“இரண்டு கட்சி முறையை ஏற்படுத்துவது தான் சிறந்த வழி என வாக்காளர்கள் நம்புகின்றனர். அந்த முறை மக்களுக்கு மாற்று அரசாங்கத்தை வழங்கக் கூடிய வலுவான எதிர்த்தரப்பை உருவாக்கும்.”
மாற்று அமைப்புக்கள் எப்படி இருந்தாலும் பிஎன் போக வேண்டும்
பிளைண்ட் பிராடோ: மலேசியர்கள் உண்மையை மறைக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் பக்காத்தான் ராக்யாட் ஒரு தோல்வி என மெய்பிக்கப்பட்டுள்ளதை உணர வேண்டும்.
டிஏபி வழி நடத்தும் பினாங்கைத் தவிர மற்ற பக்காத்தான் மாநிலங்கள் பணித் திறன் குறைவால் சிரமப்படுகின்றன. தாங்கள் வெளியிடும் சொந்த வழி காட்டிகளையே பின்பற்ற முடியாமல் அவை தடுமாறுகின்றன. முடிவுகளை எடுக்கும் போது அகங்காரம் தலைதூக்குகிறது.
விரிவான கொள்கை அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும் நிழல் அமைச்சுக்களை அமைப்பதற்கும் நம்பிக்கையான வேட்பாளர் பட்டியலை வழங்கவும் அவற்றுக்கு நிறைய அவகாசம் இருந்தது. ஆனால் அவை ஒன்றும் செய்யவில்லை. பிஎன் பற்றி குறை கூறுவதே அவற்றின் வேலையாக இருந்தது. வாக்குகளைக் கவருவதற்காக அவ்வப்போது சில வியூகங்களைச் செயல்படுத்தின.
அவற்றுக்குச் சிந்திக்க நேரமில்லை. அவை அதிகாரத்தை மட்டுமே நாடியதால் மற்ற விஷயங்களைப் பொருட்படுத்தவே இல்லை.
பீரங்கி: பிளைண்ட் பிராடோ, அம்னோ/பிஎன் கீழ் நாடு என்ற முறையில் நமக்கு எதிர்காலம் இல்லை என்பதை மலேசியர்கள் நம்பத் தொடங்கி விட்டனர். அம்னோ கட்டுப்பாடு இல்லாத போக்கிரிக் கட்சி. பிஎன், சட்டப்பூர்வ தகுதியைப் பெறுவதற்கு அம்னோ காட்டும் முகமாகும். அம்னோ ஏகாதிபத்தியமே நம்மை சீரழித்து வருகிறது. நாட்டை பாதாளத்துக்குக் கொண்டு செல்கிறது.
அந்த ஆட்சியுடன் நாம் தொடர்ந்து சென்றால் நமக்கு எதுவும் கிடைக்காது. இரண்டு கட்சி முறையை ஏற்படுத்துவது தான் சிறந்த வழி என வாக்காளர்கள் நம்புகின்றனர். அந்த முறை மக்களுக்கு மாற்று அரசாங்கத்தை வழங்கக் கூடிய வலுவான எதிர்த்தரப்பை உருவாக்கும்.
இரண்டு கட்சி முறையை நம் நாட்டில் உருவாக்குவதற்கு நல்ல வாய்ப்பை பக்காத்தான் வழங்கியுள்ளது. அம்னோவுக்கு ஈடு கொடுக்க வலுவான குடிமக்கள் ஜனநாயகமும் நாடாளுமன்ற முறையும் நமக்குத் தேவை.
1970ம் ஆண்டுகளில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட போது அம்னோவை விரட்ட முடியும் என மக்கள் எண்ண முடியாத நிலை இருந்தது. அதே வேளையில் அம்னோ இந்த அளவுக்கு கட்டுப்பாடு இல்லாமல் போகும் என யாரும் எண்ணவில்லை.
போத்தலிலிருந்து வெளியில் வந்த தேவதை இப்போது பெரிய அரக்கனாக மாறி விட்டது. சோமாலிய கடற்கொள்ளைக்காரர்களை விட மோசமாக பேராசை பிடித்த கொள்ளைக்காரனாக அந்தக் கட்சி இப்போது காணப்படுகின்றது. காரணம் முழு அரசாங்க எந்திரமும் அதன் வசம். அதனால் அது யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
அம்னோ ‘ஜமீன்தார்கள்’ நமது பொருளாதாரத்தை ‘சுத்தம்’ செய்து ‘கபளீகரம்’ செய்வதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
மலேசியக் குடிமக்கள் ஆட்சியுரிமையை மீண்டும் பெற வேண்டும். அதனை அன்றைய அரசாங்கத்திடம் ஒப்படைக்கக் கூடாது. அரசாங்கம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கு தனது ஆற்றலை மெய்பிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்த்த வேண்டும்.
பிஎன் -னாக இருந்தாலும் பக்காத்தானாக இருந்தாலும் நாம் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் நம்மை கட்டுப்படுத்த விடக் கூடாது. நாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வெளியில் வந்து வாக்களித்து விட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் உறங்கப் போகக் கூடாது. அவ்வாறு செய்வது அரசியல்வாதிகளைத் தங்கள் விருப்பம் போல் இயங்குவதற்கு அனுமதித்ததாகி விடும்.
அரக்கர்களை உருவாக்கியதற்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். மாறுபட்ட விளைவுகளைக் கொண்டு வர வேண்டுமானால் நாம் வேறு விதமாக நடந்து கொள்ள வேண்டும்.
லெலிஸ்டாய் !: பக்காத்தான் நிலைமை குழப்பமாக இருக்கப் போகிறது என்பதே என்னுடைய கருத்தாகும். பிஎன் பொதுவான எதிரி என்பதைத் தவிர அதனிடம் ஒருமித்த கருத்துக்கள் இல்லை.
பக்காத்தானுக்குள் நிறைய பூசல்கள் உள்ளன. அவை எந்த நேரத்திலும் வெடிக்கலாம். இரண்டு பேய்களுக்கும் இடையில் பிஎன் -னைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். பக்காத்தான் குறித்து ஒரளவு மட்டுமே நமக்குத் தெரியும்.
பக்காத்தான் முழுமையானது அல்ல எனத் தெரிந்த போதிலும் பக்காத்தானுக்கு வாக்களிக்கவே நான் விரும்புகிறேன்.
உண்மையானவன்: ஒருவர் என்றென்றும் ஆட்சி செய்ய முடியாது. ஒர் ஆரோக்கியமான ஜனநாயகம் மாற்றத்தை ஆதரிக்க வேண்டும்.
அடையாளம் இல்லாதவன்_4031: ஒரு நாட்டை 55 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சி ஆளுவது மிகவும் நீண்ட காலமாகும்.
ஜனநாயக நாடுகளில் ஒரு கட்சி திறமையைக் காட்டத் தவறினால் அது தூக்கி எறியப்பட்டு இன்னொரு கட்சி ஆட்சியில் அமர்த்தப்படுகின்றது. அதுவும் தோல்வி கண்டால் மூன்றாவது கட்சி கொண்டு வரப்படுகிறது.
பீட்டர் பார்க்கர்: பக்காத்தான் பிஎன் -னிலிருந்து மாறுபடவில்லை எனச் சொல்கின்றவர்கள் உண்மையில் பொய் உரைக்கின்றனர் அல்லது முற்றிலும் பார்வையற்றவர்கள்.
2008க்குப் பின்னர் சிலாங்கூர் பக்காத்தான் திறமையை மதிப்பீடு செய்யும் போது தயவு செய்து உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். சிலாங்கூர் பிஎன் ஆட்சியில் இருந்ததைக் காட்டிலும் 50 விழுக்காடு சிறப்பாக உள்ளது என நீங்கள் சொல்லா விட்டாலும் 10 விழுக்காடாவது சிறப்பாக உள்ளது எனக் கூற முடியாதா ?
விளையட வேண்டாம்: அவர்களுக்கு யார் ஏகபோக அதிகாரத்தை கொடுத்தது ? அதே மக்கள் இப்போதுஎழுச்சி பெற்று அவர்களுக்கு வெளியே போகும் வழியைக் காட்டுகின்றனர். நமது சிறிய அண்டை நாட்டைப் பாருங்கள்.
அது இப்போது உலகில் மிகவும் பணக்கார நாடு ஆகும். அதற்கும் நமக்கும் இடையில் ஒரே ஒரு பாலம் தான் உள்ளது. நமக்கு வெட்கமாக இல்லை ?