மாட் சாபு மீது கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்டது

தாசெக் குளுகோரில் ஆகஸ்ட் 21 இல் நடந்த ஒரு செராமாவில் 1950 ஆம் ஆண்டு புக்கிட் கெப்போங்கில் நடந்த ஒரு சம்பவத்தின் அதிகாரத்துவ நிலைப்பாட்டின் மீது கேள்வி எழுப்பியதற்காக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு மீது பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்றுகாலையில் கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்டது.

முகமட் சாபு குற்றவியல் தொகுப்புச் சட்டம் செக்சன் 500 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு எதிரான முதன்மைக் குற்றச்சாட்டு அவர் தங்களையும் தங்களுடைய குடும்பத்தினரையும் தற்காக்காத்து போராடியபோது கொல்லப்பட்ட போலீஸ் படை உறுப்பினர்களை அவமதித்தது; மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர்கள், இது மாற்றுக் குற்றச்சாட்டு.  இவர்கள் முகமட் சாபுவுக்கு  எதிராக போலீஸ் புகார்கள் செய்தவர்கள்.

இவ்வழக்கு அக்டோபர் 27 இல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் விசாரணை டிசம்பர் 5 லிருந்து 9 வரையில் நடைபெறும் என்றும் நீதிபதி இக்மால் ஹிசான் முகமட் தஜுடின் அறிவித்தார்.

ரிம15,000 பிணையாக நிர்ணயிக்கப்பட்டது

அரசு தரப்பை ஹனாபியா ஸக்காரியா, இஷாக் முகமட் யுசுப் மற்றும் சுஹைமி இப்ராகிம் ஆகியோரும் மாட் சாபுவை ஹைன்பா இஸ் மைடினும் பிரதிநிதித்தனர்.

பிணையை ரிம50,000 ஆக நிர்ணயிக்குமாறு முகம்மட் ஹனாபியா நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். ஆனால், ஹனிபா குறைத்தபட்ச பிணையான ரிம15,000 ஐ விதிக்குமாறு கோரினார். தமது கட்சிக்காரர் தேவைப்படும்போது நீதிமன்றத்துக்கு வருவார் என்று அவர் கூறினார்.

ஹனிபாவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரிம15,000 ஐ பிணையாக நிர்ணையித்தார்.

இந்த வழக்கு வரலாறு குறித்து கருத்துக் கூறுவது பற்றியதாகும். அது கலந்துரையாடல் மற்றும் விவாதத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டுமே தவிர நீதிமன்றத்தின் வழியல்ல என்று கருத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டபோது மாட் சாபு கூறினார்.

“இருப்பினும், இது நீதிமன்றத்திற்கு வந்துள்ளதால், நாம் அதனை எதிர்கொள்ள வேண்டியுள்ளது”, என்றாரவர்.

TAGS: