சாட்சிகள் சந்திக்கப்படும்போது அன்வார் உடன் இருக்கலாம், நீதிமன்றம் தீர்ப்பு

சாட்சிகளைச் சந்தித்துப் பேசும்போது அன்வார் இப்ராகிமும் உடன் இருக்கலாம் ஆனால் அவர் சாட்சிகளைக் கேள்வி கேட்கக்கூடாது.

இன்று காலை அரசுத்தரப்பு, எதிர்த்தரப்பு வாதங்களைக் கேட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா இவ்வாறு தீர்ப்பளித்தார்.

நேற்று, முன்னாள் தேசிய போலிஸ்படைத் தலைவர் மூசா ஹசனுடனும் முன்னாள் மலாக்கா போலீஸ் தலைவர் முகம்மட் ரொட்வான் முகம்மட் யூசுபுடனும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளையில், சாட்சிகளைச் சந்திக்கும்போது அன்வார் அங்கிருப்பதற்கு அரசுத்தரப்பு  எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து இன்று எதிர்த்தரப்பு, கோலாலம்பூர் ஜாலான் டூட்டா நீதிமன்ற வளாகத்தில் 10 சாட்சிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அப்பட்டியலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், மூசா ஆகியோர் இடம்பெற்றிருக்கவில்லை.