கட்சித் தாவலாம் ஆனால் இடத்தைக் காலி செய்ய வேண்டும்

உங்கள் கருத்து: “தொடங்கி விட்டார் ஐயா, அவரது வேலையை. கட்சித்தாவல்-எதிர்ப்புச் சட்டம் வாக்காளர்களின் தேர்வுரிமையைப் பாதுகாப்பதற்கு, பேராசை பிடித்த அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதற்கல்ல”. 

முன்னாள் பிரதமர் டிஏபி-இன் கட்சித்தாவல் சட்டத்தைக் குறைகூறுகிறார்

பிஎண்ட்: கட்சித்தாவலாம்.ஆனால் அதற்குமுன் சட்டப்படி பதவி விலகி இடைத்தேர்தலில் போட்டியிட நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.அப்போதுதான் உங்களைத் தேர்ந்தெடுத்தார்களே அவர்களுக்குத் திருப்தியாக இருக்கும்.அவர்கள் எந்தக் கட்சி என்று பார்த்துத்தானே உங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆர்ட்சான்: ஒருவர் கட்சி மாற உரிமை உண்டு.ஆனால்,அதற்குமுன் அவர் பதவி விலக வேண்டும் என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சொன்னதை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கவனிக்கவில்லையா.

ஸ்டார்: ஹமிட் ஒமார் தலைமையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பயனடைந்தது அம்னோ-பிஎன் மட்டுமே.அதன் விளைவாக சாபாவிலும்(1994) பேராக்கிலும்(2009) ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கவிழ்ந்தன.

எக்ஸ்-Wfw: பிஎன்னிடம் அரசியல்வாதிகளை விலைகொடுத்து வாங்க பணம் நிறைய இருக்கிறது.ஆனால், அந்தத் தவளைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.எனவே, அவர்களைப் பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு.

கட்சித்தாவும் தவளைகள் பதவி விலகி அவர்களின் இடத்துக்குப் புதிதாக இடைத்தேர்தல் நடத்தப்படுவதையே நான் விரும்புகிறேன். 

அனாக்புயு:தொடங்கி விட்டார், ஐயா அவரது வேலையை. கட்சித்தாவல்-எதிர்ப்புச் சட்டம் வாக்காளர்களின் தேர்வுரிமையைப் பாதுகாப்பதற்கு, பேராசை பிடித்த அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதற்கல்ல.

ஒரு அரசியல்வாதி எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் மாறலாம்.ஆனால், அந்தத் தவளை முதலில் இடத்தைக் காலி செய்து வாக்காளர்களிடமிருந்து புதிதாக அதிகாரம் பெற வேண்டும். ஏனென்றால் அவரது அரசியல் கொள்கைக்காகத்தான் வாக்காளர்கள் அவரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இது தெரியாமல் மக்களைக் குழப்ப கதை கட்டுகிறார் மருத்துவர்.இந்தக் கலையில்தான் அவர் கைதேர்ந்தவர் ஆயிற்றே.

பெயரிலி#19098644:ஒருவருக்குள்ள கட்சி மாறும் உரிமையைத் தடுக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றால் அவர் தம் தொகுதி வாக்காளர்களிடம் புதிதாக அதிகாரம் பெற வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா போன்ற நாடுகளில் அதுதான் வழக்கமாக உள்ளது. இங்கு, பிஎன் அடுத்த தேர்தலில் எம்பிகளை விலைக்கு வாங்கி அரசாங்கம் அமைக்க முடியாமல் போகலாம் என்று கவலைப்படுகிறது போலும்.

பொடே: கட்சித்தாவல் சட்டம் இல்லாததால், மில்லியன் கணக்கில் பணம் கொடுக்கப்படும்போது கட்சி மாற தயாராகிவிடுகிறார்கள்.அரசியலில் கண்ணியம் காக்க ஏதாவது செய்யப்பட வேண்டும்.

மே: அறநெறி அற்றவர் மகாதிர். அபத்தமான கருத்துகள் சொல்வதே அவருக்கு வழக்கமாகி விட்டது.அவரைத் திருத்த முடியாது.அவர் சொல்வதைக் கவனிக்காதீர்கள்.

ஆறு மெர்டேகா தினச் சின்னங்கள்; அரசாங்கத்துக்கே குழப்பம்

லிண்டா: உறுதியான, தீர்க்கமான முடிவுகளைச் செய்யும் அரசு என்பதன் இலட்சணம் இதுதானா.தேசிய நாளைக் கொண்டாட ஒரு வாரம்தான் இருக்கிறது.இன்னும் அதற்கான சின்னம் தேர்ந்தெடுக்கப்படாதிருக்கிறது.

மெகாபிக்பிளர்: இந்நிலையில், பக்காத்தான் மாநிலங்கள் வெவ்வேறு மெர்டேகா கருப்பொருள்களைத் தேர்ந்தெடுத்ததைத் தாக்குத்தாக்கு என்று போட்டுத் தாக்கினார்கள்.

மாநிலங்கள் தனித்தனியாக முடிவு செய்யலாம்.ஆனால், கூட்டரசு அரசாங்கம் அப்படிச் செய்யலாமா.

ஓடின்:மலேசியா விடுதலை ஆகி 55ஆண்டுகள் ஆனதாக ஏன் கூறுகிறீர்கள்?மலாயாவுக்குத்தான் சுதந்திரம் கிடைத்து 55ஆண்டுகள் ஆகின்றன.சாபா, சரவாவுக்கு அல்ல.

உண்மையைச் சொல்: நாட்டை ஆளாமல், வரிப்பணத்தை அவர்களின் மடத்தனமான அரசியல் திட்டங்களைப் பரப்பப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.இவர்களை விரட்டி அடிப்பதே சரியாகும்.

 

 

 

 

 

TAGS: