“நிரபராதி என நிரூபிக்கப்படாவிட்டால் குற்றவாளி எனக் கருதுவது, எப்படி பயங்கரவாதத்தையும் இணையக் குற்றங்களையும் முறியடிக்கும்? நாங்கள் முட்டாள்கள் அல்ல. ஆகவே எங்கள் அறிவாற்றலை அவமானப்படுத்த வேண்டாம்.”
114 ஏ-யை அமைச்சரவை மறு செய்யப் போவதில்லை
தோலு: சட்டத்தில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு சட்டத்திற்கு தவறாக விளக்கம் தருவதாக அமைச்சரவை கூறிக்கொள்கின்ற “குறை கூறுகின்றவர்கள்” சட்டத் தொழிலில் நன்கு அனுபவமும் தேர்ச்சியும் பெற்றவர்கள் என்பதை மறக்கக் கூடாது.
அந்த சட்ட நிபுணர்கள் நீதிமன்றங்களில் சட்டங்களுக்கு விளக்கம் கொடுக்கின்றனர். குறை கூறுகின்றவர்கள் சட்டத்துக்கு தவறான விளக்கத்தை கொடுத்திருந்தால் நீதித் துறையும் சட்டத்துக்கு தவறான விளக்கத்தை அளிக்க முடியும்.
இசா சட்டமும் மற்ற தடுப்புச் சட்டங்களும் நீக்கப்பட்டுள்ளதால் பயங்கரவாதத்தையும் இணையக் குற்றங்களையும் முறியடிப்பதற்காக 114 ஏ தேவைப்படுகிறது எனவும் அமைச்சரவை சொல்கிறது. அதாவது அந்தச் சட்டங்களை மட்டுமே தான் கைவிட்டுள்ளதையும் அதனை ஆதாரச் சட்டத் திருத்தம் மூலம் அவற்றை மீண்டும் கொண்டு வந்துள்ளதையும் அமைச்சரவை ஒப்புக் கொள்கிறது.
சில விஷயங்களில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வெளிப்படையாக மீறியுள்ள துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மீண்டும் அவ்வாறு செய்துள்ளார். நஜிப் பிரதமராக மலேசியாவுக்கு திரும்பப் போகிறாரா அல்லது முஹைடின் வகுத்துள்ள பாதையை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்தப்படப் போகிறாரா? புரட்சி முயற்சி மேற்கொள்ளப்படுமா? எது எப்படி இருந்தாலும் பிஎன் அஸ்தமனம் திண்ணம்.
ஸ்லம்டாக்: முஹைடின் அடுத்த பிரதமராக வரும் பொருட்டு நஜிப்பை கீழறுப்புச் செய்வதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிகிறது. அது ஊரறிந்த ரகசியமும் ஆகும்.
பொதுத் தேர்தலுக்கான அரசியல் வியூகங்களில் ஒன்றாக நஜிப்புக்கு முஹைடின் அவ்வப்போது ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலைகளையும் முரண்பாடுகளையும் பிகேஆர் பெரிதுபடுத்த வேண்டும்.
அடுத்து அவர்கள் ஒருவரை ஒருவர் எப்படி பாதுகாத்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பதை நாம் பார்க்க முடியும். தங்களுக்கு இடையில் எல்லாம் நன்றாக இருப்பதாக அவர்கள் பாசாங்கு செய்வர்.
ஒடின்: நஜிப் கருத்துக்களுக்கு முரண்பட்டு அவருக்கு இக்கட்டான சூழ்நிலையை முஹைடின் ஏற்படுத்தியுள்ளது இது முதன் முறை அல்ல. ஒரே மலேசியா கோட்பாடு அறிவிக்கப்பட்ட பின்னர் “நான் முதலில் மலாய்க்காரன், இரண்டாவதாக மலேசியன்” என அவர் சொன்னதை நாம் இன்னும் மறக்கவில்லை.
இதனை நீதி நிலை நிறுத்தப்படுகின்றது என வேறு விதமாகக் கூடச் சொல்லலாம். முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானை இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் முதுகில் குத்தினார். இப்போது முஹைடின் அவரது புதல்வருக்கு அதனைச் செய்கிறார்.
கேகன்: நிரபராதி என நிரூபிக்கப்படாவிட்டால் குற்றவாளி எனக் கருதுவது எப்படி பயங்கரவாதத்தையும் இணையக் குற்றங்களையும் முறியடிக்கும் ? நாங்கள் முட்டாள்கள் அல்ல. ஆகவே எங்கள் அறிவாற்றலை அவமானப்படுத்த வேண்டாம்.
லிம் சொங் லியோங்: சட்டம் எப்படிப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதும் வார்த்தைகள் காரணமாக அது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதும் இரண்டு வெவ்வேறான விஷயங்கள்.
இசா சட்டமும் அவசர காலச் சட்டமும் அரசியல் எதிரிகளை தடுத்து வைக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல. பயங்கரவாதிகளை தடுத்து வைப்பதே அதன் குறிக்கோள். அவை தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றியே நாங்கள் கவலைப்படுகிறோம். அது எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய ஆங்கிலத்தில்தான் உள்ளது.
வெறுப்படைந்தவன்: பிரச்னைகளை உருவாக்கி விட்டு அவற்றைத் தீர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு பின்வாங்குவது தானே நஜிப்-பிஎன் தந்திரம். மக்கள் விருப்பத்துக்கு செவி சாய்ப்பதாகச் சொல்லி புகழ் மாலை சூட்டிக் கொள்வதே அதன் நோக்கம்.
ஐ கூல்: மக்கள் கோருவதை பிஎன் ஏற்றுக் கொள்ளாவிட்டால் மக்கள் அரசாங்க மாற்றத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
பேச்சுச் சுதந்திரத்துக்கு எதிராக சட்டம் இயற்றுவது நியாயமற்றது. ஒடுக்குமுறையானது. 114 ஏ ஆளும் அரசாங்கத்துக்கு முடிவைக் கொண்டு வரும். 13வது பொதுத் தேர்தலில் என்ன செய்வது என்பது வாக்காளர்களுக்குத் தெரியும். அதுதான் ABU (அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை).
கவனத்தில் கொள்ளுங்கள்: ‘114’ என்றால் கண்டனீஸ் மொழியில் ‘tiap tiap hari mati’ (அன்றாடம் மரணம்) என அர்த்தம். பிஎன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வீரா: குறை கூறுகின்றவர்களையும் எதிர்க்கட்சியினரையும் மௌனமாக்குவது இசா சட்டத்தின் நோக்கமே அல்ல. ஆனால் அது தவறாக பயன்படுத்தப்பட்டது.
ஆகவே இசா சட்டமும் மற்ற தடுப்புச் சட்டங்களும் நீக்கப்பட்டுள்ளதால் பயங்கரவாதத்தையும் இணையக் குற்றங்களையும் முறியடிப்பதற்காக 114 ஏ தேவைப்படுகிறது எனச் சொல்வதைத் தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்டால் ஆதாரச் சட்டத்தை மறு ஆய்வு செய்வற்கு அம்னோ/பிஎன் ஆதரவு வழங்கும் என நான் உறுதியாகச் சொல்ல முடியும்.