நஷாருடின் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பில்லை

கிளந்தான் பாஸ் எதிர்வரும் தேர்தலில் பாச்சோக் எம்பி நஷாருடின் மாட் ஈசாவை ஒரு வேட்பாளர்காகக் களம் இறக்கப்போவதில்லை.

நஷாருடினைக் களமிறக்க வேண்டாம் என்று பாச்சோக் பாஸ் ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக கிளந்தான் பாஸ் துணை ஆணையர் முகம்மட் அமர் நிக் கூறினார் என பெரித்தா ஹரியான் செய்தியொன்று தெரிவிக்கிறது.

“வேட்பாளர் பட்டியலில் நஷாருடின் பெயர் இல்லை.

“அவர் பிரதமருடன் சேர்ந்து மெக்கா செல்வதற்குமுன்பே அவருக்குப் பதில் வேறொருவரை நிறுத்த வேண்டும் என அவரது தொகுதி வாக்காளர்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது”.

அவரது தொகுதியில் களமிறக்க சில வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள் என்றும் கிளந்தான் மந்திரி புசாரும், மாநில பாஸ் தலைவருமான நிக் அப்துல் அசீஸ் நிக் மாட் இறுதி முடிவைச் செய்வார் என்றும் அமர் கூறினார்.

முன்னாள் பாஸ் துணைத் தலைவரான நஷாருடின் மெக்கா சென்றிருந்தபோது அவர் பிரதமர் பக்கத்தில் அமர்ந்திருப்பதைக் காண்பிக்கும் படமொன்று அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவில் வெளியாகி இருந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

அதைவிட அவர் மெக்காவில் அளித்திருந்த நேர்காணல்தான் பாஸ் உறுப்பினர்களுக்குச் சினமூட்டியது. அந்நேர்காணலில் அவர், ஹூடுட் சட்டத்தை டிஏபி எதிர்ப்பதால் பக்காத்தான் ரக்யாட்டிலிருந்து பாஸ் வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

TAGS: