“அதற்கு நம்பிக்கை தேவை. என்றாலும் ஒரே வலையில் தொடர்ந்து சிக்கியிருப்பதை விட அது எவ்வளவோ மேலானது.”
மகாதீர்: மக்கள் அறிந்த பிசாசுகள் நாங்களே
ஸ்விபெண்டர்: பிஎன் பிசாசு என்பதை ஒப்புக் கொண்ட டாக்டர் மகாதீர் முகமட் பேய்களுக்கு இன்னும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.
அவர் 22 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த போது இன, சமய ரீதியாக மக்கள் பிளவுபட்டனர். அரசு நிலையில் இனவாதம் மேலோங்கியிருந்தது. அரசாங்க நிர்வாக எந்திரத்துக்குள் சமய வெறி ஊடுருவியது.
ஊழல் மலிந்து புற்று நோய் போலப் பரவியது. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவுவது புதிய அரசியல் பாணியானது. நீதித் துறை, அரச மலேசியப் போலீஸ் படை, தேர்தல் ஆணையம், மற்றும் பல ஜனநாயக அமைப்புக்கள் முற்றாக சீர்குலைக்கப்பட்டன.
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், கார் பந்தயங்கள், பல்லூடக பெரு வழிகள், பளபளப்பான கோபுரங்கள், புதிய நிர்வாகத் தலைநகரம் ஆகிய நவீன கட்டுமானங்களுக்கு அடியில் ஜனநாயகம் சிதைந்து கொண்டிருந்தது.
அப்சாலோம்: டாக்டர் மகாதீர் அவர்களே, இந்த நாடு பல நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளது. விவசாயத்துக்கு உகந்த வெப்ப தட்ப நிலை, இயற்கைப் பேரிடர்கள் ஏதும் இல்லாதது, பெரும்பாலான நாடுகளைக் காட்டிலும் அதிகமான இயற்கை வளங்கள், சிறிய எண்ணிக்கையில் இருந்தாலும் கடுமையாக உழைக்கும் மக்கள்-அத்தகைய சூழ்நிலைகளில் குரங்குகளிடம் ஆட்சியைக் கொடுத்திருந்தால் கூட அவை உங்களையும் பிஎன் -னையும் விட நன்றாகச் செய்திருக்கும்.
பார்ட்டிமஸ் 2020: இந்த ‘Melayu Celup’ திரும்பத் திரும்ப ஆடும் ஆட்டம் இதுவாகும். தாமும் தமது புதல்வர்களும் சேர்த்து விட்ட பெரும் சொத்துக்கள் பற்றி கேள்வி எழுப்பப்படுவதை தவிர்ப்பது இப்போதைய நோக்கமாகும்.
Celupகண்காணிப்பில் 100 பில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் இழக்கப்பட்டதாக பேரி வெய்ன் என்ற புத்தக ஆசிரியர் தெரிவித்துள்ளார். அவ்வலவு இழப்புக்கு உடந்தையாக இருந்தவர் தேச விசுவாசி என்று சொல்ல முடியாது.
ஆகவே பக்காத்தான் அடுத்த அரசாங்கத்தை அமைத்ததும் அந்த Celupம் அவரது புதல்வர்களும் சேர்த்த சொத்துக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.
அந்தச் சொத்துக்கள் சட்டப்பூர்வமாக கிடைத்தவை அல்ல எனத் தெரிய வந்தால் அவர்களுக்குப் பொது மக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுக்கப்பட வேண்டும். நீண்ட கால சிறைத் தண்டனைகளும் விதிக்கப்பட வேண்டும். அவர்கள் சேர்த்த சொத்துக்கள் மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.
அனோன் மலேசியா: “அவர்கள் வெற்றி பெற்றால் என்றென்றும் தொடருவதை அவர்கள் உறுதி செய்வர் என மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
பிஎன் -னில் உள்ள அவரும் அவரது வாரிசுகளும் அதைத் தான் காலம் காலமாகச் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால்தான் அவர்கள் ‘kotor’, ‘bersih’-யைக் காட்டிலும் மேலானது எனச் சொல்கின்றனர்.
வெர்சே: சபாவில் மில்லியன் கணக்கில் அந்நியக் குடியேற்றக்காரர்கள்- பிஎன் தொடர்ந்து வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக வகுக்கப்பட்ட திட்டத்தின் விளைவாகும். அந்தத் திட்டத்தை உருவவக்கியது அந்தப் பேய் ஆகும். அவருடைய ‘சாதனைகளில்’ அதுவும் ஒன்றாகும்.
அடையாளம் இல்லாதவன்: வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தி மேகி மீ பாணியில் கொடுக்கப்பட்ட குடியுரிமைகளை துப்புரவு செய்தால் பிஎன் வெற்றி பெறும் வாய்ப்பே இல்லை.
குவிக்னோபாண்ட்: எங்களுக்குத் தெரிந்த பேயைத் தவிர்த்து விட்டு தெரியாத தேவதையுடன் செல்வதே எங்களுக்கு நல்லது. அதற்கு நம்பிக்கை தேவை. என்றாலும் ஒரே வலையில் தொடர்ந்து சிக்கியிருப்பதை விட அது எவ்வளவோ மேலானது.
ஜெரெமி இங்: அந்தப் பிசாசு கட்டுக்குள் அடங்காமல் ஆடிக் கொண்டிருக்கிறது. கடந்த அரை நூற்றாண்டாக அதற்கு யாரும் கடிவாளம் போடவில்லை. அது இந்த நாட்டின் ஜனநாயக முறையையும் சீரழித்துள்ளது.
பிரிவினையை நோக்கமாகக் கொண்ட இன, சமயக் கொள்கைகளை பின்பற்றியதால் அது மலாய்க்காரர்களுடைய உண்மையான முன்னேற்றத்தைத் தடுத்து விட்டது.
Think_Act_Live_Now:நான் பந்தயம் கட்ட விரும்பவில்லை. ஆனால் இரண்டு குதிரைகளுக்கும் இடையில் ஏதாவது பணத்தைப் பணயம் வைக்க வேண்டுமானால் நான் வெற்றி பெறும் வாய்ப்பைக் கொண்ட குதிரை மீதே பணத்தைக் கட்டுவேன். வெற்றி வாய்ப்பு இல்லாத குதிரை மீது நான் பணம் கட்ட மாட்டேன்.
நல்ல குதிரை நல்ல குதிரையாக இல்லாமல் போகலாம் என்பதால் மோசமான குதிரை மீது பந்தயம் கட்டுமாறு மகாதீர் எனக்குச் சொல்வதைப் போல உள்ளது.
அதில் உள்ள நியாயம் எனக்குப் புரியவே இல்லை. அத்தகைய எண்ணங்களைக் கொண்ட ஒரு தலைவர் நம் நாட்டை எப்படித் தான் வழி நடத்தினாரோ ?