உங்கள் கருத்து: “நாட்டின் கொடியை மாற்ற வேண்டுமென்பது குற்றமா? இங்கு அரசமைப்பின் எந்தப் பகுதி மீறப்பட்டது என்பதை போலீஸ் சுட்டிக் காண்பிப்பார்களா?”
‘புதிய கொடி’ வேண்டும் என்போரை போலீஸ் தேடுகிறது
இரட்டைமுகம்: அது 1957-இல் இடச் சாரி மலாய்க்காரர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பழைய கொடி.அவர்களும் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள்தான். அது, மெர்டேகாவுக்காக போராடியது அம்னோ மட்டுமல்ல என்பதை நினைவுபடுத்துகிறது. அவ்வளவுதான்.மற்றபடி கொடியால் பிரச்னை எதுவும் இல்லை.
அக்டோபஸ்: அவ்விளைஞர்கள் வரலாற்றின் மறுபக்கத்தைக் காண்பிக்க முனைந்தார்கள்.வேறு ஒன்றுமில்லை.
ஈப்போ2: கொடி பறக்கவிடுதல் ஒரு குற்றமா? ‘குறைசொல்லப்படும்’ கொடி சட்டப்படி தடை செய்யப்பட்டதா?அது, இப்போதுள்ள கொடிக்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்ட கொடி என்பது போலீசுக்கு எப்படித் தெரிந்தது?
அரசமைப்பின் எப்பகுதி மீறப்பட்டது என்பதை போலீஸ் எடுத்துரைக்க வேண்டும்.
கிட்: பிரதமர் ஒன்றைச் சொன்னால் அதைக் கிளிப்பிள்ளைபோல் திரும்பத் திரும்ப ஒப்பிப்பதுதான் போலீசின் வேலையா? மெர்டேகாவுக்கு முன்தினம் மாற்றுக்கொடி பறக்கவிடுவது நாகரிகமற்ற செயலாக இருக்கலாம்.ஆனால், அது ஒரு குற்றமா?அரசமைப்பு, “நீங்கள் வேறு எந்தக் கொடியையும் பறக்கவிடக்கூடாது” என்று தடைப்படுத்தவில்லையே.
விழிப்பானவன்: “ஜனநாயக முறைகள்” மீறப்பட்டதாக போலீஸ் கூறுகிறது.சட்டத்தில் இச்செயல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதா? ஏன் நம் போலீசார் இப்படி நடந்து கொள்கிறார்கள்?
புதுக் கொடி தேவை (அப்படிச் சொன்னதாக வைத்துக்கொள்வோம்) என்பது குற்றமா?எத்தனையோ நாடுகள் அவற்றின் கொடிகளையும் நாட்டுபண்ணையும் மாற்றிக் கொள்ளவில்லையா?
கொடியை மிதித்தல், தலைகீழாக பறக்கவிடுதல் முதலியவை கொடியை அவமதிக்கும் செயல்கள்.அவை பற்றி நான் பேசவில்லை.
கோன்மென்: அது ஒரு என்ஜிஓ-வின் கொடியாக இருக்கலாம்.தீவகற்ப மலேசியாவுக்கும் சாபா, சரவாக்குக்குமிடையில் கூடுதல் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட கொடியாகக்கூட இருக்கலாம்.அது குற்றமா? அதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?
யாராவது அதுதான் புதிய மலேசிய கொடி என்றார்களா? ஏன் கொடி ஏந்தியவர்களைக் கொடுமையானவர்களாக சித்திரிக்கிறீர்கள்?
அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?சட்டப்பூர்வ அரசைக் கவிழ்க்க ஆயுதப் புரட்சி நடத்தச் சோன்னார்களா? அல்லது கையில் ஆயுதம் தாங்கி இருந்தார்களா?எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்?
போலீஸ் அவர்களின் நேரத்தை, தீர்க்கப்படாதிருக்கும் வழிப்பறிக்கொள்ளை, வீடுபுகுந்து கொள்ளையிடல், குண்டர்தனம் போன்றவற்றுக்குத் தீர்வுகாண்பதில் செலவிடுவது பொருத்தமாக இருக்கும்.
நம்பிக்கை இல்லாதவன்:பிடிஆர்எம், பழைய வழக்குகள் இரண்டு உள்ளன. முன்னாள் பினாங்கு முதலமைச்சர் டாக்டர் கோ சூ கூன் படத்தைக் கிழித்துக் காலில் போட்டு மிதித்தார்கள்.நடப்பு முதலமைச்சர் லிம் குவான் எங் படத்துக்கும் அதே ‘மரியாதை’தான் காண்பிக்கப்பட்டது. அதைச் செய்தவர்கள் யார் என்பதையும் கண்டுபிடியுங்கள்.
இவைமீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீங்கள் பாரபட்சம் காண்பிப்பதாகத்தான் பொருள்படும்.
பெயரிலி #03913649: பெர்சே இணைத் தலைவர் எஸ்.அம்பிகாவின் வீட்டின் முன்னால் பின்புறத்தைக் காண்பித்தார்களே-அதை மறந்து விடாதீர்கள்.அதுவும் ஆபாசம்தான்.
ஜோ லீ: சிலர், சிறுபிள்ளைத்தனமான காரியம் செய்திருக்கிறார்கள் அதற்கு அம்னோ அரசியல்வாதிகள் குதிகுதி என்று குதிக்கிறார்கள்.ஆனால், பாலியல் வல்லுறவு, சி4 வைத்துக் கொலை, மில்லியன் கணக்கில்(என்எப்சி ஊழல்), பில்லியன் கணக்கில் (கிள்ளான் துறைமுக ஊழல்) பணம் கொள்ளைபோனது, லிம் குவான் எங்குக்கும் அம்பிகாவுக்கும் எதிரான அடாவடித்தனங்கள் இப்படி எத்தனையோ நடந்துள்ளன அவை பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை.
நம்பாதவன்: 1990-களில் அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நெகாரா கூ பாடலின் வேகத்தைக் கூட்டவில்லையா?சிறிது காலத்துக்குப் பின்னர் பழைய வேகமே நிலைநிறுத்தப்பட்டதே, அப்போது “ஜனநாயக முறை”காக்க போலீஸ் எதுவும் செய்யாதது ஏன்?.