“உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம் என்பது இங்கு கேள்வியே அல்ல. நீங்களும் மக்களைப் போல ஏழைகள் என்று அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்பதே முக்கியம்.”
உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம் என மகாதீர் பிஎன் தலைவர்களுக்கு அறிவுரை
யார் அந்த முகமூடி மனிதன்: அம்னோ தலைவர்கள் ஏமாற்றுவதற்கு 7 முதல் 8 மில்லியன் ரிங்கிட் வரை வைத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்களா?
அந்த வளப்பத்தை இந்த நாட்டில் வைத்திருக்க வேண்டாம். சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்மூட் போன்று வெளிநாடுகளில் பதுக்கி வையுங்கள் என நீங்கள் சொல்ல வருகின்றீர்களா?
உண்மையில் நீங்கள் சொல்வது இதுதான், ஊழல் செய்யுங்கள் ஆனால் அதனை விவேகமாக மறைத்து வையுங்கள்.
கன்னின்னே: எப்படி நல்ல திருடர்களாக இருப்பது என மகாதீர் திருடர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.
அடையாளம் இல்லாதவன்: இந்த நாட்டில் ஊழல் தலை விரித்தாடுகிறது. அரசாங்கக் கொள்கைகள் அனைத்துமே அம்னோ சேவகர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தைக் கொண்டது என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர்.
அந்த ஊழல் பண்பாடு அத்தகைய மக்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமாக மாறி விட்டதுதான் வெறுப்பை அதிகரிக்கிறது. டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு நன்றி.
பென் காஸி: ஆம். மகாதீர் சொல்கிறார்: “நாட்டைக் கொள்ளையடியுங்கள், என்னைப் போன்று அல்லது என்னை விட பணக்காரராகுங்கள்” ஆனால் உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்டாதீர்கள்.
மக்கள் பார்க்க முடியாத இடங்களில் அதனை மறைத்து வையுங்கள். அர்ஜெண்டினாவில் அதனை வைத்திருங்கள். பெரிய பண்ணையை வாங்குங்கள். லண்டனில், பெர்த்தில், லாஸ் ஏஞ்சல்ஸில் பெரிய மாளிகையை வாங்குங்கள். ஆனால் ஷா அலாமில் மாளிகைகளைக் கட்ட வேண்டாம். ஏனெனில் மலேசியர்கள் அதனைப் பார்க்க முடியும். போலீசிலும் புகார் செய்யலாம்.
அம்னோ நிகழ்வுகளுக்கு அந்த மனிதர் இன்னும் அழைக்கப்படுவது எனக்கு வியப்பைத் தருகிறது. கட்சியின் தலைவிதியை அந்த கிழவர் மாற்ற முடியும் என அம்னோ கனவு காண்கிறது.
டேவிட் தாஸ்: உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம் என்பதும் கிராமங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் வலம் வர வேண்டாம் என்பதும் இங்கு கேள்வியே அல்ல. நீங்களும் மக்களைப் போல ஏழைகள் என்று அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்பதே முக்கியம்.
தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளை நாடுகின்றவர்கள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அவர்கள் மக்கள் மீது பாசமும் கருணையும் காட்ட வேண்டும். தங்கள் தொகுதிகளில் உள்ள ஏழை மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். இன, சமய வேறுபாடின்றி அவர்கள் உதவி செய்ய வேண்டும்.
அம்னோ இன அடிப்படை அரசியலிலிருந்து விடுபடுவதற்கு மற்ற கட்சிகளுக்கு வழி காட்ட வேண்டும்.
அமைதி இல்லாத சுதேசி: 2011ம் ஆண்டு லண்டனில் சொத்துக்களை வாங்கிய 10 பேரில் அறுவர் மலேசியர்கள் என சொத்துப் பரிவர்த்தனைத் துறையில் உள்ள என் நண்பர்கள் சொல்கின்றனர்.
நமது அரசாங்க அதிகாரிகளுக்கு சொந்தமான ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை நான் நேரில் பார்த்துள்ளேன். (எல்லாம் அவர்களுடைய மனைவி, குழந்தைகள் பெயரில் உள்ளன) அவர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என நான் யோசித்து பார்த்தேன்.
ஊழல் கலாச்சாரத்தை வளர்த்தவர் மகாதீர் ஆவார். ஆனால் இப்போது அவர் வெளிப்படையாக பேசுகிறார். காரணம் எதிர்வரும் தேர்தல்களும் பிஎன் தோல்வி காணக் கூடிய அபாயமும்தான்.
எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் விசாரணைகள் தொடரும் என அவர் அஞ்சுகிறார் போலும்.
மலேசியா சக்கிட்: ஒரு திருத்தம்- தீய வழியில் தேடிய சொத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம். அது கடின உழப்பு மூலம் அந்தச் செல்வம் கிடைத்திருந்தால் அதன் பலனை நீங்கள் அனுபவிப்பதிலிருந்து யாரும் தடுக்க முடியாது.