பாட்மிண்டன் ரசிகர்கள் பஞ்ச்-க்கு பிரியாவிடை கூறுகின்றனர்

“மலேசியா இன்று பாட்மிண்டன் வீரரையும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவரையும் மலேசியர்கள் இழந்துள்ளனர்.”

புகழ்பெற்ற பாட்மிண்டன் வீரர் பஞ்ச் குணாளன் காலமானார்

அபாஸிர்: பஞ்ச் குணாளான் மாறுபட்ட கால கட்டத்தையும் மாறுபட்ட வகுப்பையும் சார்ந்தவர்.  நெகாரா அரங்கத்தில் அவரது ஆட்டத் திறனை கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் கண்ட பின்னர் பாட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் தூண்டுகோலாகத் திகழ்ந்தார்.

இங் பூன் பீ -யுடன் இணைந்து அவர் விளையாடிய போட்டிகள் இன்றளவும் பேசப்படுகின்ற கதைகளாகும். பாட்மிண்டன் திடலுக்கு உள்ளும் புறமும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

மலேசியா இன்று பாட்மிண்டன் வீரரையும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திழ்ந்தவரையும் மலேசியர்கள் இழந்துள்ளனர்.

கெட்டிக்கார வாக்காளர்: பஞ்ச் தமக்கு இணையான முன்னாள் இந்தோனிசிய பாட்மிண்டன் வீரர் ருடி ஹர்த்தோனோ குர்னியாவான் போன்றவர்களுடன் மோதிய ஆட்டங்களை நாம் அனைவரும் இன்றும் நினைவில் வைத்துள்ளோம். அவை நமது நாட்டை ஒன்றாக வைத்திருந்தன. அவரது மறைவு நமக்கு நிச்சயம் பேரிழப்பாகும். அவர் கட்டிய உறுதி, கடமை, தேசிய உணர்வு ஆகிய பண்புகளை நமது அரசியல்வாதிகள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

சுவர் கண்ணாடி: பாட்மிண்டன் உலகம் அவரால் பெருமை அடைந்தது. அவர் நாட்டுக்காக அனைத்தையும் செய்தார். அவரைப் போன்றவர்களை நாம் அவர்கள் மறையும் போது தான் நினைவு கூருவது நமக்கு அவமானமாகும். நாடு அவருக்கு பிரியாவிடை கூறுகிறது.

பல இனம்: இது உண்மையில் சோகமான நாள் ஆகும். இந்த நாட்டில் பாட்மிண்டனுக்கு பஞ்ச் நிறையப் பங்காற்றியுள்ளார். அவர் நாட்டுக்குப் பல முறை பெருமையைத் தேடித் தந்துள்ளார். அவரது பாசத்துக்குரியவர்களுக்கு எங்கள் அனுதாபங்கள். பஞ்ச் ஆன்மா அமைதி அடையட்டும்.

கேஎஸ்என்: அந்த உண்மையான மலேசிய வீரருக்கு கௌரவத்தையும் அவரது குடும்பத்தாருக்கு வெகுமதியையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது அரசாங்கமும் வழங்குவதற்காக நாம் காத்திருப்போம்.

மலாயாமூடா: தங்களை மலேசியர்கள் என சொல்லிக் கொள்வதில் மலேசியர்களை பெருமை  கொள்ளச் செய்த மலேசியர் அவர். மிக்க நன்றி பஞ்சாட்சரம் குணாளன்.

செயிண்ட்: அவர் இந்தியராக ஒரு போதும் இருந்தது இல்லை. உண்மையான மலேசியர் அவர். அவரது பெருமை நிலைத்திருக்கட்டும்.

அடையாளம் இல்லாதவன்#07854536: பஞ்ச் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். சிறந்த விளையாட்டு வீரராக உங்களை மலேசியா என்றும் நினைவில் வைத்திருக்கும்.

வெறுப்படைந்தவன்: பஞ்ச் குடும்பத்துக்கு அனுதாபங்கள். பணமும் பரிசுகளும் தண்ணீரைப் போன்று வழங்கப்படும் இன்றைய கால கட்டத்தை போல் இல்லாமல் இருந்த அந்த கால கட்டத்தில் அவர் நாட்டுக்கு சுய நலமின்றி சேவை செய்துள்ளார்.

 

TAGS: