“அடக் கடவுளே ! முஸ்தாப்பா, என்ன குடியரசு மருட்டலா ?”

“அரசமைப்பில் பலப்பல திருத்தங்களை பிஎன் அரசாங்கம் செய்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனதால்தான் அது இப்போது சும்மா இருக்கிறது.”

மலேசியாவை குடியரசாக்கும் முயற்சிகள் பற்றி முஸ்தாப்பா எச்சரிக்கிறார்

டோபிஸ்டர்ன்: கிளந்தான் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் ?

நாங்கள் இந்த நாட்டைக் குடியரசாக்க விரும்பவில்லை. ஆனால் அதே வேளையில் ரசாக், ஒன், மகாதீர் ஆகியோரது வம்சங்கள் இந்த நிலத்தை ஆள்வதற்கு ஆண்டவனால் நியமிக்கப்பட்டவர்கள் என தங்களை எண்ணிக் கொண்டு ஆட்சி புரிவதையும் நாங்கள் விரும்பவில்லை. அது எனக்கு வட கொரிய ஆட்சியாளர்களையே நினைவுபடுத்துகின்றது.

உண்மை: 13வது பொதுத் தேர்தலில் தாங்கள் ஏன் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்கு நியாயமான காரணத்தை மக்களிடம் அவர்களால் சொல்ல முடியவில்லை. அதனால் வழக்கமான இனவாத, சமயவாத அரசியல் விளையாட்டை ஆடுகின்றனர். மக்களை அச்சுறுத்துகின்றனர்.

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் வழி சுல்தான்களுக்கு வழங்கப்பட்டிருந்த விதி விலக்கையும் அதிகாரங்களையும் நன்றாக கதை திரிக்கும் மகாகுரு தலைமையில் அம்னோ-பிஎன் பறித்துக் கொண்டதை அந்த அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் மறந்து விட்டாரா ?

தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தது பிஎன் தலைவர்களே. மலேசியா குடியரசானால் அதற்கு சாத்தியமான அடித்தளத்தை வகுத்ததற்காக அம்னோ/பிஎன் மீதே பழி போட வேண்டும்.

தி கீ கியாட்: குப்பைத் தொட்டியில் குப்பைதான் கிடைக்கும்

1) ‘குடியரசாக மாற்றுவதற்கும்’ ‘சுதந்திரத்தின் அடிப்படையைப் பாதுகாப்பதற்கும்’ என்ன தொடர்பு ?’

2) கடந்த 55 ஆண்டுகளாக நிலவும் நிலைத்தன்மையும் ஒற்றுமையும் அமைதியான கூட்டங்களை/ஆர்ப்பாட்டங்களை/எதிர்ப்புக்களை தாங்கிக் கொள்ள முடியாதா ?

3) அரசமைப்பைத் திருத்துவது ‘தீவிரமானது’ என்றால் கடந்த 55 ஆண்டுகளில் பல தீவிரமான அரசமைப்புத் திருத்தங்களைச் செய்த- பல அரசமைப்பு நெருக்கடிகளை உருவாக்கியது அம்னோவைத் தவிர வேறு யாரும் இல்லை.

கதைகள்: மலேசியாவைக் குடியரசாக அல்லது கம்யூனிஸ்ட் நாடாக மாற்றப்படுவதற்கான அபாயம் நிலவுகிறதா ? அரசாங்கம் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கி விட்டது. தயவு செய்து தெளிவாகச் சொல்லுங்கள்.

இப்போதைக்கு நடப்பு நிலவரங்களைப் பார்த்தால் மலேசியா தோல்வி கண்ட நாடாகப் போகிறது

ஜெரோனிமோ: முஸ்தாப்பா அவர்களே, பொதுவாகச் சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். மலேசியா குடியரசாக மாற்றப்படும் என யார் சொன்னது ? எப்போது, எப்படி, எங்கு அவர் அதனைச் சொன்னார்.

.உங்களிடம் வலுவான ஆதாரம் இல்லாவிட்டால் விருப்பம் போல் அறிக்கைகளை விட வேண்டாம்.. அச்சுறுத்தும் நடவடிக்கையிலும் இறங்க வேண்டாம்.

ஸ்டார்ர்: மலேசியாவில் ‘குடியரசுவாதம்’ தலை தூக்கியுள்ளதா இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது.

டாக்டர் மகாதீர் முகமட் அம்னோ/பிஎன் துணைத் தலைவராக இருந்த அன்வார் இப்ராஹிமை நீக்கிய பின்னர் ‘ரிபார்மஸி’ இயக்கம் தொடங்கியது.

அது வலுவடைந்ததின் விளைவாக அம்னோ/பிஎன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது. இப்போது அந்த இயக்கம் தொடர்ச்சியான அம்னோ/பிஎன் ஆட்சிக்கு தெளிவான ஆபத்தைக் கொண்டு வந்துள்ளது.

எதிர்க்கட்சிகள்  ‘குடியரசுவாதத்தைக்’ கொண்டுள்ளதாக அம்னோ தலைவர்கள் குற்றம் சாட்டுவது வெறும் கற்பனை, ஆதரவு குறிப்பாக மலாய் வாக்காளர் ஆதரவு குறைந்து வருவதால் அதனை மீண்டும் பெறுவதற்கு உருவாக்கப்பட்ட ஜோடனை ஆகும்.

இந்த நாட்டில் அரசர் முறை பாதுகாக்கப்படுவதற்கு எல்லாத் தரப்புக்களும் குறிப்பாக அரசர் அமைப்புக்களும் அம்னோ/பிஎன் -னும் நிறையச் செய்ய வேண்டும். அரச குடும்பத்தினர் அரசியல் போராட்டத்திற்கு அப்பால் வைக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இறுதி அதிகாரம் மக்களிடம் உள்ளது. ஆளும் வர்க்கத்திடம் அல்ல.

கெட்டிக்கார வாக்காளர்: அடக் கடவுளே ! முஸ்தாப்பா, என்ன குடியரசு மருட்டலா ?, அரசமைப்பில் பலப்பல திருத்தங்களை பிஎன் அரசாங்கம் செய்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனதால்தான் அது இப்போது சும்மா இருக்கிறது.

அது இப்போது சரணடைவதற்கான நேரம் வந்து விட்டது. மற்றவர்கள் திறமையாக ஆள்வதற்கு அது அனுமதிக்க வேண்டும்.

ஸ்விபெண்டர்: அம்னோ ஆபத்தான குற்றச்சாட்டுக்களை விருப்பம் போல் அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது. மலேசியாவைக் குடியரசாக்க சில தரப்புக்கள் விரும்புவதாக அது சொல்கிறது. யார் அந்தத் தரப்புக்கள் ? அரசியல் ஆதாயத்துக்காக அம்னோபுத்ராக்கள் அபாயகரமான அபத்தங்களை வீசுவது வெறுப்பைத் தருகிறது.

மோசடிக்காரன்: 13வது பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க அம்னோவின் பயம் அதிகரித்து வருகிறது. அது  தனது கற்பனையில் உருவாக்கிக் கொண்ட அரக்கர்கள் அதனை மிரட்டிக் கொண்டே இருக்கின்றனர்.

 

 

TAGS: