‘நாம் ஒரே பிசாசுடன் தொடர்ந்து வாழ்வது கஷ்டம்’

நாம் ஒரே பிசாசுடன் தொடர்ந்து வாழ்ந்தால் நாம் அதை விட குறைந்த இயல்புகளைக் கொண்ட பிசாசுகளுடன் அல்லது ஒரு தேவதையுடன் வாழ்வதற்கு வாய்ப்பு கிடைக்காமலேயே போய் விடும்.”

மகாதீர்: அன்வாரும் ஒபாமாவைப் போன்று கெட்டவரே

மலேசிய இனம்: அன்புள்ள டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே, எங்களுக்குத் தெரிந்த பேயைப் பற்றி நாங்கள் ஏற்கனவே போதுமான அளவுக்குத் தெரிந்து வைத்துள்ளது உங்களுக்குத் தெரியாதா ?

அதை விட மோசமான பேய் இனிமேல் இருக்கவே முடியாது. அதுவும் பல தவணைகளுக்கு அதனை நம்பி விட்டோம். வாக்காளர் என்ற முறையில் ஒரு முறையாவது எங்கள் உரிமையைப் பயன்படுத்தி தேர்வு செய்வோம்.

நாம் ஒரே பிசாசுடன் தொடர்ந்து வாழ்ந்தால் நாம் அதை விட குறைந்த இயல்புகளைக் கொண்ட பிசாசுகளுடன் அல்லது ஒரு தேவதையுடன் வாழ்வதற்கு வாய்ப்பு கிடைக்காமலேயே போய் விடும்.

காஸ்காரா: மலேசிய வாக்காளர்களே மகாதீருடைய செய்தி உங்களுக்கு புரிகிறதா ? பிசாசுகளை நம்புங்கள். தேவதைகளை நம்ப வேண்டாம் என அவர் உங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேவ் ஆனந்த் பிள்ளை: துன் (மகாதீர்) அவர்களே, நாங்கள் ஏற்கனவே பல முறை இதனைச் செவிமடுத்து விட்டோம்.

ஊழல், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவுவது, அதிகார அத்துமீறல் ஆகிய அனைத்தையும் நீங்கள் சகித்துக் கொண்டீர்கள். அத்துடன் அவை வளருவதற்கும் நீங்கள் அனுமதித்து விட்டீர்கள்.

ஆகவே உங்கள் வார்த்தைகளைக் கேட்டு எங்களுக்கு சலித்து விட்டது. எங்களுக்குச் சீர்திருத்தம் தேவை.

ஹெல்லர்: நீங்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாய்ப்புக் கொடுக்கா விட்டால் அது எப்படி தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். ஆகவே 13வது பொதுத் தேர்தலில் அதனைத் தேர்வு செய்வோம். அது தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றுகிறதா என்பதைப் பார்ப்போம்.

தங்களுக்கு ஏதும் ஒதுக்கீடுகள் கிடைக்காத நிலையில் அம்னோ/பிஎன் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றனரா எனப் பார்ப்போம்.

முஷிரோ: நாட்டின் ஆட்சியை அன்வார் ஏற்காத வேலையில் அவர் வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என எப்படி குற்றம் சாட்ட முடியும். அம்னோவும் நஜிப்பும் கூட தங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றாத வேளையில் அன்வார் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என மகாதீர் எப்படி எதிர்பார்க்க முடியும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் பினாங்கும் சிலாங்கூரும் காட்டியுள்ள செயல் திறனை மகாதீர் பார்க்க வேண்டும். அவை வரவு செலவு உபரியை அறிவித்துள்ளன. முன்பு அம்னோ கட்டுப்பாட்டில் அந்த மாநிலங்கள் இருந்த போது அதனை நினைத்துப் பார்க்கவே முடியாது.

ஹாங் பாயூப்: எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவில் பாதி அளவுக்கு நல்லவராக இருந்தால் கூட அது எல்லா அம்னோ ‘கனரகங்களை’ காட்டிலும் மேலானவராகும்.

பூன் ஹோர் லோய்: முன்னைய அதிபர் ஜார்ஜ் புஷ் விட்டுச் சென்ற பிரச்னைகள் ஒபாமாவைப் பாதித்துள்ளன. நமது ‘போலே லாண்ட்’ டிலும் அதே நிலை தான். உங்கள் நாடு கிட்டத்தட்ட திவாலாகி விட்டது.

யூஜின்: உலக விவகாரங்கள் மீது மகாதீர் தமது எண்ணங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தாம் அளித்துள்ள வாக்குறுதிகளில் பலவற்றை ஒபாமா நிறைவேற்றியுள்ளதை ஆவணங்கள் காட்டுகின்றன. குடியரசுக் கட்சியினர் முட்டுக்கட்டை போடுவதால் அவரால் சில வாக்குறுதிகளை காப்பாற்ற முடியவில்லை.

மலேசியா பெர்சே: மோசமான தேவதை பிசாசைக் காட்டிலும் எவ்வளவோ நல்லது. ஏனெனில் அது ஒரு தேவதை. ஒரு பிசாசு எப்போதும் பிசாசு தான். நல்ல பிசாசு என உலகில் எதுவும் இல்லை. அதனால் தான் உங்களையும் உங்கள் சேவகர்களையும் தவிர யாரும் பிசாசுகளைக் கொண்டாடுவதில்லை.

வீரா: அன்வார் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் சமநிலையான, உபரியுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்துள்ளர். அதனை இது வரை வேறு எந்த நிதி அமைச்சரும் செய்யவில்லை.

ஆனால் அன்வார் பொதுப் பணத்தை விருப்பம் போல் செலவு செய்கின்றவர் என நீங்கள் இப்போது பழி சுமத்துகின்றீர்கள். உங்களுக்கு வயதாகி விட்டதால் இணையத்துக்கு சென்று அந்த உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

 

TAGS: