பினாங்கு முதலமைச்சர் பதவி மீது ஆரூடங்கள் வேண்டாம் என்கிறார் கோ

பொதுத் தேர்தலுக்கான தேதியைப் பிரதமர் அறிவிக்கும் வரையில் பினாங்கு முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் குறித்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என பிரதமர் துறை அமைச்சர் கோ சூ கூன் எல்லாத் தரப்புக்களையும் வேண்டிக் கொண்டுள்ளார்.

வளர்ச்சித் திட்டங்கள் மீதும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால்  பொருத்தமான வேட்பாளர்களுடைய பெயர்களை அறிவிக்காமல் இருப்பதில் தனது சொந்த வியூகத்தைக் கெரக்கான் பின்பற்றுவதாக அதன் தலைவருமான கோ சொன்னார்.

“தேர்தல் காய்ச்சலுக்கு அளவுக்கு அதிமாக சூடு கொடுக்க வேண்டாம். அப்படி செய்தால் பொதுத் தேர்தல் வரும் போது நமது வேகம் தணிந்து விடும்.”

“என்ன முடிவு செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு (கெராக்கான்) தெரியும். இன்னும் வெகு காலம் உள்ளது. மக்களுக்குச் சேவை செய்வதில்  இப்போது கவனம் செலுத்துவது முக்கியமாகும்.”

அவர், முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்குமாறு பினாங்கு அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் ஷேக் ஹுசேன் மைடின் அண்மையில் அவருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு பதில் அளித்தார்.

கோ, தேசிய ஒற்றுமை, ஒருங்கிணைப்புத் துறையின் பினாங்கு அலுவலகமும் தென்மேற்கு போலீஸ் மாவட்டத் தலைமையகமும் மாநில அளவில் நேற்றிரவு ற்பாடு செய்த ஒரே மலேசியா நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களில்  பேசினார்.

“பொதுத் தேர்தல் நெருங்கும் போது நாங்கள் சாத்தியமான, பொருத்தமான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவோம்,” என வேட்பாளர்களை அறிவிப்பதற்கு பொருத்தமான நேரம் எது நெருக்கப்பட்ட போது கோ சொன்னார்.

பெர்னாமா

TAGS: