போலீஸ், பிஎன்னுடன் ஒத்துப்போகாதது ஒரு குற்றமல்லவே

உங்கள் கருத்து:தேசிய இலக்கியவாதி ஏ.சமாட் சயிட் மெர்ட்டேகா முன்னிரவில் ஒரு கவிதை வாசித்தார், அது குற்றமா?பிடிஆர்எம்-மின் மண்டையை ஆராய வேண்டும்.”

ஜஞ்ஜி டெமோக்ராசி ஏற்பாட்டாளர்கள்மீது போலீஸ் விசாரணை

சிரப்: வியாழக்கிழமை இரவு டாட்டாரான் மெர்டேகாவில் திரண்ட பெருங்கூட்டம் ஓழுங்குடன் நடந்து கொண்டது.கலகலப்பாக இருந்து அமைதியாகக் கலைந்து சென்றது.எந்தச் சச்சரவுமில்லை.ஆனாலும் விசாரிக்கிறதாம் பிடிஆர்எம் (அரச மலேசிய போலீஸ்). ஏன் இந்த வீண் வேலை?

பிடிஆர்எம் மலேசியாவை அதன் குடிமக்களுக்குப் பாதுகாப்பான நாடாக்க, குற்றச்செயல்களை எதிர்ப்பதில் கவனம் செலுத்தலாம்.

பெயரிலி: ஒரு முதியவர் மஞ்சள் நிற உடை அணிந்த கூட்டத்தில் கவிதை வாசித்ததை விசாரிக்க விரும்புகிறார்கள்.இது நேரத்தையும் மக்களின் பணத்தையும் விரயமாக்கும் செயல்.

பாக் சமாட்டுக்கும் ஜஞ்ஜி பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி.நம்மால் அமைதியாகக் கூடிப் பிரிய முடியும் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் டாட்டாரான் மெர்டேகாவைச் சுற்றி  நடந்துவர ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொருவராக வரிசையில் நின்று நடந்து வருவோம்.போக்குவரத்துக்கு இடையூறில்லை, போலீஸ் அனுமதியும் தேவையில்லை.ஏனென்றால் அனைவரும் மஞ்சள் உடை அணிந்து மாலை நேரத்தில் உடற் பயிற்சி செய்கிறோம். 

எஸ்.ரவிச்சந்திரன்:மதிப்புக்குரிய தேசிய இலக்கியவாதி ஒருவர் கவிதை வாசிக்கிறார்.அதில் சட்டமீறல் உண்டா என்று ஆராய்கிறார்கள்.

குற்றங்களை ஆராய்வதோ, தடுப்பதோ அவர்களுக்கு முக்கியமாகப் படவில்லை.

டாக்டர்:தேசிய இலக்கியவாதி ஏ.சமாட் சயிட் மெர்ட்டேகா முன்னிரவில் ஒரு கவிதை வாசித்தார், அது குற்றமா?பிடிஆர்எம்-மின் மண்டையை ஆராய வேண்டும்.

காவலன்: போங்கய்யா, போய் குற்றங்களைத் தடுங்கள்.அமைதி விரும்பும் மக்கள்மீது ஏன் பாய்கிறீர்கள்?

நானே எஜமான்: என் வரிப்பணத்தை வைத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்.மெர்டேகா கொண்டாட்டத்தில் கவிதை படிப்பது ஓரு குற்றமல்ல.

லின் வென்குவான்: மஞ்சள் நிறக் கடலைக் கண்டு அம்னோ-பிஎன்னுக்குக் கலக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.அம்னோ-பிஎன் நிகழ்வு ஜஞ்ஜி பேரணிக்குமுன் மங்கிப் போனதால் இப்போது பிடிஆர்எம்மை ஏவி விட்டிருக்கிறார்கள்.

அம்னோ-பிஎன் விரும்புகிறது என்பதற்காக பாக் சமாட்டுக்கு எதிராக அல்லது பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் தொலைந்தார்கள். அது அப்படியே அம்னோ-பிஎன்னுக்கு எதிரான வாக்களாக மாறும்.

மலேசியாகண்காணிப்பாளன்: குற்றவாளிகளைப் பிடிக்காமல் ஐஜிபி அமைதியான ஆர்ப்பாட்டம் செய்வோரை விரட்டிக் கொண்டிருக்கிறார்.

பெர்ட்டான்: ஆர்ப்பாட்டக்காரர்கள் டாட்டாரான் மெர்டேகாவில் ஒன்றுகூடுவதைத் தடுக்க முடியாத போலீசார் பிஎன் அமைச்சர்கள் என்ன சொல்வார்களோ என்று அஞ்சுகிறார்கள்.அந்தத் தோல்வியைச் சரிபண்ணத்தான் இப்போது வீரதீரத்தைக் காண்பிக்கிறார்கள்.

 
 

 

 

 

 

TAGS: