அந்த பஸ், பிஎன் வன்முறைக்கு அடையாளச் சின்னமாக இருக்கட்டும்

“அந்த பஸ் பயணத்தை தடுக்க அதன் மீது எல்லா வகையான பொருட்களையும் அவர்கள் வீசட்டும். ஆனால் இறுதி இலக்கான-புத்ராஜெயாவை அடையும் வரை அந்தப் பயணம் தொடர வேண்டும்.”

கிளந்தானில் பிகேஆர் பஸ்ஸை ‘சண்டியர்கள்’ தாக்கினர்

ஸ்டார்ர்: அடாவடித்தனமான அரசியலுக்கு இது இன்னொரு உதாரணம். நாகரீகமற்ற, சிந்தனையில்லாத செயல் அது. அந்த வன்முறை அரசியல் நோக்கமில்லாதது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

அந்த பாதகமான காரியத்துக்கு பின்னணியில் உள்ளவர்கள் எந்த அளவுக்கு விரக்தி அடைந்துள்ளனர் என்பதையும் அந்த வன்முறை உணர்த்தியுள்ளது. அதனை விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய போலீஸ் நிச்சயம் நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும்.

ஹும்ம்ம்ம்ம்ம்ம்: மலாய் பெரும்பான்மைப் பகுதிகளில் பிரச்சாரம் செய்வதற்கு இது நல்ல வாய்ப்பாகும். மதில் மேல் பூனையாக இருப்பவர்களும் வழிப் போக்கர்களும் கூட பஸ்-ஸுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிய விரும்புவர். அந்த பஸ்-ஸை ஒட்டுவது பாதுகாப்பானது என்றால் தயவு செய்து எதனையும் மாற்ற வேண்டாம்.

இன்னொரு விஷயம். அது அட்டவணை அல்லாத குற்றமா ?

கிம் குவேக்: எதிர்பாராதவிதமாக அந்த சம்பவம் பக்காத்தான் ராக்யாட்டின் தேர்தல் பிரச்சாரத்துக்குப் புதிய தீவனத்தை வழங்கியுள்ளது. ஏனெனில் சாயம் வீசப்பட்டதால்  முன் கண்ணாடி உருக்குலைந்த அந்த பஸ் பக்காத்தான் எதிரிகள் கடைப்பிடிக்கின்ற வன்முறைக்கு சின்னமாக இருக்கும்.

மலாய் பெரும்பான்மை பகுதிகளில் அது செல்லும் போது பக்காத்தானுக்கு அதிகமான கிராமப்புற வாக்குகள் கிடைக்கும்.

பெர்ட் தான்: மலேசியா இப்போது குண்டர்கள் நாடாகி விட்டது. அவர்கள் ஆட்சி செய்கின்றனர். போலீஸ் எங்கே போனது ? மெர்தேக்காவை வரவேற்கும் நிகழ்வின் போது கவிதை வாசித்த 77 வயதானவர் மீது குற்றம் சாட்டுவதற்கு ஆதாரத்தைத் தேடி அனைவரும் டாத்தாரான் மெர்தேக்காவுக்குச் சென்று விட்டார்களா ?

எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் அல்லது பிஎன் அரசாங்கத்தை எதிர்க்கும் யாரையும் குறி வைப்பதே அந்தக் குண்டர்களின் நோக்கமாகத் தெரிகிறது. அந்த குண்டர்கள் ஏன் பிஎன் சொத்துக்களை தொடுவதே இல்லை ?

ஒரே மலேசியா சின்னத்தையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் படத்தையும் கொண்ட பெரிய பெரிய பஸ்கள் பிஎன் -னிடம் உள்ளன. அவற்றுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.

பி தேவ் ஆனந்த் பிள்ளை: இவ்வளவு ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த அவர்கள், அதிகாரம் தங்கள் பிறப்புரிமை என எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த பஸ் பயணத்தை தடுக்க அதன் மீது எல்லா வகையான பொருட்களையும் அவர்கள் வீசட்டும். ஆனால் இறுதி இலக்கான-புத்ராஜெயாவை மக்கள் ஆதரவுடன் அடையும் வரை அந்தப் பயணம் தொடர வேண்டும்.

வெறுப்படைந்தவன்: அம்னோ விரக்தி அடைந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. மக்களுடன் பக்காத்தான் தொடர்பு கொள்வதைத் தடுக்க அது முயலுகிறது. பிஎன் சண்டியர்கள் செய்யும் வன்முறைகள் அவர்களையே திருப்பி அடிக்கும். ஏனெனில் மக்கள் நாட்டில் குழப்பத்தையும் வன்முறையையும் விரும்பவில்லை.

அவர்கள் சட்டமும் ஒழுங்கும் அமைதியும் ஒற்றுமையும் நிலை நாட்டப்பட வேண்டும் என விரும்புகின்றனர். வன்முறையை அவர்கள் நாடவில்லை.

ஆர்ஆர்: எதிர்க்கட்சித் தலைவர்கள் உறுப்பினர்கள் ஆகியோருடைய உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் அவர்களைத் தடுக்கவும் அம்னோ  குண்டர்கள் பட்டாளத்தையே அமைத்துள்ளதாக தோன்றுகிறது. போலீஸ் படை தனது கடமையை முறையாகச் செய்யா விட்டால் தேர்தலுக்கு  முன்னரும் பின்னரும் இந்த நாடு பெரிய அபாயத்தை எதிர்நோக்கும்.

ஐ போலே: அந்த பஸ் பிஎன் அல்லது அம்னோவுக்குச் சொந்தமானதாக இருந்தால் என்ன நடந்திருக்கும் ? இன்னேரம் அது பெரிய செய்தியாகி எதிர்க்கட்சிகள் மீது பழி போடப்பட்டிருக்கும்.

மோசடிக்காரன்: நல்ல வேளை என நினைத்துக் கொள்ளுங்கள். அம்னோ தொடர்புடைய அந்தக் கோமாளிகள் அந்த பஸ்-ஸுக்கு குண்டு வைத்திருந்தால் அல்லது எரியூட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்  ? நல்ல வேளை அன்வார், யாருக்கும் காயமும் இல்லை உயிரிழப்பும் இல்லை.

இந்த சம்பவம் முதலாவதும் அல்ல. கடைசியானதும் அல்ல. 13வது பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நிறைய நடக்கும்.

மாற்றம்: எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்பட்ட முந்திய தாக்குதல்களை அல்லது வன்முறைகளை பிரதமர் கண்டிக்காமல் இருப்பது உண்மையில் என மனத்தை குழப்பிக் கொண்டே இருக்கிறது.

 

TAGS: