தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்கள் வேட்டையாடப்படுகின்றனர், குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்

“தகவல்களை அம்பலப் படுத்துகின்றவர்களுக்கு கைவிலங்குகள் மாட்டப்படுகின்றன. ஆனால் 250 மில்லியன் ரிங்கிட்டை உறிஞ்சிய உண்மையாக குற்றவாளிகளுக்கு அப்படி இல்லை. அதனை என்னவென்று சொல்வது?”

ராபிஸிக்கு எதிராக நஜிப் ‘பழி வாங்கும் படலம்’ என்கிறார் அன்வார்

ஜோஸி: 2010ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஊழல் நடைமுறைகளையும் மற்ற தவறான நடத்தைகளையும்  மக்கள்  அம்பலப்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக தகவல்களை கொடுப்போர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும் என அறிவித்தார்.

அவ்வாறு தகவல்களை சொல்கின்றவர்களை சிவில் அல்லது கிரிமினல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விலக்கு அளிப்பதே அந்தச் சட்டத்தின் நோக்கமாக இருக்கும் என நஜிப் அப்போது கூறினார்.

ஊழலைத் துடைத்தொழிப்பதற்கான தேசிய முக்கியத்துவம் கொண்ட பகுதிகளின் அமலாக்கத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதுவும் ஒன்றாகும்.

தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்கள் மீது வழக்குத் தொடுப்பது, உலக ஊழல் தடுப்புக் குறியீட்டில் மலேசியாவின் நிலையை மேலும் வீழ்ச்சி அடையச் செய்யும்.

மாற்றம்: இது நிச்சயமான பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலை பழி வாங்கும் படலம் தான். “நீங்கள் எனக்கு உதவுங்கள், நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்பது நஜிப்பின் புகழ் பெற்ற மந்திரமாகும்.

அதற்கு இணையான ஆனால் பகிரங்கமாக வெளியிடப்படாத இன்னொரு கோட்பாடு இது தான்: “நீங்கள் என்னைப் பிடித்தால் நான் உங்களைப் பிடிப்பேன்” என்பதாகும்.

தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்களுக்கு கைவிலங்குகள் மாட்டப்படுகின்றன. ஆனால் 250 மில்லியன் ரிங்கிட்டை உறிஞ்சிய உண்மையாக குற்றவாளிகளுக்கு அப்படி இல்லை. அதனை என்னவென்று சொல்வது ?

ஸ்விபெண்டர்: பழிவாங்கும் அரசியல் அம்னோவின் அடையாள முத்திரையாகும். பிஎன் கூட்டணிக்குள் கூட  அம்னோ பழி வாங்கும் அரசியலைப் பின்பற்றுகின்றது. மசீச, மஇகா, கெரக்கான் ஆகியவற்றில் எந்தக் கட்சியாவது அம்னோவை “காயப்படுத்த” முனைந்தால் அதனை சாடுவதையும் மருட்டுவதையும் அவமானப்படுத்துவதையும் நீங்கள் பார்க்க வேண்டும்.

பிஎன்-னுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை அம்னோ மருட்டும் முறையை நினைவுக் கொண்டு வாருங்கள். நீங்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களித்தால் உங்கள் தொகுதிக்கு எந்த வளர்ச்சி நிதியும் கிடைக்காது.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தமது அப்போதைய துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிமை எப்படி மருட்டினார் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும். ஆகவே நஜிப் ராபிஸி மீது தொடங்கியுள்ள ‘பழி வாங்கும் படலம்’ புதிதல்ல.

நாசி லெமாக்: ராபிஸி தனிப்பட்ட நிதித் தகவல்களைப் பெற்று அதனை ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் வெளியிட்டார் என்பதே உண்மை நிலை. ஆகவே அவர் பாபியா என வங்கி நிதி நிறுவனச் சட்டத்தை மீறியுள்ளார்.

அதற்கும் நஜிப்புக்கும் அல்லது என்எப்சி-க்கும்  (தேசிய விலங்குக் கூட நிறுவனம்) எந்தத் தொடர்பும் இல்லை.  வங்கித் தகவல்களை பொது மக்களுக்கு வெளியிட்டதே அதில் சம்பந்தப்பட்டுள்ள விஷயமாகும். அது தவறானது. எனவே ராபிஸி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அன்வார் நஜிப் மீது பழி போடக் கூடாது. ராபிஸி தவறு செய்துள்ளது. அதன் அடிப்படையில் அவர் விசாரிக்கப்பட வேண்டும்.

குழப்பம் இல்லாதவன்: தவறுகள் அம்பலப்படுத்தப்படுவதை தடுப்பதின் மூலம் அரசாங்கம் ஊழலுக்குத் துணை போவது  தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்கள் வேட்டையாடப்படுகின்றனர், குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இது பிஎன் அரசாங்கத்திற்கு சாவு மணியாக இருக்கும்.

அடையாளம் இல்லாதவன் #63753867: நாணய மாற்று வணிகர்கள் வழியாக மந்திரி புசார் ஒருவர் 10மில்லியன் ரிங்கிட்டை நாட்டிலிருந்து வெளியே கொண்டு சென்றதாக வெளிவந்த செய்தி ஒன்றை நான் நினைவு கூருகிறேன். பாங்க் நெகாரா மலேசியாவுக்கு அது தெரியும் என நான் எண்ணுகிறேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் ?

I

TAGS: