வேதமூர்த்திக்கு கடப்பிதழ் வழங்கக் கோரி மெழுகுவர்த்தி மறியல்

-நா.கணேசன், தேசிய ஆலோசகர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜூலை 20, 2012.

ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்திக்கு அனைத்துலக கடப்பிதழை  வழங்க வேண்டும் என்று  ஹிண்ட்ராப் அமைப்பும் ஏனைய அரசு சாரா இயக்கங்களும், தனி மனிதர்களும் விடுத்த கோரிக்கைகளுக்கு மலேசிய அரசு பொறுப்பற்ற வகையில் செவி சாய்க்காமல் இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து மலேசிய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஜூலை 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி மறியல் நடத்தப்படும்.      

உடனடியாக வேதமூர்த்தியின் கடப்பிதழை அவரிடம் ஒப்படைத்து, அவர் நாடு திரும்பியதும், அரசு விரும்பும் எத்தகைய குற்றச்சாட்டையும் அவர் மீது சுமத்தி தமது வெளிப்படையான போக்கை மலேசிய அரசு வெளிப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் நிலையில் வேதமூர்த்தியின் வருகையை எதிர்க்கொள்ள மலேசிய அரசு  தயங்குவதாகவும், எக்காரணத்தைக்  கொண்டும் வேதமூர்த்தியை நாட்டுக்குள் அனுமதித்து விடக் கூடாது என்பதற்காகவே அவரின் கடப்பிதழை அவரிடம் ஒப்படைக்க மலேசிய அரசு மறுக்கிறது என்ற முடிவுக்கும்  மக்கள் வர  வேண்டி இருக்கும். 

மெழுகுவர்த்தி அமைதி மறியல் மேற்குறிப்பிட்ட வகையிலான அரசின் போக்கை மாற்ற வலியுறுத்தி இரவு 8 .00  மணிக்கு நடைபெறும். நீதிக்கு தலைவணங்கும்  அனைவரும்  இந்நிகழ்வில் தம் நண்பர்கள் மற்றும் குடும்ப  உறுப்பினர்களோடு  பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாநில வாரியான இந்நிகழ்வுகளின் விபரங்கள்:

கெடாடாத்தாரான் சுங்கை பட்டாணி012 429 2817                  012 444 2755
பினாங்கு       பாடாங் கோத்தா லாமா012 563 7614                  016 565 6917
பேராக்           ஈப்போ பாடாங்016 444 3716                  012 584 5181
சிலாங்கூர் சுங்கை மங்கீஸ், பந்திங் (சிவதுர்கையம்மன்   ஆலயம் அருகில்)016 354 5869
016 993 6268
நெகிரி செம்பிலான் டாத்தாரான் சிரம்பான்013 390 2872
019 692 9984
ஜொகூர்   ஸ்கூடாய்   மாரியம்மன் ஆலயம் எதிர்புறம்019 710 2895
016 717 8692
  

குடிமக்களின் நியாயப்பூர்வமான கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டிய முக்கியமான நேரம் இதுவாகும். தவறினால் அதன் தாக்கத்தை அரசுக்கெதிராக மக்கள் வெளிப்படுத்தும் நிர்ப்பந்தம் இன்னும் சில மாதங்களில் நிகழும்போது  ஆட்சியில் உள்ளவர்கள் வருந்த வேண்டியிருக்கும். 

வேதமூர்த்திக்கு அனைத்துலக கடப்பிதழை வழங்குமாறு ஒருமித்த குரலுடன் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி அரசுக்கு விடும் இறுதி வேண்டுகோளாக இந்த மெழுகுவர்த்தி அமைதி மறியல் அமையும் என்பதையும் நாங்கள் இங்கே மிக உறுதியுடன் வலியுறுத்துகிறோம்.

TAGS: