேவகர்களும் நாட்டை பெரிய அளவில் சூறையாடி வருகின்றன. இப்போது அது வாரம் ஒன்றுக்கு ஒரு பில்லியன் ரிங்கிட்டாக உள்ளது. அந்த அளவு நாட்டு வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

ஒவ்வொரு மலேசியரும் அவர்களுடைய கொள்ளைக்கு பலியாகி உள்ளனர். தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மகாதீர் செய்து கொண்ட மோசடியான உடன்பாடுகளினால் ஒவ்வொரு வீடும் கூடுதலாக மின் கட்டணங்களைச் செலுத்துகின்றது.

டோல் கட்டணங்கள் இன்னொரு மோசடியாகும். நாட்டுக்கு தூய்மையான அரசாங்கம் இருந்திருந்தால் திருடப்பட்ட பில்லியன் கணக்கான ரிங்கிட்டைப் பயன்படுத்தி டோல் கட்டணம் இல்லாத சாலைகளை கட்டியிருக்கலாம். மின் கட்டணங்களும் குறைவாக இருக்கும்.

தண்ணீரிலும் அது போன்ற மோசடியான உடன்பாட்டை செய்து கொள்ள அம்னோ முயலுகிறது. அதன் வழி முறை இது தான்: அதிகமான விலைகளுக்கு திட்டங்களை அம்னோ சேவகர்களுக்கு கொடுப்பது. பின்னர் அதன் வழி மக்கள் வரிப்பணத்தை பில்லியன் கணக்கில் உறிஞ்சுவது.

அம்னோ முன்மொழிந்துள்ள எல்லா நீர் திட்டங்களும் அதிக விலையைக் கொண்டவை. அதனால் நீர் கட்டணம் நடப்பு மின் விலைகளைப் போலக் கூடுவது திண்ணம்

 

TAGS: