“நல்ல தோற்றத்தை தருவதற்கு புள்ளி விவரங்களை ஜோடிப்பது புதிய விஷயமல்ல. ஆனால் அது அளவுக்கு அதிகமாகப் போனால் அந்த வியூகம் திருப்பித் தாக்கும்.”
குற்றப் புள்ளிவிவரங்கள் எப்படி ஜோடிக்கப்படுகின்றன
டெலிஸ்டாய்: என்ன அவமானம் ! வேறு எந்த விஷயமாவது ஜோடிக்கப்பட்டதா ? அடைவு நிலையை உயர்த்திக் காட்டுவதற்காக பொதுத் தேர்வு முடிவுகளை எப்படி ஜோடிக்க முடியும் என்பதை எனக்கு அணுக்கமான ஒருவர் விளக்கியுள்ளார்.
பிஎன் சாதனைகளை அலங்காரமாக காட்டுவதற்கு அரசாங்கம் நடத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இதுவாகும். பல ஏ-க்களைப் பெற்ற மாணவர்கள் ஒரு சொற்றொடரைக் கூடச் சரியாக ஏன் எழுத முடியவில்லை என்பது இப்போது நமக்கு வியப்பைத் தரவில்லை.
குற்றப் புள்ளி விவரங்களைப் பொறுத்த வரையில் எல்லாம் பொய்கள், வடி காட்டின பொய்கள்.
கேகன்: நல்ல தோற்றத்தை தருவதற்கு புள்ளி விவரங்களை ஜோடிப்பது புதிய விஷயமல்ல. ஆனால் அது அளவுக்கு அதிகமாகப் போனால் அந்த வியூகம் திருப்பித் தாக்கும். ஆனால் அப்போது உண்மை நிலையும் புள்ளி விவரங்களும் எதிர்மாறாக இருக்கும்.
பொது மக்கள் அந்தப் புள்ளி விவரங்களை முற்றாக நிராகரிக்கும் போது வியூகம் திருப்பித் தாக்கும். ஆனால் புள்ளிவரங்கள் காரணமாக குற்றச் செயல்கள் என்பது எண்ணம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று அரசாங்கம் கூறுகிறது. அது நமது விவேகத்துக்கு அவமானத்தை தருவதாகும்.
எஸ்கிமோக்களிடம் அவர்களைச் சுற்றிலும் உள்ள இயற்கையான ஐஸ் தவறான எண்ணம் என்று சொல்லி அவர்களிடம் ஐஸ்-ஸை விற்பதற்கு அரசாங்க சிந்தனைக் களஞ்சியமான பெமாண்டு முயலுவதாகத் தோன்றுகிறது.
நல்லது திரு ஐஜிபி அவர்களே, (தேசியப் போலீஸ் படைத் தலைவர்) உங்கள் தலை சிறந்த சின்னத் திட்டம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. உங்களை பெமாண்டு ஏமாற்றி விட்டது. ஆனால் எங்களை அல்ல. ஏனெனில் குற்றச்செயல்களினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் பொது மக்களாகிய நாங்கள்.
தயவு செய்து மீண்டும் எண்ணம் எனச் சொல்லி எங்களை அவமானப்படுத்த வேண்டாம். குற்றச் செயல்களை தடுப்பது போலீசாரின் முக்கியமான வேலை அல்ல என்பது போல இனிமேல் போலீசார் குற்றச் செயல்களைத் தடுப்பதில் கவனம் செலுத்துவர் எனக் கூறும் அதிகம் பேசும் உள்துறை அமைச்சரையும் அவ்வாறே கேட்டுக் கொள்கிறோம்.
ஜிமினி கிரிக்கெட்: போலீஸ் படையின் தோற்றத்துக்கும் கௌரவத்துக்கும் இது எவ்வளவு இழுக்கைக் கொண்டு வரும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதில் உள்ள ஆண்களும் பெண்களும் அதிக அழுத்தத்தை எதிர்நோக்குகின்றனர். அந்த வேளையில் அவர்கள் வடி கட்டின பொய்களுக்கு ஒரு பகுதியாக இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் அரசியல் எஜமானர்களுக்கு நல்ல பெயர் ஏற்படுவதற்காக புள்ளி விவரங்களை திருத்த வேண்டிய அரசியல் அழுத்தங்களுக்கும் அவர்கள் உட்பட வேண்டியுள்ளது.
அது பொய் என அவர்களுக்குத் தெரியும். ஆனால் அதனைத் தடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர். அதே வேளையில் அந்த அரசியல் எஜமானர்கள் ஊழலைச் செய்து விட்டு தப்பித்துக் கொள்வதையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.
அந்த எஜமானர்களை தோற்கடிக்க முடியவில்லை. அதனால் போலீசாரும் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
அம்னோவும் பிஎன் -னும் இவ்வளவு ஆழமாக ஊழலில் புதைந்துள்ளதில் வியப்பில்லை. குற்றச் செயல்களைக் கூட குற்றச் செயல்கள் இல்லை என கூறும் அளவுக்கு போலீசார் தங்கள் எஜமானர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர்.
அடையாளம் இல்லாதவன் #79199503: குற்றச் செயல் விகிதங்கள் குறைந்தால் அரசாங்கம் ஏன் போலீஸ்காரர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனக் கோருகிறது ?
.