ஆர்சிஐ (அரச விசாரணை ஆணையம்) இந்த முறை மாற்றத்தைக் கொண்டு வருமா ?

“13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆர்சிஐ முடிவுகள் தயாராகுமா ? ஆர்சிஐ பரிந்துரைகள் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்பட முடியுமா?”

சபா ஆர்சிஐ தலைவராக முன்னாள் போர்னியோ தலைமை நீதிபதி நியமனம்

கானான் எம்சக்தி:  மலேசியாவில் ஆர்சிஐ என்பது பல் இல்லாத புலிக்குச் சமமாகும். அது விசாரித்து அறிக்கைகளை மட்டுமே சமர்பிக்கும். எந்த நடவடிக்கையும் இருக்காது. தவறு செய்கின்றவர்கள் மீது வழக்குப் போடும் அதிகாரம் இன்னும் சட்டத்துறைத் தலைவர், பிரதமர் ஆகியோரிடம் மட்டுமே இருக்கும்.

ஆகவே அது மாற்றத்தைக் கொண்டு வருமா ? விகே லிங்கம், தியோ பெங் ஹாக் விஷயங்களில் ஆர்சிஐ தோல்வி கண்டுள்ளதை நாம் கண்கூடாகக் கண்டுள்ளோம். எனக்கு நம்பிக்கை இல்லை. அது மக்கள் பணத்தை விரயம் செய்வதாகும். சிறந்த மலேசியாவுக்காக குற்றவாளிகளை அகற்றி மாற்றத்தைக் கொண்டு வருவோம்.

ஐ வாட்ச்: இரண்டு பிஎன் எம்பி-க்கள் தங்கள் எஜமானருக்கு எதிராகப் போன பின்னரே அடையாளக் காடு திட்டம் மீதான ஆர்சிஐ கடமைகள் பற்றி அறிவிக்கப்பட்டன. ஆகவே ஆர்சிஐ முடிவுகள் தெரியும் வரையில் பொதுத் தேர்தல் நடத்தப்படக் கூடாது.

வெறும் பேச்சு: லிங்கம் விஷயத்தில் ஆர்சிஐ பரிந்துரை செய்த அறுவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே ஆர்சிஐ-யினால் என்ன பயன் ?  ‘என்னைப் போன்று இருக்கிறார், என்னைப் போன்று பேசுகிறார், ஆனால் அது நான் அல்ல’ ஊழல் ? தியோ பெங் ஹாக் விஷயத்தில் ஆர்சிஐ முடிவுகள் என்னவாயின ?

முட்டாள் மலேசியர்களை எளிதாக நம்ப வைத்து விட முடியும் என்பதையே இது காட்டுகின்றது.

பெர்ட் தான்: ஆர்சிஐ தனது பணியை விவேகமாகவும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் செய்யுமானால் திறந்த விசாரணையின் நோக்கம் அடையப்பட்டு விட்டதாகவே கருதப்பட வேண்டும்.

துரோகம் செய்த அந்தக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படா விட்டாலும் (குற்றவாளிகளை ஆணையம் அடையாளம் காண்கிறது என்ற எண்ணத்தில்) அவர்களை வெட்கப்பட வைப்பதற்கு அது போதுமானது.

நாட்டை மீண்டும் விற்பது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க அது முக்கியமாகும். அந்த நாட்டுத் துரோக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான தலைவர்களையும் உண்மையான காரணங்களையும் துணிச்சலாக எந்த விதமான விருப்பு வெறுப்புமின்றி உண்மையிலேயே ஆர்சிஐ அடையாளம் காண்பது முக்கியப் பணியாக இருக்க வேண்டும். தண்டிப்பதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

மலேசியர்கள்: அந்த ஆர்சிஐ உறுப்பினர்கள் தங்கள் பணியை செய்ய முடியுமா ? இது பிஎன் அரசியல் உயிர் வாழ்வுக்காக நடத்தப்படும் நாடகமா ? 13வது பொதுத் தேர்தல் முடியும் வரை காலத்தைக் கடத்துவது அதன் நோக்கமா ?

அமோக்கர்: ஸ்டீவ் சிம் லிங்கம் வழக்கில் நீங்கள் நேரத்தை விரயம் செய்தீர்கள். அப்போது யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை. உண்மையைக் கண்டு பிடிக்க நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள் என எண்ணுகின்றீர்களா ?

பாபிலோன்: அது அம்னோ/பிஎன் -னுக்கு உதவாது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எண்ணுகிறார். ஆகவே ஆர்சிஐ-ஐ அமைப்பதில் எந்த நன்மையும் இல்லை என அவர் சொல்கிறார்.

இந்த நாட்டின் குடிமக்களைப் பற்றி என்ன சொல்வது ? அவர்கள் உண்மையை அறிய விரும்புகின்றனர். அது உங்களுக்கு பயனுடையதா இல்லையா என்பது முக்கியமல்ல. அவர் சொல்வது எல்லாம் அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டவை.

அடையாளம் இல்லாதவன்#59817899: சபா மக்களை ஏமாற்றுவதற்கு நடத்தப்படும் இன்னொரு நாடகமே அது. 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆர்சிஐ முடிவுகள் தயாராகுமா ? ஆர்சிஐ பரிந்துரைகள் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்பட முடியுமா ? இல்லை, இல்லை, இல்லை ஆகவே அது மிகவும் தாமதமாக வந்துள்ளது.

ஜீன் பியாரே: சிலாங்கூரில் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் மீது ஆர்சிஐ அமைக்கப்படுவது பற்றி யோசிக்க வேண்டும். கிள்ளானிலும் கோலா சிலாங்கூரிலும் பல இந்தோனிசியர்கள் அடையாளக் கார்டுகளுடன் உள்ளனர்.

90ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் என் சகோதரி தாம்பாக் ஜாவா-வில் ஒரு பள்ளிக்கூடத்தில் போதித்துக் கொண்டிருந்தார். அங்குள்ள மாணவர்களில் 90 விழுக்காட்டினருக்கு மலேசியப் பிறப்புச் சான்றிதழ் கிடையாது. அவர்கள் சிவப்பு அடையாளக் கார்டுகளை வைத்துள்ள இந்தோனிசியர்களுக்குப் பிறந்தவர்கள். அவர்களுக்கு இப்போது நிச்சயம் மை கார்டுகள் கிடைத்திருக்கும்.

 

TAGS: