மிக்க நன்றி பக்காத்தான், இனிமேல் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்

“மக்களுடைய புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. காரணம் சாதாரண மக்களே இப்போது மாற்றங்களை நாடுகின்றனர்.”

ஜாஞ்சி டெமாக்கரசி- உண்மையான மெர்தேக்கா நிகழ்வு

லூசியா: மெர்தேக்காவுக்கு முதல் நாளன்று நான் மாலை 4 மணிக்கு பினாங்கிலிருந்து புறப்பட்டேன். ( ஆம், மஞ்சள் டி சட்டையை அணிந்திருந்தேன்) முதலில் ஹோட்டலுக்குக் கூடச் செல்லாமல் என் பெட்டியுடன் ஜாஞ்சி டெமாக்கரசியில் கலந்து கொள்வதற்காக உடனடியாக டாத்தாரான் மெர்தேக்காவுக்குச் சென்றேன். ஜனநாயகத்துக்கான நமது போராட்டத்தில் மற்றவர்களுடன் இணைந்து கொள்ள எனக்கு அவ்வளவு ஆர்வம் இருந்ததே அதற்குக் காரணம்.

டாத்தாரானைச் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டிருந்ததால் சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. அதிகாரப்பூர்வ மெர்தேக்கா வரவேற்பு நிகழ்வுகள் ஏதும் இல்லை. அரசாங்கம் நம்மைக் கண்டு அஞ்சி விட்டதா ?

ஒவ்வொரு ஆண்டும் வரவேற்பு நிகழ்வுகள் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படும். பிரதமரும் அமைச்சர்களும் அதில் கலந்து கொள்வார்கள். நள்ளிரவில் வாண வேடிக்கைகளும் நிகழும்.

ஆனால் இந்த ஆண்டு மஞ்சள் உடையில் வருமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதால் அங்கு அதிகாரத்துவ நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அரசாங்கம் முடிவு செய்திருக்க வேண்டும்.

Zhms1956: இவ்வாண்டு எந்த ஒரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் மெர்தேக்காவை வரவேற்கும் நிகழ்வுகள் இல்லை. நானும் என் கணவரும் இணையத்தை வலம் வந்த போது டாத்தாரான் மெர்தேக்காவில் மஞ்சள் கடலைக் கண்டோம். காரணத்தையும் புரிந்து கொண்டோம்.

அடுத்த நாள் காலையில் வெளியான எந்தப் பத்திரிக்கையிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க டாத்தாரானில் மக்கள் கொடிகளை அசைத்து மெர்தேக்காவுக்கு வரவேற்புக் கூறிய படங்களைக் காணவில்லை. பாரம்பரியமாக நடைபெற்று வந்த மணிக் கூண்டு வரவேற்பு நிகழாமல் மலேசியா உறங்கிக் கொண்டிருந்ததைப் போல அது இருந்தது.

அடையாளம் இல்லாதவன் #70881335: மக்கள் சக்தி மலேசியாவில் மூன்றாவது அணியாக திகழ வேண்டும். அது கட்சி சார்பற்றது. பல இனங்களைக் கொண்டது. சமயச் சார்பற்றது. வியாழக்கிழமை இரவு நாம் கண்டது அதனைத்தான்.

சுதந்திரமான, சகிப்புத் தன்மை கொண்ட, ஊழல் இல்லாத சமூகத்தை பெறுவதற்கான மக்கள் விருப்பத்துக்கு அதிகார வர்க்கம் செவி சாய்க்க வேண்டும். அதனை ஏன் அம்னோவும் பிஎன் -னும் புரிந்து கொள்ள மறுக்கின்றன ?

மோசடிக்காரன்: இதில் பக்காத்தான் ராக்யாட் முக்கியமல்ல. மெர்தேக்காவுக்கு முதல் நாள் நிகழ்ந்தது மக்களுடைய புரட்சி உருவாகிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. சாதாரண மக்களே இப்போது மாற்றங்களை நாடுகின்றனர்.

தேவையான மாற்றங்கள் நிகழாவிட்டால் மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவர். அம்னோ/பிஎன் நமக்கு நம்பிக்கையைத் தர முடியாது.

அசல் மலேசியன்: நான் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஓன்றில் பணியாற்றுகிறேன். கீ துவான் சாய், நீங்கள் சொல்வது உண்மையே. புக்கிட் ஜலில் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கு ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 50 ரிங்கிட் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கும் மின் அஞ்சல்களும் குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டன.

அரசாங்கம் விரக்தி அடைந்த நிலையில் அவ்வாறு செய்கிறது. தனது நேரம் முடிந்து விட்டது என்பது பிஎன் அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும்.

குவினி: துவான் சாய் நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். புக்கிட் ஜலில் கொண்டாட்டம் ஒன்றுமே இல்லை. அது தனக்கு தானே “தம்பட்டம்” அடித்துக் கொள்ளும் நிகழ்வாகும்.

ஸ்டார்ர்: எண்னிக்கை முக்கியமல்ல. போலீஸ் தடை விதித்திருந்த போதிலும் மக்கள் மெர்தேக்கா உணர்வுடனும் ஜனநாயக உணர்வுடனும் ஒன்று கூடினர்.

சிறந்த நாள்: தேசிய இலக்கியவாதி ஏ சாமட் சைட்-க்கு என் வணக்கம்- அவர் நாட்டின் மனச்சாட்சி- பயப்படுவதே பெரிய அச்சம் என்பதை அம்னோபுத்ராக்கள் விடுத்த வன்முறை மருட்டலுக்கு அஞ்சிய நமக்கு அவர் உணர்த்தினார்.

சக மலேசியன்: புக்கிட் ஜலில் கொண்டாட்டங்கள் பிஎன் -னுக்கு சரிந்து வரும் ஆதரவை மீண்டும் பெறுவதற்காக நடத்தப்பட்ட பெரிய நிகழ்வு என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நஜிப் அதனைக் கடத்தி சென்று எதிர்க்கட்சிகளைக் குறை கூறுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

ஜெஸி: போலீஸ் குடிமக்களை தனியாக விட்டு விட்டதால் அந்த நிகழ்வு அமைதியானதாக இருந்தது. அது தனது குண்டர்களையும் நீர் பாய்ச்சும் கருவிகளையும் கொண்டு வரும் போதுதான் எல்லாம் நரகமாகிறது.

 

TAGS: