ஹிண்ட்ராப் அரசியலில் இறங்காது என்கிறார் வேதா

வெளிநாட்டிலிருந்து அண்மையில் தான் திரும்பியுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி- தமது மூத்த சகோதரரைப் பின்பற்றி அரசியலில் இறங்கக் கூடும் என்ற ஊகங்களை தொடர்ந்து மறுத்து வருகிறார்.

முன்னாள் இசா கைதியும் இந்து உரிமைப் போராட்ட வழக்குரைஞருமான பி உதயகுமார்- ஹிண்ட்ராப்பின் அரசியல் பிரிவான மனித உரிமைக் கட்சியின் இடைக்காலத் தலைமைச் செயலாளர் ஆவார்.

13வது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் அதில் வேட்பாளராக- சுயேச்சையாக போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக என வினவப்பட்ட போது வேதமூர்த்தி உறுதியாக ‘இல்லை’ என்றார்.

“நான் ஏன் போட்டியிட வேண்டும் ? நான் இப்போதைய நிலையில் என்னுடைய வேலையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் நல்ல குழுவைப் பெற்றுள்ளேன். அந்தக் களத்துக்குள் இழுக்கப்படுவதைக் காண நான் விரும்பவில்லை,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

நாடு கடந்து வாழ்ந்த பின்னர் தாயகம் திரும்பியுள்ள அவரை வரவேற்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் அவரை மலேசியாகினி சந்தித்தது.

பினாங்கில் நேற்றிரவு அவர் Perkampungan Juru-வில் 500 ஆதரவாளர்களிடம் பேசினார்.

எதிர்வரும் தேர்தல்களில் ஹிண்ட்ராப் பங்கு குறித்தும் வேதமூர்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர், அது அந்த இயக்கத்திடமிருந்து பக்காத்தான் ராக்யாட் என்ன விரும்புகிறது என்பதைச் சார்ந்துள்ளது என்றார்.

அவர் அதனை மேலும் விவரிக்கவில்லை. என்றாலும் ஹிண்ட்ராப்பின் அரசியல் ஆதரவு பற்றி விளக்குமாறு – அது பிஎன் -னுக்கா அல்லது பக்காத்தானுக்கா என வினவப்பட்ட போது அவர் “நாங்கள் எப்போது பாரிசானை ஆதரித்தோம் ?” என உடனடியாகப் பதில் அளித்தார்.

“நான் இப்போது தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ‘நம்பிக்கை’ பற்றிப் பேசினேன். 50 ஆண்டுகள் முடிந்து விட்டன, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் முதலில் நம்பிக்கை கொடுத்தனர். இப்போது பிஎன் அரசாங்கமும் அதனையே செய்ய விரும்புகிறது,” என்றார் வேதமூர்த்தி.

“நஜிப் நகைச்சுவையாகப் பேசுகிறார். நம்பிக்கை போதும். போதும். ஏழை இந்தியர்களுடைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை அறிய நாங்கள் விரும்புகிறோம்.”

உரையாற்றுவதற்காக அந்த பலநோக்கு மண்டபத்தை இரவு மணி 8.30க்குச் சென்றடைந்த வேதமூர்த்திக்கு ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் ஒரு வீரருக்கான வரவேற்பை அளித்தார்கள்.

ஹிண்ட்ராப் ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்கும்

அந்த ஹிண்ட்ராப் தலைவர் நாடு கடந்து பிரிட்டனில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார்- தாம் நாடு கடந்துவாழ்வதை அரசாங்கம் தம் மீது திணித்ததாக அவர் சொன்னார்- ஹிண்ட்ராப்பின் எதிர்காலம் பற்றி  தமது ஆதரவாளர்களுக்கு விளக்குவதற்காக அவர் நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடைபெற்ற அந்த நிகழ்வில் ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என் கணேசனும் கலந்து கொண்டார். மண்டபத்துக்கு வெளியில் போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்த போதிலும் அந்த நிகழ்வு தங்கு தடையின்றி நடைபெற்றது.

தமது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்றும் வேதமூர்த்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு “நாம் ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்க வேண்டும்,” என்றார் அவர்.

“பலர் பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.அது எனக்குப் புரிகிறது. ஆனால் நாம் மனித உரிமைகளுக்காக அதுவும் குரல் இல்லாத மக்களுக்காக குறிப்பாக மலேசிய இந்தியர்களுக்காக போராடுகிறோம்.”

“ஏழை இந்தியர்களுடைய பிரச்னைகளை தான் எவ்வாறு தீர்க்கப் போகிறோம் என்பதை அரசாங்கக்  எங்களுக்குச் சொல்ல வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் வேதமூர்த்தி.

 

TAGS: