“அந்த அரசு சாரா அமைப்புக்கள் இஸ்லாத்தின் நல்ல பகுதியை சித்தரிக்க தவறி விட்டதோடு மட்டுமல்லாமல் ஆங்கில மொழியையும் புரிந்து கொள்வதிலும் தோல்வி கண்டு விட்டன.”
மலேசியாகினி சந்தாதாரர்களின் கருத்துக்களை முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் கண்டித்தன
பெரிய களங்கம்: இதோ மீண்டும் ஒர் எடுத்துக்காட்டு. மூன்று தரப்புக் கருத்துக்களுக்கு வலைப்பதிவு அல்லது செய்தி இணையத் தள உரிமையாளர்களே பொறுப்பு எனச் சொல்வது.
எது எப்படி இருந்தாலும் அந்தக் கருத்துக்கள் இஸ்லாத்தைக் குறை கூறவே இல்லை. இன்னொரு சமயத்துக்கும் ஒரு குடும்பத்தின் துயரத்துக்கும் மதிப்புக் கொடுக்கத் தவறிய ஈவிரக்கமற்ற அரசாங்க அதிகாரிகளையே அவை கண்டிக்கின்றன
மலேசிய முஸ்லிம் மக்கள் கூட்டணித் தலைவர் அமீர் அம்சா, ஆங்கில மொழியில் மட்டும் தோல்வி காணவில்லை. அவருடைய கணக்கு அறிவும் மோசமாக உள்ளது. 200 சந்தாதாரர்களிடமிருந்து எப்படி 119 கருத்துக்கள் வந்திருக்க முடியும் ?
லுர்க்கர்: அந்த அரசு சாரா அமைப்புக்கள் தங்கள் ஆங்கில மொழி ஆற்றலையும் கவனிக்க வேண்டும். “அம்னோ இஸ்லாத்தை குற்றக் கும்பல் மதமாக்கி விட்டது” (“Umno has turned Islam into a mafia religion…”) என்னும் சொற்றொடர் அம்னோவைக் குறை கூறுகிறது. இஸ்லாத்தை அல்ல. போலீசில் புகார் செய்வதற்கு முன்னர் தயவு செய்து ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்.
டூட்: அந்த அரசு சாரா அமைப்புக்கள் இஸ்லாத்தின் நல்ல பகுதியை சித்தரிக்க தவறி விட்டதோடு மட்டுமல்லாமல் ஆங்கில மொழியையும் புரிந்து கொள்வதிலும் தோல்வி கண்டு விட்டன. அவர்களுக்கு பிரச்னையாக தென்படுகிற அறிக்கையைப் பாருங்கள். அந்த அறிக்கை எப்படி இஸ்லாத்தை அவமதித்ததாகும் ?
சுவர் கண்ணாடி: என்ன விலை கொடுத்தாவது மலேசியாகினியை நிறுத்துவதற்கு யாரோ ஒருவர் கடுமையாக முயலுவதாகத் தெரிகிறது. அவர் ஏன் அவ்வாறு செய்கிறார் ?
அதே வேளையில் வாசகர் கருத்துக்கள் அறிவுப்பூர்வமாகவும் விவேகமாகவும் இருக்க வேண்டும் என்பதற்கும் இது ஒர் எடுத்துக்காட்டு. அப்படி இருந்தால் தான் வார்த்தைகளைத் திசை திருப்புவதில் வல்லமை பெற்ற மூன்றாம் தரப்புக்கள் நமது சொற்களை திரிக்காமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
புகார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயம் உண்மையில் சொன்ன விஷயத்துக்கு வேண்டுமென்றே தவறாக விளக்கம் கொடுக்கப்பட்டதாகும்.
டத்தோஸ்: இஸ்லாத்தை அம்னோ கடத்தியுள்ளது என்பதே இங்குள்ள பிரச்னை. அதில் இஸ்லாத்தை அவமானப்படுத்தும் விஷயமே இல்லை. குறைந்த அறிவு மிகவும் ஆபத்தானது.
அப்துல் அஜிஸ் முகமட் நோர்: இஸ்லாத்தின் தகுதி எப்படி குறைக்கப்படும் என்பதை தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள். இஸ்லாத்தை பின்பற்றுகின்றவர்களே அதனைக் குறைக்க முடியும். ஏனெனில் அது அவர்களையும் அவர்கள் இஸ்லாத்தை எப்படிப் பின்பற்றுகின்றனர் என்பதையும் பொறுத்துள்ளது.
இஸ்லாமிய நாடு அமைக்கப்படுவதை தான் எதிர்ப்பதாக மசீச கூச்சல் போட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த மனிதர்கள் அது பற்றி எதுவுமே சொல்வதில்லை. என்ன நியாயம் ?
பிளைண்ட பிரடோ: அந்த மனிதர்கள் ஏன் கோழைத்தனமாக தூதரை (மலேசியாகினி) தாக்குகின்றனர் ? மாறாக அவர்கள் அந்தப் பிரச்னை குறித்து குறை கூறுகின்றவர்களுடன் வாதங்களில் ஈடுபட வேண்டும்.