உங்கள் கருத்து: “அம்னோவில் காலத்தை மீறி தங்கிவிட்ட தலைவர்கள் நிரம்பிக் கிடக்கிறார்கள். அவர்களில் சிலர் மற்றவர்கள் பதவி விலக வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறவும் முற்படுகிறார்கள்.”
அட்னான்: திறம்பட செயல்படாத அம்னோ தலைவர்கள் பதவி விலக வேண்டும்
கேஎஸ்என்:நல்லாத்தான் சொல்லியிருக்கிறீர் அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அவர்களே.ஆனால், தனிப்பட்டவர் நலனைவிட கட்சி நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சொன்னது அவ்வளவு சரியாகப் படவில்லை.
கட்சி நலனையும், தனிப்பட்டவர் நலனையும் விட தேசிய நலனுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
பதவியில் இருந்துகொண்டு என்ன செய்திருக்கிறோம், தாங்கள் வகிக்கும் பதவிக்குத் தகுதியானவர்கள்தானா,தங்களிடம் ஐயத்துக்கிடமற்ற நேர்மை இருக்கிறதா, ஊழல்வாதிகளா, தங்கள் குடும்பத்துக்கும் வேண்டியவர்களுக்காகவும் பாடுபடுகிறோமா அல்லது நாட்டுக்காக பாடுபடுகிறோமா, மக்கள் மதிக்கும் பண்புகள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்கு உண்மையாக பதிலும் கூறப்படுமானால் அம்னோ பாருவில் ஒருவர்கூட எஞ்சியிருக்க மாட்டார்.
தலைவெட்டி: “தலைவர்கள் வருவார்கள் போவார்கள். அரசாங்கப் பதவிகளில் இருக்கிறோம் என்றால் அது கட்சியினால்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்”, என்று அட்னான் சொல்லியிருக்கிறார்.
சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அதைத்தான் வாக்காளர்களாகிய நாங்களும் சொல்கிறோம்- ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவுகின்றவர்கள் அவர்கள் எந்தப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அவற்றைக் காலி செய்ய வேண்டும்.
எப்போதுபோல் அம்னோ சொல்வதைச் செய்யாது.ஏதோ, அம்னோ உயர் நெறிகளைக் கடைப்பிடிப்பதுபோல் பேசுவார்கள் ஆனால், நாங்கள் ஏமாற மாட்டோம்.
பெயரிலி#58437020: மாற்றம் தேவைதான்.அதற்காகத்தானே இவ்வளவு தூரம் வாதாடுகிறோம்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் அரசு ஊழியர்கள் இருப்பது இங்குதான்.கடந்த பத்தாண்டுகளில் குற்ற எண்ணிக்கை மிகவும் உயர்ந்து விட்டது,அரசியலில் முக்கிய பங்காற்ற வேண்டியவர்கள் அரசியலையே சர்க்கஸ் ஆக்கி விட்டார்கள்.
இப்போதுதான் நீங்களும் உருப்படியான ஒன்றைச் சொல்லியிருக்கிறீர்கள்.இது அம்னோவுக்குள் குழப்பம் என்பதன் அறிகுறியா?
ஏஜே: பணம் பண்ணலாம். அதுதானே அரசியல்வாதிகளை அம்னோ பக்கம் கவர்ந்திழுக்கிறது.
எவரும் தானே விலகப்போவதில்லை. கட்டாயப்படுத்தினால்தான் விலகுவார்கள்.
ஜேம்ஸ்: அம்னோவில் காலத்தை மீறி தங்கிவிட்ட தலைவர்கள் நிரம்பிக் கிடக்கிறார்கள்.அவர்களில் சிலர் மற்றவர்கள் பதவி விலக வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறவும் முற்படுகிறார்கள்
தேசிய நாளுக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதை அரசு அறியாது
பூம் பூம் பாவ்: தேசிய நாள் கொண்டாட்டங்களில் சீன, இந்திய மாணவர்களைக் கலந்துகொள்ள வைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிபோல் தெரிகிறது.
அவர்களிடம் நியாயமாக நடந்துகொள்வதில்லை; தகுதியின் அடிப்படையில் உதவிச்சம்பளம் போன்றவற்றை வழங்குவதில்லை. ரிம100,உணவு, போக்குவரத்து வசதி, டி-சட்டை கொடுத்தால்- தேர்தலில் வெற்றிபெற முடியுமா?படித்த எவராவது பிஎன்னுக்கு வாக்களிப்பாரா?
ஊழல் இல்லை: “எனக்குத் தெரியாது”, என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் கோ சூ கூன்.
இதுதான் நம் சமுதாயத்தில் பிரபலமான வாக்கியமாயிற்றே.அலுவலக அதிகாரியிலிருந்து அரசியல்வாதிவரை அதைத்தானே சொல்கிறார்கள். கடமையை ஒழுங்காகச் செய்யாதவர்கள் பேசும் பேச்சு அது.
பெயரிலி #89734714: கோ, பொய் சொல்ல வேண்டாம். அதுதான் மின்னஞ்சலில் உள்ளதே.ஒரு நாளைக்கு ரிம20 (ஒத்திகை உள்பட ஐந்து நாள்களுக்கு ரிம100).
பிஎன், கூட்டம் சேர்க்க நினைத்தால் ரொக்கம், உணவு, போக்குவரத்துவசதி முதலியவை கொடுத்துத்தான் சேர்க்க முடியும்.