டாக்டர் மகாதீர் அவர்களே, நீங்கள் ஆதாரம் கேட்டீர்கள்- இதோ ஆதாரம்

இந்த சாதாரணக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல முடியுமா- நான் உட்பட மில்லியன் கணக்கான மலேசியர்கள் உங்களைக் கைவிட்டு விட்டார்கள் அது ஏன்?”

மகாதீர்: நான் ஏன் சர்வாதிகாரி என்பதைச் சொல்லுங்கள்

ராக்யாட் மலேசியா: நண்பர்களே அந்த மனிதரைக் கொடூரமாகக் காட்டுவதற்கு முடிந்ததைச் செய்யுங்கள். சர்வாதிகாரிகள் தங்கள் ஆட்சியை ஒரு போதும் கைவிட்டது இல்லை. ஒன்று அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் அல்லது மடிவார்கள். நண்பர்களே, அவர் சர்வாதிகாரி போல நடந்து கொண்ட சம்பவங்களை விவரமாகச் சொல்லுங்கள்.

குவிக்னோபாண்ட்: அது மிகவும் எளிதானது. நீதித் துறை, போலீஸ், ஊழல் தடுப்பு நிறுவனம், தேர்தல் ஆணையம், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், முக்கிய ஊடகங்களை பிஎன் குரலாக தரம் குறைத்தது, சட்டப்பூர்வ அவசர கால நிலையைத் தொடர்ந்தது, அரசியல் எதிரிகள் மீது இசா சட்டத்தைப் பயன்படுத்தியது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

மில்லியன் கணக்கான மக்களை நீங்கள் கொல்லவில்லை. அதனால் நீங்கள் சர்வாதிகாரி என அர்த்தம் கொள்ளக் கூடாது. நீங்கள் மறைமுகமாக சர்வாதிகார பாணியில் நடந்து கொண்டீர்கள்.

கலா: டாக்டர் மகாதீர் சர்வாதிகாரியா, தன்மூப்பாக நடந்து கொள்கின்றவரா ? பொருளாதார நிபுணரான டெரன்ஸ் கோமஸ் எழுதிய புத்தகத்திலிருந்து- “மலேசிய நாடு: இனவம்சாவளி, சமநிலை, சீர்திருத்தம்” ( The state of Malaysia: Ethnicity, equity and reform’) சில வரிகள்:

அவரது ஆட்சிக் காலத்தில் அரசாங்க அமைப்புக்களின் சுதந்திரம் சம்பந்தப்பட்ட பல உருமாற்றங்கள் நிகழ்ந்தன. அரசர் அமைப்பு முறை, நீதித் துறை, நாடாளுமன்றம் ஆகியவை நிர்வாகத்தை கண்காணிப்பதற்கான ஆற்றலை இழந்தன. அதே வேளையில் பொதுத் துறை, ஆயுதப் படைகள், போலீஸ் ஆகியவை அதிகாரங்கள் குவிந்து விட்ட பிரதமர் அலுவலகத்துக்கு வேலைக்காரர்களாக மாறின.

மகாதீர் அந்தப் பட்டியலில் இல்லை என்றால் அவரை வேறு எங்கு வைப்பது ?

பெர்ட் தான்: மற்ற சர்வாதிகாரிகளைப் பற்றி அவர் சொன்ன விஷயங்களிலிருந்து சிலவற்றை நான் ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன்.

1) தமது ஆட்சியில் ரத்தக் களறியும் இல்லை கொடுங்கோன்மையும் இல்லை

மெமாலி சம்பவம் நினைவில் உள்ளதா ? அது ரத்தக் களறி தானே ? கொடுங்கோன்மை இல்லை. இசா சட்டத்தின் கீழ் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அவர் மறந்து விட்டாரா ?

2) ஹொஸ்னி முபாராக் 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சேர்த்து விட்டார். தேர்தல்களை தமக்குச் சாதகமாகத் தில்லுமுல்லு செய்தார்.

உங்கள் புதல்வர்களுடைய பில்லியன் கணக்கான சொத்துக்கள் எங்கிருந்து வந்தன என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா ? பிஎன் -னுக்கு வாக்காளிப்பதற்காக சபா “அடையாளக் கார்டு திட்டத்தின்” கீழ் அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதை என்ன சொல்வது.

3) ‘பேச்சு, பத்திரிக்கை சுதந்திரம் இல்லை”

மலேசியாவில் அத்தகைய சுதந்திரம் உள்ளதா ?

4) முபாராக் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்கலாம். அமைச்சர்கள் எந்த நேரத்திலும் நீக்கப்படலாம்.

உங்களுக்கு அந்த மகத்தான அதிகாரம் இல்லை என்று சொல்கின்றீர்களா ? நீங்கள் அமைச்சர்களை மட்டும் நீக்கவில்லை. துணைப் பிரதமரைக் கூட நீக்கியுள்ளீர்கள். தேசியத் தலைமை நீதிபதி துன் சாலே அபாஸ் நீக்கப்பட்டதை என்னவென்று சொல்வது ?

நீங்கள் யாரையும் கொல்லவில்லை. ஆனால் உங்கள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாட்டின் தலைமை நிர்வாகி என்ற முறையில் உங்கள் பார்வையில் ஜெயிலில் அடிக்கப்பட்டார். அதுவும் மோசமானது தானே ?

ஸ்டார்ர்: எந்த ஒரு சர்வாதிகாரியும் தான் சர்வாதிகாரி என ஒப்புக் கொண்டதில்லை. மகாதீர் சர்வாதிகாரியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீண்ட காலத்துக்கு ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட தன்மூப்பான தலைவர் என நிச்சயம் சொல்லலாம்.

மகாதீர் பல முறை ஆட்சியை ஒப்படைப்பதைத் தள்ளிப் போட்டுள்ளார். தன்மூப்பான அவரது தலைமைத்துவத்தில் பொருத்தமான வாரிசுகள் உருவாக்கப்படாததே அதற்குக் காரணம். அவரது ஆட்சியில் நான்கு துணைப் பிரதமர்கள் இருந்துள்ளனர்.

1998ல் அவர் அன்வாரை நீக்கியது ஜனநாயகத்துக்குப் புறம்பானது. காரணம் அன்வார் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அம்னோ/பிஎன் துணைத் தலைவர் ஆவார். ஒய்வு பெற்ற பின்னரும் அவர் பிரதமர்களை தொடர்ந்து குறைகூறி வருவது அவரது தன்மூப்பான போக்கிற்கு தக்க சான்று ஆகும்.

பாட்டிமுயஸ்2020: சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருந்த போது அதிகாரத்துவ நோக்கங்களுக்கு தம்மை ‘இந்தியன்’ என அடையாளம் காட்டிக் கொண்ட ஆனால் இப்போது தம்மை மலாய்க்காரர் எனக் கூறிக் கொள்ளும் ஒரு ‘போக்கிரியை’ நீங்கள் நம்புவீர்களா என எனக்குச் சொல்லுங்கள்.

மகாதீரும் அவரது புதல்வர்களும் எப்படி இவ்வளவு செல்வத்தைச் சேர்த்தனர் என்பதைக் கண்டறிய பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட வேண்டும்.

அடையாளம் இல்லாதவன் #21828131: இந்த சாதாரணக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல முடியுமா- நான் உட்பட மில்லியன் கணக்கான மலேசியர்கள் உங்களைக் கைவிட்டு விட்டார்கள் அது ஏன் ?

அதற்கு எதிர்க்கட்சிகள் காரணம் அல்ல. மக்களைப் பிளவுபடுத்த நீங்கள் இன்று வரை முயன்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வயது 87 ஆகி விட்டது. இருந்தும் நீங்கள் இன்னும் திருந்துவதாகத் தெரியவில்லை. உங்கள் பேச்சுக்களில் வஞ்சனையும் தீய நோக்கமும் இன்னும் நிறைந்துள்ளன.

அந்த அரக்கனை நீங்களே உங்களுக்குள் உருவாக்கிக் கொண்டீர்கள். இதனை எழுதுமாறு யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. அவை  என் உள்ளத்திலிருந்து வந்தவை.

 

TAGS: