மெர்தேக்கா பேரணி மகத்தான வெற்றி என நஜிப் பெருமிதம்

புக்கிட் ஜலில் அரங்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற ‘Janji Ditepati’ வெற்றி என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். அதற்கு முந்திய நாளைப் போல் அல்லாது அந்தக் கூட்டம் பெரும்பான்மை மக்களைப் பிரதிநிதித்தது என அவர் சொன்னார்.

ஆகஸ்ட் 30ம் தேதி இரவு டாத்தாரான் மெர்தேக்காவில் நிகழ்ந்த ‘Janji Demokrasi’ பேரணியைத் தான் நஜிப் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகும்.

‘Janji Demokrasi’ பேரணி சட்ட விரோதமானது என போலீஸ் பிரகடன செய்ததையும் மீறி 10,000க்கும் மேற்பட்ட மக்கள் அதில் கலந்து கொண்டனர். அவர்கள் மஞ்சள் உடைகளை அணிந்திருந்தார்கள்.

“இன்றிரவு மக்களில் பெரும்பான்மையோர் நாட்டை நேசிக்கும் குடிமக்கள் ஆவர்,” என அவர் நேற்றிரவு புக்கிட் ஜலில் அரங்கில் வரவேற்புரை நிகழ்த்திய போது சொன்னார்.

“முந்திய நாள் இரவு கலந்து கொண்டவர்கள் பெரும்பான்மையோரைப் பிரதிநிதிக்கவில்லை. ஆனால் இன்றிரவு பெரும்பான்மையோர் கூடினர்,” என்றும் நஜிப் சொன்னார்.

“தமக்கு முன்னால் அமர்ந்துள்ள கூட்டத்தினர் வேகமானவர்கள், ஆற்றல் மிக்கவர்கள்.”  87,000 மக்கள் அமரக் கூடிய அந்த அரங்கம் முழுமையாக இருந்தது.

அரங்கத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று கூடாரங்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல பெரிய தொலைக்காட்சித் திரைகளில் அரங்க நிகழ்வுகளைக் கண்டு களித்தனர்.

அரங்கத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் 8,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக தகவல்  அமைச்சு கூறியது.

என்றாலும் மொத்தம் 150,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் மதிப்பிட்டது. அதிகாரத்துவப் புள்ளி விவரங்களைப் பெறுவதற்கு தகவல் அமைச்சுடன் தொடர்பு கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கு தான் அளித்துள்ள வாக்குறுதியை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்தும் பொருட்டு ‘Janji Demokrasi’பேரணி நடத்தப்படது. அதனை அரசாங்கத் தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

‘Janji Demokrasi’க்கு முன்னதாக வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக ஜாலான் சுல்தானில் இன்னொரு பேரணி நடந்தது. அரசாங்கம் அதனை வெளிப்படையாக ஆட்சேபிக்கவில்லை.

அந்த இரு ஆர்ப்பாட்டங்களைப் போல் அல்லாமல் அதிகாரத்துவ மெர்தேக்கா கொண்டாட்டங்களுக்குப் பலர் வாடகை பஸ்களில் கொண்டு வரப்பட்டனர். நூற்றுக்கணக்கான பஸ்கள் அரங்கத்துக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

புக்கிட் ஜலில் நிகழ்வுகளை காணச் செல்வோருக்கு இலவச இரு வழி டிக்கெட்டுக்களையும் எல்ஆர்டி
நிர்வாகம் வழங்கியிருந்தது.

அது தவிர அதிர்ஷ்டக் குலுக்கும் இருந்தது. கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள், கணினிகள் போன்றவை பரிசுகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.

TAGS: