தகவல்களை வெளியிடுவோரைப் பாதுகாக்கவும் தயார் செய்யவும் ஒரு மய்யம் அமைக்கப்படும்

NFC என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்திய விவகாரத்தில் வங்கிச் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராபிஸி இஸ்மாயில், தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் பாதுகாப்பு வழங்கவும் மய்யம் ஒன்று அமைக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளார். தமது நிலையைப் போன்ற சூழலில் இருக்கின்றவர்களுக்கு உதவியாக அந்த மய்யம் அமைக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

தகவல்களை கொடுப்போருக்கான தேசிய மய்யம் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 30 தேதி தொடக்கி வைக்கப்படவிருக்கும் தகவலையும் ராபிஸி இன்று அறிவித்தார்.

தகவல்களை கொடுப்போர் எதிர்நோக்கும் வழக்குரைஞர் செலவுகளையும் அவர்களுடைய நலன்களையும் கவனிப்பதற்காக தகவல்களைக் கொடுப்போர் பாதுகாப்பு நிதி தோற்றுவிக்கப்படும் எனத் தெரிகிறது.

“அதிகமான மக்கள் தகவல்களை அம்பலப்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு நாங்கள் விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை நடத்துவோம். தகவல்களை அம்பலப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படும்.”old reporters today.