எல்ஆர்டி வேலையை ஜார்ஜ் கெண்ட்-டுக்கு வழங்கிய துணிச்சல்

 “அது டெண்டர் முறை அல்ல. மாறாக அதிக விலை வெற்றி பெறும் ஏலமாகும். முழு டெண்டர் முறையையும் அது கேலிக்கூத்தாக்கியுள்ளது.”

ஜார்ஜ் கெண்ட்- லயன் பசிபிக் ஜேவிக்கு எல்ஆர்டி வேலை கிடைத்தது

பார்வையாளன்: இது தான் விஷயம். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ அரசாங்கம் திறந்த டெண்டரைக் கோருவதின் வழி அந்த மாபெரும் திட்டத்தை மேற்கொள்வதாக பொது மக்களை  எண்ணச் செய்து அவர்களை முட்டாளாக்குவதற்கு நடத்திய ‘சண்டிவாரா’வே (நாடகம்) அதுவாகும்.  

ஆனால் அந்தக் குத்தகை நஜிப் உத்தரவின் பேரில் தொழில்நுட்ப மதிப்பீட்டில் தோல்வி கண்ட ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிஎன் அரசாங்கத்தின் கீழ் திறந்த டெண்டர் முறைக்கும் பேச்சுக்கள் மூலம் செய்து கொள்ளப்படும் குத்தகைக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பது தெளிவாகி விட்டது.

நஜிப்புக்கும் அம்னோவுக்கும் சர்வ அதிகாரங்களும் உள்ளன. அவை தாங்கள் விரும்பும் யாருக்கும் எந்தக் குத்தகையையும் கொடுக்கலாம். தாங்கள் விரும்பும் எந்த அளவு பணத்தையும் அவர்கள் உறிஞ்சலாம்.

அனாக் ஜேபி: அது டெண்டர் முறை அல்ல. மாறாக அதிக விலை வெற்றி பெறும் ஏலமாகும். முழு டெண்டர் முறையையும் அது கேலிக்கூத்தாக்கியுள்ளது.

இந்த ஏற்பாடு ஒர் அலிபாபா முறையாகும். இதில் அலி (ஜார்ஜ் கெண்ட்) குத்தகையைப் பெற்றுள்ளது. அது அதனை பாபாவிடம் ( அந்தத் திட்டத்துக்கு டெண்டர் அனுப்பிய அந்நிய நிறுவனமாக இருக்க வேண்டும்) துணைக் குத்தகையாக ஒப்படைத்துள்ளது.

அதன் விலை உண்மையில் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். தரகுப் பணமும் கொடுக்கப்பட்டிருக்கலாம். இதில் ஊகங்களுக்கு இடமே இல்லை.

ஜெரார்ட் லூர்துசாமி: எதிர்பார்க்கப்பட்டது போல நஜிப்பின் சேவகர் நிறுவனம் ஒன்றுக்கு அந்தக் குத்தகை வழங்கப்பட்டுள்ளதை மறைக்க பெர்னாமா கதையை திரித்துள்ளது. பொருளாதார உருமாற்றத் திட்டம் வெறும் கேலிக் கூத்து என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

சேவகர் முறை அம்னோ பிஎன்-னில் ஆழமாக வேரூன்றி விட்டது. அது அவற்றுக்கு சமயமாகி விட்டது. 13வது பொதுத் தேர்தலில் அந்த ஆட்சி வீழ்த்தப்படாவிட்டால் நாடு நிச்சயம் தோல்வி காணும்.

போங்: ஒரு வழியாக இறுதியில் உண்மை வெளிச்சத்துக்கு வந்து விட்டது.

ஏசிஆர்: பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாகத் தோன்றுகிறது. தொழில்நுட்ப மதிப்பீட்டில் ஜார்ஜ் கெண்ட் தோல்வி கண்டுள்ளதுதான் அச்சத்தை தருகிறது.

முறைகேடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்கள் இருந்த போதிலும் அந்தக் குத்தகை வழங்கப்பட்டுள்ளது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் பிராசாரானாவின் துணிச்சல் நம்மைக் குழப்புகிறது.

நம்பாதவன்: “ஜேவி 100 விழுக்காடு உள்நாட்டினருக்குச் சொந்தமான நிறுவனங்களாகும்..”

அந்த 100 விழுக்காடு  உள்நாட்டினருக்குச் சொந்தமான நிறுவனங்கள் அம்னோவுக்கு சொந்தமானவையாக இருக்க வேண்டும் அல்லது பிஎன் நட்புறவு நிறுவனங்களாக இருக்க வேண்டும்.

அது நஜிப்பின் அகங்காரத்தைக் காட்டுகின்றது. நம்மை முட்டாளாக்குகிறார். ஏமாற்றுகிறார்.

உண்மை: 13வது பொதுத் தேர்தல் 2012ல் நடக்கப் போவதில்லை. 2013ல் தான் நடைபெறும்.

அவர்களுக்கு நாட்டைப் பற்றிக் கவலை இல்லை. சூறையாடுவது, சூறையாடுவதே அவர்கள் நோக்கம். தங்களை யாரும் தொட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். 13வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் அவர்கள் இருந்தால் நம்மை இறைவன் காப்பாற்றட்டும்.

மஞ்சள் பறவை: பொது மக்களுடைய எண்ணங்களை பிஎன் பொருட்படுத்துவதே இல்லை. தீர்வு:  நாமும் பிஎன் -னை அலட்சியம் செய்வோம். அதனை தேர்தலில் வீழ்த்துவோம்.

 

TAGS: