ஹிஷாமுடின்: பக்காத்தான் ‘ஊடுருவல்’ இன்னும் தேசிய மருட்டலாக மாறவில்லை

பக்காத்தான் ராக்யாட்டுக்குள் கம்யூனிஸ்ட், ஜெம்மா இஸ்லாமியா சித்தாந்தங்கள் ஊருருவியுள்ளதாகக் கூறப்படுவது நாட்டின் பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்தும் நிலையை எட்டவில்லை என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருக்கிறார்.

“இப்போதைக்கு எனக்குத் தகவல்கள் வந்துள்ளன என்று மட்டும் சொல்கிறேன். சித்தாந்தங்களைப் பொறுத்த வரையில் அவை எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருவியுள்ளது நமது நாட்டின் பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதிக்கவில்லை. ஆக்வே அதனை விட பெரிதாக எண்ண வேண்டாம்,” என ஹிஷாமுடின் இன்று பிற்பகல் கோலாலம்பூரில் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம்  கூறினார்.

அதற்கு முன்னதாக அவர் குற்றச் செயல்களை முறியடிப்பதில் அரசு சாரா அமைப்புக்களையும் இணைத்துக் கொள்வது பற்றி கோலாலம்பூர், புத்ராஜெயா போலீஸ் தலைவர்கள் அளித்த இரண்டு மணி நேர விளக்கத்தை செவிமடுத்தார்.

ஜேஐ எனப்படும் ஜெம்மா இஸ்லாமியா பயங்கரவாதிகளும் முன்னாள் கம்யூனிஸ்ட்களும் எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருவியிருப்பது போலீஸ் சிறப்புப் பிரிவு விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்றும் வரும் தேர்தலில் தாங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதற்கு அவர்கள் பெரு முயற்சி செய்து வருகின்றனர் என்றும் E2 (M) தேசிய சமூக தீவிரவாத மருட்டல் பிரிவுத் தலைவர் முகமட் சோபியான் முகமட் மாக்கினுதின் வியாழக்கிழமை வெளியிட்டார்.

அந்தக் கூற்றுக்கு போலீசாரிடம் ஆதாரம் ஏதும் உள்ளதா என வினவப்பட்ட போது ” அது தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டிருந்தால் அது வெறும் ஆதாரம் மட்டுமல்ல. நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். அது வெளிப்படையானதாகவும் திறந்த போக்குடையதாகவும் இருக்க வேண்டும்,” என்றார் ஹிஷாமுடின்.

“ஆனால் அது ஈடுபாடு சம்பந்தப்பட்ட எண்ணமாக இருந்தால் இந்தக் கட்டத்தில் அது தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலாக இருக்கவில்லை. அதனால் நான் கவலைப்படவில்லை.”

என்றாலும் ஊடுருவல் என போலீஸ் சிறப்புப் பிரிவு கூறியுள்ளதின் அர்த்தத்தை தாம் விவரமாக தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக ஹிஷாமுடின் மேலும் சொன்னார்.

“எந்த வகையான ஊடுருவலும் அது பக்காத்தான் தரப்பில் இருந்தாலும் தமது சொந்தக் கட்சியில் இருந்தாலும் அது தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்தினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.”

ஊடுருவல் என்னும் கருத்து ஒடுக்குமுறை நடவடிக்கைக்கு முன்னோடி அல்ல”

எதிர்க்கட்சிகள் மீது ஒடுக்குமுறையை அவிழ்த்து விடுவதற்கான சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு அந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுவதாக டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளதையும் உள்துறை அமைச்சர் மறுத்தார்.

“சிறப்புப் பிரிவு உண்மை நிலைகளை மட்டுமே எடுத்துரைத்தது. அது தேசியப்ப் பாதுகாப்பைப் பாதிக்கவில்லை என நான் கூறுவேன். அதனால் நாங்கள் அதனை மருட்டலாகப் பார்க்கவில்லை. ஆகவே என்ன அரசியல் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது ?

லிம் பழைய அரசியல் வடிவமைப்புக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாக அந்த மூத்த அரசியல்வாதியை ஹிஷாம் சாடினார்.

“அவர் சொல்வது உண்மை அல்ல. சில விஷயங்கள் முந்திய அரசியல் வடிவமைப்புக்குள் இருந்தன. ஆனால் இப்போது நிலைமை மாறுபட்டுள்ளது.”

“அவர் இளைஞராக இருந்த கால கட்டத்தில் அவர் இன்னும் இருந்து கொண்டிருக்க வேண்டும். உலகம் மாறி விட்டதை என்பதை நான் லிம்-முக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்,” என்றார் அவர்.

நேற்று அந்தக் குற்றச்சாட்டுக்கள் மீது பல பக்காத்தான் தலைவர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். பக்காத்தான் கூட்டணிக்குள் ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் கம்யூனிஸ்ட்களையும் ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்களையும் பெயர் குறிப்பிடுமாறு அவர்கள் உள்துறை அமைச்சுக்குச் சவால் விடுத்தனர்.

 

TAGS: