மெர்தேக்கா கொண்டாட்டங்கள் அனைத்து மலேசியர்களுக்கும் உரியது; அம்னோ புத்ராக்களுக்கு மட்டுமல்ல!

“ஒர் ஐக்கிய நாடாக, சொந்த உணர்வுடன் வெறுப்பை ஊட்டும் அரசியல் இல்லாத, உண்மையான, மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களைக் காண என் மனம் ஏங்குகிறது.”

ஜாலுர் கெமிலாங்’ இயக்கம் குறை கூறப்பட்டுள்ளது

விசுவாசமான மலேசியன்: அம்னோ புத்ராக்களுடைய 56 ஆண்டு கால ஆட்சி குறித்து நான் நியாயமான மதிப்பீட்டைச் செய்ய விரும்புகிறேன். அவர்கள் சில நல்ல காரியங்களையும்  செய்துள்ளனர்.

ஆனால் அந்த முன்னாள் சர்வாதிகாரியின் 22 ஆண்டு கால உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவுவது, ஊழல், நீதித் துறை சுதந்திரத்தை அழித்தது போன்ற தவறான ஆட்சியை நான் மறந்து விட்டதாகக் கருதக் கூடாது. 

2008ம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதிக்குப் பின்னர் அம்னோ புத்ராக்கள் மக்களுடைய எண்ணங்களைப் புரிந்து கொண்டுள்ளதாகவே தெரியவில்லை. அதனால் மாற்றத்தைச் செய்வதற்கான நேரம் வந்து  ட்டது.

நாம் மாற்றத்தைச் செய்ய முடியும். நாம் மாற்றத்தைச் செய்ய வேண்டும். அந்த மாற்றம் நியாயமான நீதியான ஜனநாயக, சிவில் சமூகத்துக்கு வழி வகுக்க வேண்டும்.

ஒடின்: சுதந்திர நாளையும் தேசிய நாளையும் குறிக்காமல் பிஎன் பற்றி பிரச்சாரம் செய்வதற்கு பொது நிதிகள் அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சில மணி நேரத்துக்கு முன்பு நான் ‘மக்களுக்கு முதலிடம், செயலாக்கம் இப்போது’ என்ற பிஎன் சுலோகத்திற்குப் பதில் அது பயன்படுத்த புதிய சுலோகத்தை உருவாக்கினேன்.

அது இது தான்: ‘எனக்கு முதலில் இப்போது பணம்’. இப்போதைய பிஎன் சுய பிரச்சாரத்திற்கு “வாக்குறுதிகள் காலியாக வழங்கப்படும்” என்பதைப் பயன்படுத்தலாம் என நான் யோசனை கூறுகிறேன்.

அரமகடோன்: பிரதமர் நஜிப் ரசாக் சொல்கிறார்: நாம் சுதந்தரமடைந்து 55 ஆண்டுகளாகி விட்டன. நமக்கு முன்பே சுதந்திரத்தை வாங்கிய பல நாடுகள் இன்னும் முன்னேறவில்லை.”

இரண்டாவது உலகப் போரின் போது சீரழிந்த ஜப்பானுடன் ஏன் நம் நாட்டை அவர் ஒப்பிடக் கூடாது. தென் கொரியாவுடனும் சிங்கப்பூருடனும் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கலாமே ?

இயற்கை வளங்கள் ஏதும் இல்லாத ஆண்டு முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஒர் ஆப்பிரிக்க நாட்டுடன் மலேசியாவை அவர் ஒப்பிடுகிறார் என நான் நினைக்கிறேன்.

டிமோத்தி: நான் கொடுத்துள்ளேன் என யாராவது கூறினால் நான் அதனை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே கம்போங் பாரு, குட்டி இந்தியா, சைனா டவுன், குட்டி சபா, குட்டி சரவாக் ஆகியவை உண்மையில் நாம் பெற்றுக் கொண்டவையா ?

ஆம். சில விஷயங்களைப் பெற்றோம். ஆனால் பல அம்சங்கள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டன.

அபாஸிர்: அன்றாடம் குழப்பமும் அழுக்குமே பிரிக்பீல்ட்ஸின் சாராம்சமாகும். அவை அம்னோ ‘சாதனைக்கும்’ ‘வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதற்கும்’ உண்மையான சான்றுகளாகும்.

பல வண்ணங்களையும் பொருத்தமில்லாத வளைவுகளையும் வைப்பதால் மட்டும் மாற்றம் வந்து விடாது.  அது பன்றிக்கு உதட்டுச் சாயம் தடவியதைப் போன்றதாகும்.

பிரிக்பீல்ட்ஸ் மக்கள் கடந்த பல ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கைத் தரம் மோசமடைந்து வருவதைக் கண்டுள்ளனர். MRCB போன்ற சொத்துக் கழுகுகள் மாயாஜாலமான மேம்பாட்டை தந்துள்ளன.

55 ஆண்டுகள் தொடர்ச்சியான சீரழிவுக்குப் பின்னர் பிரிபீல்ட்ஸ் சமூகத்தை அம்னோ புறக்கணித்ததற்கான அடையாளச் சின்னமாக இப்போது  திகழ்கின்றது.

அடையாளம் இல்லாதவன் #18452573: ஒற்றுமையாகத் தோற்றமளிக்கவும் ஒற்றுமையாக உடை அணியவும் பிஎன் -னுக்குத் தெரிந்துள்ளது.

ஆனால் பக்காத்தான் ராக்யாட்டில் அப்படி இல்லை. இசைவாக இல்லாத, ஒருங்கிணைக்கப்படாத தனிநபர்களாக அவர்கள் தென்படுகின்றனர்.

நல்ல பொது உறவுகள் மாற்றத்தைக் கொண்டு வரும். தாங்கள் நல்லதைச் செய்யவில்லை என்பது பிஎன் -னுக்கு தெரியும். ஆனால் மதில் மேல் பூனையாக இருப்பவர்களைக் கவரும் வழி அதற்கு தெரியும்.

எதிலும் வெற்றி பெறுவதற்கு உதவியாக ஒர் ஐக்கியக் குழுவாக பக்காத்தான் ராக்யாட் தோற்றமளிக்க வேண்டும். அதனை பக்காத்தான் இன்னும் புரிந்து கொள்ளாதது வெட்கமாக உள்ளது.

வேட்டைக்காரன்: இந்த நாட்டில் உள்ள நல்ல விஷயங்களுக்கு தாம் காரணம் என பிரதமர் கூறிக் கொள்கிறார். அதே வேளையில் சரியாக இல்லாத விஷயங்களுக்கு எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். ஆனால் எங்களை முட்டாளாக்க முடியாது. இனிமேல் நிச்சயம் முடியாது பிரதமர் அவர்களே.

 

TAGS: