இவ்வாண்டுக்கான மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்காக பக்காத்தான் மாற்று கருபொருளை நாளை வெளியிடும்.
“55 Tahun Janji Ditepati ( வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட 55 ஆண்டுகள்) என்னும் கருப்பொருளை மறு ஆய்வு செய்வதற்கு பக்காத்தான் வழங்கிய ஒரு வார காலக் கெடுவை அரசாங்கம் அலட்சியம் செய்து விட்டதால் அது மாற்று கருப்பொருளை வெளியிடுகிறது.
முன்மொழியப்பட்டுள்ள கிட்டத்தட்ட 250 யோசனைகளிலிருந்து அந்த மாற்ரு கருப்பொருளை தேர்வு செய்வதற்கு தேசிய இலக்கியவாதி ஏ சமாட் சைட் தலைமையில் ஒரு குழுவை பக்காத்தான் அமைத்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் இவ்வாண்டுக்கான மெர்தேக்கா தினக் கருப்பொருளையும் சின்னத்தையும் அரசாங்கம் வெளியிட்டது. அந்தக் கருப்பொருள் பிஎன் நடத்தி வருகின்ற ” Janji Ditepati ” பிரச்சார இயக்கத்தைப் போன்று இருப்பதால் பொது மக்கள் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.