பிஎன் பங்காளிக் கட்சியான உப்கோவின் (UpKo) துவாரான் நாடாளுமன்ற உறுப்பினர் வில்ப்ரட் மோஜிலிப் பும்பூரிங் அவரது கட்சியான உப்கோவிலிருந்து விலகுவதன் மூலம் பிஎன்னிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். பக்கத்தானுக்கு உதவ அவர் உறுதியளித்தார்.
“நான் இதனை உப்கோவின் உச்சமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி தலைவர்கள் பலருடன் விவாதித்துள்ளேன். நாங்கள் பார்சாலினிலிருந்து விலகுகிறோம்”, என்று உப்கோவின் துணைத் தலைவரான அவர் துவரானில் கூறினார்.
“நான் இன்னும் உப்கோவுக்கு விசுவாசத்துடன் இருக்கிறேன். ஆனால், பாரிசானிலிருந்து விலகுகிறேன்”, என்றாரவர்.
கடந்த வாரம் எவ்விதமான குறிப்பிட்ட காரணமும் தெரிவிக்காமல் பாரிசான் நாடாளுமன்ற தொகுதித் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகினார்.
பாரிசான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், குறிப்பாக மாநிலத்தில் அதிகரித்து வரும் ஆவணங்களற்ற குடியேறிகளின் எண்ணிக்கையைக் கையாளுதல் மற்றும் பெட்ரோலிய உரிமைத் தொகை பிரச்னைகள், ஏற்பட்ட ஏமாற்றம் அவரை இம்முடிவுக்கு இட்டுச் சென்றது என்பதை அவர் இன்று வெளியிட்டார்.