அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஆதாரச் சட்டத் திருத்தங்களை எதிர்க்கும் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களை உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா ஒன்று சேர்க்கவிருக்கிறார்.
ஆதாரச் சட்டம் (திருத்தம்) ( எண் 2) குறித்து தமது அதிருப்தியை தெரிவித்துள்ள வேளையில் அவரது அடுத்த நடவடிக்கை என்ன என்று வழக்குரைஞர் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு சைபுதின் பதில் அளித்தார். முன்னதாக அவர் அந்தக் கருத்தரங்கில் பேசினார்.
“முதலில் நான் கேஜே-யை அழைப்பேன் (ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதின் அபு பாக்கார்) நாங்கள் மீண்டும் குற்றம் செய்வதில் பங்காளிகள் என அறிவிப்பேன். கேஜே மற்றும் என்னைப் போன்று புரிந்துணர்வும் அனுதாபமும் கொண்டுள்ள சில பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் அறிவேன்.”
“நாம் அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும் என நமது எஜமானர்களுக்கு நாம் தெளிவாகவும் உரத்த குரலிலும் செய்தியை அனுப்ப வேண்டும் என நான் நினைக்கிறேன்.”
“அது அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டு விட்டது என எனக்குத் தெரியும். ஆனால் கடந்த காலத்தில் நாம் திருத்தம் செய்யப்பட்டது மீண்டும் திருத்தப்பட்டுள்ளது,” என சைபுதின் தமது பதிலில் சொன்னார்.
“அந்தத் திருத்தத்தை ரத்துச் செய்வது பொது மக்களுக்கு நல்லது என வலியுறுத்திய அவர், அந்தத் திருத்தம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உருமாற்றத் திட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள ‘இடையூறு’ என வருணித்தார்.