உங்கள் கருத்து: “வாக்குறுதி நிறைவேற்றம் என்பதில் ஊழல் எதிர்ப்பு,அதிகார-அத்துமீறல் இல்லாமை,இனவாதக் கொள்கை ஒழிப்பு ஆகியவையும் உள்ளிட்டிருக்க வேண்டும்.பிஎன் அவற்றை நிறைவேற்றியதா?”
மெர்டேகா தினக் கருப்பொருள் மாற்றத்துக்கு இணையத் தளத்தில் கோரிக்கை
ஸ்டார்:தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம், பிரதமர்துறை துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் ஆகியோரின் எதிர்வினைகள் அரசாங்கத்தையும் அம்னோ-பிஎன்னையும் வேறுபடுத்திப் பார்க்க அவர்களுக்குத் தெரியவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன.
‘வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன’ என்ற வாசகம் அம்னோ-பிஎன்னின் தேர்தல் பரப்புரையை உள்கருத்தாகக் கொண்டிருப்பது தெளிவு.
மேலும், ‘வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன’ என்பது குறித்து சாபா, சரவாக் மக்கள் சொல்வதற்கு நிறையவே இருக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இருக்கட்டும், கிழக்கில் உள்ள நம் சகோதரர்கள் சொல்வதைப் பார்த்தால் மலேசியா உருப்பெற அடிப்படையாக இருந்த மலேசியா ஒப்பந்தம்கூட மதிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.
பெயரிலி#18452573:மலேசியர்கள் 50-ஆண்டு அரிதுயிலிலிருந்து விழித்தெழ வேண்டும்.மலேசியாவைத் தன்னலத்துக்காக பயன்படுத்திக்கொண்டு ஆட்டம்போடும் அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.
ஒடின்: வாக்குறுதியை நிறைவேற்றுவது உலகமெங்கும் மதிக்கப்படும் ஒரு பண்புதான்.ஆனால், இங்கு அரசாங்கம் செய்யாத ஒன்றைத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறது,அதுதானே பிரச்னை.
ஒய்எப்:அம்னோ, மெர்டேகா தினத்தன்று தன்னை ஒரு கோமாளிபோல் காண்பித்துக்கொள்ள நினைத்தால் அப்படியே ஆகட்டும். 2012-இல் அம்னோ பரிதவிக்கும் நிலையில் இருந்தது. அதனால்தான் மெர்டேகா தினத்தைக்கூட தன் அரசியல் நலனுக்குப் பயன்படுத்திக்கொண்டது என்றுதான் வரலாறு கூறும்.
அது அம்னோவுக்குத்தான் தீராத வெட்கக்கேடு. எத்தனையோ பாசிசவாதிகள் மண்ணைக்கவ்விய கதையை வரலாறு கூறும்.ஆனால்,என்ன சொல்ல, வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் அறிவுதான் அம்னோவுக்குக் கிடையாதே.
ஜேஎம்சி:வாக்குறுதி நிறைவேற்றம் என்பதில் ஊழல் எதிர்ப்பு,அதிகார-அத்துமீறல் இல்லாமை,இனவாதக் கொள்கை ஒழிப்பு ஆகியவையும் உள்ளிட்டிருக்க வேண்டும்.பிஎன் அவற்றை நிறைவேற்றியதா?
பையுன்செங்: 1மலேசியா சுலோகம் உதவாமல் போய்விட்டது.இது மட்டும் என்ன, வாழவா போகிறது?
போலீஸ்: போலி பட்டங்கள் வாங்கியவர்களில் ’டான்ஸ்ரீகளும்’உண்டு
அனைவருக்கும்நியாயம்: போலிப் பட்டங்களை விலைகொடுத்து வாங்கிய அத்தனை பேரின் பெயர்களையும் போலீஸ் வெளியிட வேண்டும்.அத்துடன் ஒன்று, எதிர்த்தரப்பினர் பெயர்கள் இருந்தால் அவற்றை மட்டுமே வெளியிடுவது என்ற கொள்கை எல்லாம் வேண்டாம்.அனவரின் பெயர்களும் வெளியிடப்பட வேண்டும்.
டான்ஸ்ரீகள்,டத்தோக்கள் என்று சொல்லப்படும் சிலரின் அபத்தம் நிறைந்த பேச்சுக்களைக் கேட்டும்போதே தெரிகிறது அவர்கள் படித்தவர்களோ, பட்டம் பெறும் அளவுக்கு புத்திசாலிகளோ அல்லர் என்பது.
தம்மிகா: இது ஒன்றும் புதிதல்ல.வணிகர்கள், வியாபாரிகளில் பலரும்கூட முனைவர், முதுநிலை பட்டங்களை வாங்கி வைத்துள்ளனர்.
இதை ஆராய்ந்து அவர்கள் குற்றமிழைத்திருப்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பைப்பட்டம்: அரசாங்கமும் நிபுணர்கள் கழகங்களும் சேர்ந்து ஒரு பணிக் குழுவை அமைத்து முதுநிலை, முனைவர் பட்டங்கள் பெற்றிருப்போரை ஆராய வேண்டும்.போலிப் பட்டங்களை வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெறுத்துப்போனவன்: போலிப்பட்டங்களை விற்போருக்கு எதிராக மட்டும்தான் நடவடிக்கையா?டத்தோக்களில் பலர் பணம் கொடுத்து பட்டம் பெற்றது மலேசியர்கள் அறிந்த விசயம்தானே.
எல்லாவற்றுக்குமே ஒரு விலை உண்டு.
ஒரு பிள்ளை தந்தையிடம், எதற்காக படிக்க வேண்டும் அதுதான் காசு கொடுத்து பட்டத்தை வாங்கி விடலாமே என்று கூறினால்கூட வியப்பதற்கில்லை.
எஸ்கொங்: பேச்சு, பேச்சு, வெறும் பேச்சுத்தான். போலி அடையாளக் கார்ட் விற்கிறார்கள். போலி வாகனமோட்டும் லைசென்ஸ் விற்கிறார்கள். முதலில் இவர்களை எல்லாம் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுங்கள், ஐயா.
துறவி:போலி ஜனநாயகவாதியால் ஆளப்படும் உலகின் சிறந்த ஜனநாயகத்தில் பணம் இருந்தால் எதையும் வாங்கலாம்.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்கூட பணத்துக்காகக் கட்சி தாவுவார்கள்.இப்போது கட்சித்தாவலுக்கான விலை ரிம5மில்லியனுக்கு மேல் என்று தெரிகிறது.
டெலி: பட்டங்கள் போலியாக இருந்தால் என்ன? நாடு முழுக்க வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றனவே அதைவிடவா இது மோசமானது? இது, முக்கியமான விவகாரத்தைவிட்டு கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாக அல்லவா இருக்கிறது?