“கர்பால் சிங்-கிற்கு எதிராக முஸ்லிம்களை தூண்டி விட்டு அதன் வழி டிஏபி-யையும் பக்காத்தானையும் அவர்கள் நிராகரிக்கச் செய்யும் அம்னோ திட்டத்தை நசாருதின் நிறைவேற்றி வருகிறார்.”‘
உங்களை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என நசாருதின் கர்பாலுக்கு பதில்
ஜெரர்ட் லூர்துசாமி: ஹுடுட்டை எதிர்ப்பது இஸ்லாத்தை எதிர்ப்பது என அர்த்தம் கொண்டால் முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா முதலில் ஹுடுட் அமலாக்கத்தை அங்கீகரிக்காத அம்னோ உட்பட பிஎன் உறுப்புக் கட்சிகளையே சாட வேண்டும்.
டிஏபி இஸ்லாத்துக்கு எதிரானது என சித்தரித்து அம்னோ/பிஎன் -னை ஆதரிக்குமாறு மலாய்க்காரர்களைக் குழப்புவதற்கு நசாருதின் சமயத்தை ஒர் ஆயுதமாகப் பயன்படுத்துவதின் மூலம் அரசியல் விளையாட்டை நடத்துகிறார்.
உண்மையில் முஸ்லிம் அல்லாதாருக்கும் ஹுடுட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை ஏற்பதோ நிராகரிப்பதோ அவர்களைப் பொறுத்தது.
கூட்டரசு அரசமைப்பு இஸ்லாமிய நாடு என்னும் நிலையில் பேசவில்லை. இஸ்லாம் அதிகாரத்துவ சமயம் என்று மட்டுமே அது சொல்கிறது. ஷாரியா சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது என வரையறுக்கப்ப்பட்டுள்ளது. என்றாலும் அவர்கள் இன்னும் சிவில் சட்டங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஹுடுட் பற்றிக் குறிப்பிடப்படவே இல்லை.
அம்னோ ஹுடுட்-டுக்கு சாதகமாக இருக்க வேண்டுமானால் அது வெளிப்படையாக அதனை அங்கீகரிக்க வேண்டும். சமயவாதிகள் பின்னால் மறைந்து கொள்ளக் கூடாது.
நீலகிரி: கிளந்தான் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதை டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் இயங்கிய கூட்டரசு அரசாங்கம் தடுத்து விட்டது. ஆனால் இப்போது ஹுடுட்-டை அமலாக்க அம்னோவுடன் இணையுமாறு அவர் பாஸ் கட்சிக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
ஹுடுட் காரணமாக பாஸ் அம்னோவுடன் ஒரு போதும் இணையக் கூடாது. பாஸ் கட்சியை பக்காத்தானிலிருந்து பிரிப்பதே அம்னோ நோக்கம். ஹுடுட்-டை அமலாக்குவது அல்ல.
அது உண்மையிலேயே இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமலாக்க விரும்பியிருந்தால் கிளந்தானை அது தடுத்திருக்காது.
ஒடின்: ஹுடுட்-டை ஏற்றுக் கொள்ளாத ஒருவரை இஸ்லாத்துக்கு எதிரானவர் எனச் சொல்வது நியாயமாகப்படவில்லை. நான் ஹுடுட்-டை ஏற்கவில்லை. ஆனால் நான் இஸ்லாத்துக்கு எதிரானவன் அல்ல. உண்மையில் நான் எந்த சமயத்தையும் நிராகரிக்கவில்லை.
ஹுடுட் பண்டைக்காலச் சட்டம் என்பதால் நான் அதனை நிராகரிக்கிறேன். அது வரையறுத்துள்ள தண்டனைகள் ஏழாம் நூற்றாண்டுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். இப்போது அல்ல.
பல இனம்: இந்த விவகாரம் இஸ்லாம் சம்பந்தப்பட்டதோ அல்லது இஸ்லாத்தை நசாருதின் தற்காப்பதோ அல்ல. கர்பால் சிங்-கிற்கு எதிராக முஸ்லிம்களை தூண்டி விடும் அம்னோ திட்டத்தை நசாருதின் நிறைவேற்றி வருகிறார். இந்த விஷயத்தில் கர்பால் இஸ்லாத்துக்கு எதிரி என குற்றம் சாட்டுவதின் வழி அந்த டிஏபி மனிதருக்கு ஆத்திரத்தை மூட்டி அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா மீது அல்லது தமக்கு எதிராக அவர் வழக்குத் தொடருமாறு செய்வதே நசாருதின் நோக்கம்.
அவ்வாறு செய்வதின் மூலம் கர்பால் மீது முஸ்லிம்களை சினம் கொள்ளச் செய்ய முடியும் என அவர்கள் நம்புகின்றனர். கர்பால் டிஏபியைப் பிரதிநிதிப்பதாலும் டிஏபி பக்காத்தானில் ஒரு பகுதி என்பதாலும் கர்பால், டிஏபி, பக்காத்தான் மீது முஸ்லிம்கள் ஆத்திரம் கொள்ள வழி ஏற்படும் என அவர்கள் எண்னுகின்றனர்.
அவர்கள் உண்மையில் இஸ்லாத்தைத் தற்காக்கின்றனரா அல்லது அரசியல் விளையாடுகின்றனரா ? அவர்கள் இஸ்லாத்தை பாதுக்காக்க விரும்புகின்றனரா அல்லது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றனரா என்பதை நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.
அதற்குப் பதில் உங்களுக்குத் தெரியும். தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக இந்த நாட்டை அத்தகைய தலைவர்கள் பிளவுபடுத்த அனுமதிக்காதீர்கள். என்னை நம்புங்கள். உங்கள் நலனில் அவர்களுக்கு அக்கறையே இல்லை.
உயிர் பிழைத்தவன்: கர்பால் அவர்களே, நசாருதின் நடத்தும் போராட்டத்தின் அடிப்படையை நினைவில் கொள்ளுங்கள். அவரை முற்றாகப் புறக்கணிப்பதே சிறந்த வழி.
அதே தந்திரத்தை மகாதீரும் பின்பற்றுகிறார். நீங்கள் பரந்த அனுபவசாலி. அது ஒரு வலை என்பது உங்களுக்குத் தெரியும்.
தமக்குப் பின்னால் ஆயிரம் பேர் கொண்ட இராணுவம் நிற்பதைப் போல நசாருதின் தொடர்ந்து மார் தட்டிக் கொண்டுதான் இருப்பார். நீங்கள் அவருடன் மோதினால் நீங்கள் முற்றுகைக்கு இலக்காகலாம். அதில் நசாருதின் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நிறைய ஆதாயமடைய முடியும்.
அனோன்xyz: மசீச இஸ்லாத்துக்கு எதிரானது ஏன் குற்றம் சாட்டப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனெனில் அது அம்னோ முடிவு செய்வதை அப்படியே பின்பற்றுகின்றது.