பெர்சே தீர்ப்பு: உள்துறை அமைச்சருக்கு செம அடி!

உங்கள் கருத்து: “முக்கியமான விசயம் என்னவென்றால்,பெர்சே கெட்டதோ, தீமையானதோ அல்ல என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.”

பெர்சே ‘சட்டவிரோத’ அமைப்பல்ல, நீதிமன்றம் தீர்ப்பு 

ஸ்டார்: பெர்சேக்கு பாராட்டு! அத்தீர்ப்பு அரசாங்கம் சொல்வது செய்வது எல்லாமே நியாயமாகிவிடாது என்பதைக் காண்பிக்கிறது. நிர்வாகம் சீராக நடைபெற முறையான சரிபார்த்தலும் சரிக்கட்டலும் தேவை. அரசாங்கத்தின் மூன்று உறுப்புகளிடையேயும் அதிகார பிரிவினை இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

அரசாங்க உறுப்புகளிடையே இருந்த சமன்நிலை குலைந்துபோனதற்கு அம்னோ-பிஎன்னின் மகாதிரிசம்தான் காரணமாகும். பக்காத்தான் ரக்யாட், புதிய அரசாங்கத்தில் அந்தச் சமநிலையை நிலைநிறுத்தி இதர பல சீரமைப்புகளையும் செய்யும் என்று நம்புவோம்.

சிலாங்கூர் குடிமகன்: பெர்சேக்கு வாழ்த்துகள். செம அடி. உள்துறை அமைச்சர் டிஓகே (technical knockout-TKO) ஆகிவிட்டார்.இனி, 13வது பொதுத் தேர்தலில் கவனம் செலுத்தி மலேசியாவை  ‘பெர்சே(தூய்மை)’படுத்துங்கள்.தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படாது என்று எதிர்பார்ப்போம்.

சிந்தனையாளன்: கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால், அம்னோ மேல்முறையீடு செய்வது உறுதி.முறையீட்டு நீதிமன்றத்தில், பிறகு கூட்டரசு நீதிமன்றத்தில்.இறுதியில், அம்னோவின் விருப்பத்துக்கு ஏற்ப தீர்ப்பு தள்ளுபடி ஆகும்…..இதுதானே வழக்கமாய் நடப்பது.

அர்ச்சன்: உயர் நீதிமன்ற நீதிபதி ரொஹானா யூசுப் தீர்ப்புக்குச் சொன்ன காரணங்கள் நியாயமானவையாக தெரிகின்றன. ஆனால், மரமண்டை அமைச்சர்கள் அதை உணர்வார்களா?சட்டத்துறைத் தலைவர் தொடக்கத்திலேயே வழக்கு தொடுப்பதைத் தடுத்திருக்க வேண்டும்.

கோலோபிலா: எவ்வளவு நல்ல செய்தி. இனி, மஞ்சள் நிற பெர்சே டி-சட்டையைப் பெருமையுடன் அணிவேன். இதேபோல் பிஎன்னையும் தூக்கிப்போட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

எஸ்எஸ்ரவிச்சந்திரன்:நிதானமாக யோசித்துப் பாருங்கள்…..இது அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்வதுபோல் காண்பிக்கிறது.அதுதான் சந்தேகமாக இருக்கிறது.மலேசிய நீதித்துறை சொல்வதை முழுக்க நம்பிவிடக்கூடாது.

ஓடின்: இது நல்ல செய்தி.ஆனாலும், முழு நம்பிக்கை இல்லை.தீர்ப்புக்கு எதிராக நிச்சயமாக முறையீடு செய்வார்கள்.அதில் வெற்றிபெற என்ன திருகுதாளங்கள் செய்வார்களோ.

கீ துவான் சை: இது ஒரு ‘வாயாங் கூலிட்’டாக இருந்தாலும் பரவாயில்லை.முக்கியமான விசயம் என்னவென்றால்,பெர்சே கெட்டதோ, தீமையானதோ அல்ல என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அது சட்டவிரோத அமைப்பு என்ற உள்துறை அமைச்சரின் கூற்றில் “கறைபடிந்துள்ளது” என்று சொல்லப்பட்டது ஒரு போனஸ்.மைய நீரோட்ட ஊடகங்களை மட்டுமே படிக்கும் மக்கள் இதைப் படிப்பார்கள்.அப்படிப் படிக்கும் அவர்களை இது சிந்திக்க வைக்கும்.

பெயரிலி #18452573: இதிலிருந்து சில விசயங்கள் தெரிய வருகின்றன:

1) நீதித்துறையில் ரொஹானா யூசுப் போன்ற கறைபடியா நீதிபதிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

2)ஹிஷாமுடினும் அம்னோவும் மாற மாட்டார்கள்.

3.பெர்சேயில் எஸ்.அம்பிகா, ஏ,சமட் சைட், ஹரிஸ் இப்ராகிம்,மரியா சின் அப்துல்லா போன்ற நல்ல தலைவர்கள், துணிச்சலான தலைவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களின் துணையுடன் மலேசியாவைத் திரும்ப வென்று மலேசியர்களிடமே ஒப்படைக்க நம்மால் முடியும்.

மிஸ்டர் கேஜே ஜான்:அமைச்சர் ஒரு வழக்குரைஞர்.ஒருவேளை அவருக்கு பகுத்தறிவைவிட அரசியல் அறிவுதான் வேகமாக வேலை செய்கிறதுபோலும்.

பெயரிலி_rb345: பெர்சே சட்டவிரோதமானதல்ல என்றால் அதற்கு எதிரான அரசின் நடவடிக்கைதான் சட்டவிரோதமானது.அதனால், சட்டவிரோத நடவடிக்கை எடுத்ததாக அரசாங்கத்தின்மீதுதான் வழக்கு தொடுக்க வேண்டும்.

TAGS: