“மே13 மீண்டும் நிகழலாம் என்ற மறைமுக மருட்டல், தங்கள் விருப்பப்படி காரியங்கள் நடக்கவில்லை என்றால் அது மீண்டும் நடப்பதை ஊக்கப்படுத்துவதுபோல் உள்ளது.”
முகைதின் உண்மையிலேயே மே13-ஐத் தவிர்க்க விரும்புகிறாரா?
குரல்:மே13 துயரச் சம்பவம் 1969-இல் நடந்தது.40 ஆண்டுகளுக்கு முன்பு. அதன்பின் இந்த நான்கு தசாப்தங்களாக இனங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த அரசாங்கம் நிறைய செய்திருக்கிறது என்றும் இன ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும் மலேசியா முன்மாதிரி நாடு என்றும் பிஎன் ஓயாமல் கூறி வந்திருக்கிறது.
அப்படியிருக்க, இப்போது ஏன் மே13 மீண்டும் நிகழலாம் என்று அஞ்சுகிறார்கள்.இத்தனை ஆண்டுகளாக அரசாங்கம் கட்டிக்காத்து வந்த ஒற்றுமையில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா?
அந்தத் துயரச் சம்பவம் மீண்டும் நிகழாதென்று மக்கள் கவலையற்றிருக்கும்போது அரசாங்கத்துக்கு மட்டும் தேசிய ஒற்றுமையின்மீது நம்பிக்கை குறைந்தது ஏன்?
முந்திய தலைமுறை அதை மெதுமெதுவாக மறந்து விட்டது,இப்போதைய தலைமுறை அதைப் பற்றித் தெரிந்துகொள்வதில்கூட ஆர்வம் காட்டுவது இல்லை, அப்படியிருக்க அரசாங்கம் மட்டும் அந்த விவகாரம் பற்றித் திரும்பத் திரும்பப் பேசி வருவது ஏன்?
ஷானோன்: பிஎன் தேர்தலில் தோற்றால் இன்னொரு மே 13 நிகழும் என்று மலேசியர்களை எச்சரிப்பதைத் தயவு செய்து நிறுத்துங்கள்.
துணைப் பிரதமர் முகைதின் யாசின் அவர்களே, உங்கள் பேச்சு ஆபத்தானது.மலாய்க்காரர்கள் ஒன்றுசேர வேண்டும் என்கிறீர்கள்.ஏன், யாருக்கு எதிராக என்பதைத் தெளிவுபடுத்துகிறீர்களா?
அம்னோ பாருவில் நடப்பதை மலாய்க்காரர்கள் அறிவார்கள்.
திமோதி:அது இளம் வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.
43 ஆண்டுகளுக்குபின் மலேசியர்கள் இப்போது பக்குவப்பட்டு விட்டார்கள்.பெர்சே பேரணியில் செய்ததைப்போல் ஒருவருக்கு மற்றவர் பாதுகாப்பாக இருப்பார்கள்.
மே13 மீண்டும் நிகழாது.அமைதியை விரும்பும் மலேசியர்கள் அதற்கு இடம் தர மாட்டார்கள்.
கேஎஸ்என்:அம்னோ, பயந்து போய் கிடக்கிறது.ஆட்சியில் நிலைத்திருக்க என்ன செய்வது என்பது தெரியவில்லை.அதனால்தான் துணைப்பிரதமர் மே13 என பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறார்.
2காசுபெறுமதி: மே13 மீண்டும் நிகழலாம் என்ற மறைமுக மருட்டல், தங்கள் விருப்பப்படி காரியங்கள் நடக்கவில்லை என்றால் அது மீண்டும் நடப்பதை ஊக்கப்படுத்துவதுபோல் உள்ளது.தேசிய நல்லிணக்கச் சட்டம் கொண்டுவரப்பட்டது ஒரு நாடகம்தான் என்பதைத்தான் இது காண்பிக்கிறது.
சயோனாரா: பக்காத்தான் ரக்யாட்டில் பயங்கரவாதிகள், கம்முனிஸ்டுகளின் ஊடுருவல் என்று குற்றம் சாட்டினார்கள், மக்களிடையே பீதியை உண்டாக்க மே13 என்கிறார்கள்.
இது,பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றிபெற்றால் அவசரகாலம் பிரகடனம் செய்வதற்காக அவர்கள் போடும் சதித் திட்டம்.