கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் பிஎன் -னுக்கே அதிகம் பாதகமானது

சபாவில் 1990களில் சபா சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறாமல் இருந்திருந்தால் ஜோசப் பைரின் கிட்டிங்கான முழு தவணைக் காலத்துக்கும் பதவி வகித்திருப்பார்.”

‘பெரும்புள்ளிகளின் கட்சித் தாவல் என எதிர்க்கட்சிகள் அள்ளி விடுவதாக கைரி சொல்கிறார்

போடே: அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அவர்களே உங்களுக்கு அரசியல் எதிர்காலம் வேண்டுமானால் நீங்கள் கட்சி மாறி விடுவதே நல்லது. உங்கள் அறிவாற்றலையும் பேச்சுத் திறனையும் கருத்தில் கொண்டால் உங்களை வரவேற்க பல கட்சிகள் தயாராக இருக்கும்.

ஆனால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம். அம்னோ/பிஎன் கப்பல் வெகு வேகமாக மூழ்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில காலமே எஞ்சியுள்ளது. ஆகவே கட்சி மாறுங்கள் கைரி அவர்களே !

ஹாங் பாயூப்: பெரும்புள்ளிகளின் கட்சித் தாவல் என எதிர்க்கட்சிகள் அள்ளி விடுவதாக கைரி சொல்கிறார். சிறிய புள்ளி சிந்தனையாளர்கள் அம்னோவின் தனித்தன்மை என மக்கள் கூறுகின்றனர்.

டிம்ஸ் டைம்: தனியார் துறையில் உங்களுக்கு பெரிய பதவியைக் கொடுப்பது என்பது உங்களுக்குப் பிரியாவிடை கொடுப்பதற்கு ஒப்பாகும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் நீங்களும் கட்சி மாறி விட வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலில் நீங்கள் உங்கள் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டாலும் உங்களுக்கு எந்த அரசாங்கப் பதவியும் கிடைக்கப் போவதில்லை.

பிஎன் -னுக்கு இத்தனை ஆண்டுகளாக உங்கள் வாழ்க்கையையும் விசுவாசத்தையும் அர்ப்பணித்து வந்துள்ள உங்களுக்கு என்ன கிடைத்தது ? ஒரு வேளை அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் தலைவர் பதவி கிடைக்கலாம். ஆனால் அமைச்சர் அல்லது துணை அமைச்சர் பதவியோ நிச்சயமாக இல்லை.

வெறுப்படைந்தவன்: நீங்கள் சொல்வது சரியே. நாடாளுமன்றம் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை ‘இயற்ற’வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதற்கு முன்னர்  தங்கள் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்பதை அது கட்டாயமாக்கும்.

அத்தகைய சட்டங்கள் அவசியம் என டாக்டர் மகாதீர் முகமட் காலத்தில் டிஏபி-யும் பாஸ் கட்சியும் வலியுறுத்தி வந்தன. ஆனால் பிஎன் அத்தகைய சட்டத்தை விரும்பவே இல்லை.

மிக அண்மையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பேராக் மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றிய போது பக்காத்தான் ராக்யாட் அத்தகைய சட்டத்தை நாடியது. ஆனால் பிஎன் மீண்டும் மறுத்தது.

ஆகவே அத்தகைய சட்டம் அமலாக்கப்பட வேண்டும் எனக் கோரி இப்போது அபத்தமாகப் பேச வேண்டாம். அதனை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்மொழியுங்கள். அதனை பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள்.

அடையாளம் இல்லாதவன்_4115: கைரி அவர்களே தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதற்கு முன்னர் தங்கள் இடங்களைக் காலி செய்ய வேண்டும் எனக் கூறும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நீங்கள் முதலில் யோசனை கூறுங்கள். அந்தச் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருந்தால் பேராக் இன்னும் பக்காத்தான் ஆட்சியில் இருக்கும்.

ஆனால் அந்தச் சட்டம் பிஎன் -னுக்குப் பாதகமாக இருக்கும். எனவே அது எப்படி அந்தச் சட்டத்தை நிறைவேற்றும் ?. 

990களில் சபா சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறாமல் இருந்திருந்தால் ஜோசப் பைரின் கிட்டிங்கான முழு தவணைக் காலத்துக்கும் பதவி வகித்திருப்பார்.

அந்தச் சட்டத்தைக் கொண்டு வருவது பற்றி முதலில் பிஎன் -னிடமும் அம்னோவிடமும் பேசுங்கள். ஆனால் அவை உங்களுக்குச் செவி சாய்க்குமா ?

 

TAGS: