நஜிப்பை அம்னோ வலச்சாரிகள் ‘சிறை’ வைத்துள்ளனர்

“அம்னோவிலுள்ள தீவிர வலச்சாரி சக்திகளுடைய பையில் அடங்கியிருக்கும் நஜிப்புக்கு  அனுதாபங்கள். அதிகாரத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க அவர் அந்தச் சக்திகளை திருப்திப்படுத்த வேண்டியுள்ளது.”

114ஏ ‘நவீன, முன்னேற்றகரமான’ சட்டம் என்கிறார் பிரதமர்

கேகன்: நிரபராதியான ஒர் அடையாளத்துக்குள் மறைந்து கொண்டு ஒருவர் குற்றம் புரிவதற்கு இயலும் போது அவதூறுகளையும் மிரட்டுவதையும் 114ஏ ஆதாரச் சட்டம் எப்படித் தடுக்கப் போகிறது. ஆசிரியர் என குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீதே போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்பதும் குற்றம் புரிவோருக்கு நன்கு தெரியும்.

பலியாடு தயாராக இருப்பதால் விசாரணை செய்வதற்கு போலீஸ் மிகவும் சோம்பல் படும் என்பதும்  அவர்களுக்குத் தெரியும். தயாராக உள்ள அந்த பலியாடு, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை மெய்பிக்க வேண்டும். அது நிச்சயம் நடக்காத காரியம்.

ஸ்விபெண்டர்: குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதியா அல்லது நிரபராதி என மெய்பிக்கப்படும் வரையில் குற்றவாளியா- உங்களுக்கு எது வேண்டும் ?

அதன் நோக்கம் கட்டுப்படுத்துவதே. இணையத்தைச் சரியாகவும் பொறுப்பாகவும் பயன்படுத்த வசதி செய்து கொடுப்பதல்ல.

என்னைப் பொறுத்த வரையில் ஆதாரம் இல்லாததற்காக நிரபராதி ஒருவரைத் தண்டிப்பதை விட போதுமான ஆதாரம் இல்லாததால் குற்றம் செய்த ஒருவரை விடுவிப்பதே நல்லது என நான்

கருதுவேன். இது மிகவும் மோசமன அநீதியாகும். இது எப்படி முன்னேற்றச் சிந்தனையாக முடியும் ?

ஐபோலே: 114ஏ பிரிவை மறு ஆய்வு செய்யப் போவதில்லை என்ற முடிவை நஜிப் ஆதரித்துப் பேசியுள்ளது நான் முதலில் மலாய்க்காரன், இரண்டாவது மலேசியன் என அவரது துணைப் பிரதமர் சொன்னதைப் போன்ற தவறாகும்.

தாம் வெளிநாட்டில் இருந்த போது டிவிட்டரில் அனுப்பிய உத்தரவை துணைப் பிரதமர் மீறியுள்ளார்.

நஜிப் உறுதியாக நடந்து கொள்ளா விட்டால் அவரது தலைமைத்துவமும் தளபத்தியமும் பிரச்னையை எதிர்நோக்கும்.

முஷிரோ: குறை கூறப்பட்டதைத் தொடர்ந்து 114ஏ -ஐ விவாதிக்குமாறு நஜிப் ஏன் அமைச்சரவைக்கு உத்தரவிட்டார் ? அதனை மறு ஆய்வு செய்வதில்லை என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் தலைமையில் கூடிய அமைச்சரவை முடிவு செய்தது. நஜிப்புக்கு அந்தச் செய்தி கிடைத்ததா ?

விஜார்ஜ்மை: அம்னோவிலுள்ள தீவிர வலச்சாரி சக்திகளுடைய பையில் அடங்கியிருக்கும் நஜிப்புக்கு அனுதாபங்கள். அதிகாரத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க அவர் அந்தச் சக்திகளை திருப்திப்படுத்த வேண்டியுள்ளது.

பெண்டர்: “முன்னேற்ற சிந்தனை” குறித்து விவாதிக்க நஜிப் தயாரா ? அந்த ‘சட்டத்தை’ முன்னேற்ற சிந்தனை கொண்டது என எப்படி நீங்கள் தவறாகக் கூற முடியும் ?

ஆமாம். விவாதங்கள் நமது பண்பாடு அல்ல. ஆகவே உங்களைப் போன்றவர்கள் என்ன சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்வது தான் முன்னேற்ற சிந்தனையா ?

அனோம்னிம்: நாங்கள் அந்தச் சட்டம் தேவை இல்லை என வாதாடவில்லை. தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு வலிமை இல்லாத மக்கள் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும் எனச் சொல்வதையே நாங்கள் எதிர்க்கிறோம்.

கண்டர்பிரிகியன்: இது என்ன அபத்தம் ? நாம் எவ்வளவு நவீன, முன்னேற்ற சிந்தனைகளைக் கொண்டிருந்தாலும் சட்டக் கோட்பாடு கடந்த 20 நூற்றாண்டுகளாக ஒரே மாதிரியாகத் தான் இருந்து வருகின்றது. ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படாத வரையில் நிரபராதி என்பதே அந்தக் கேட்பாடு ஆகும்.

பூச்சோங் மாலி: இந்த இணைய கால கட்டத்திலும் அதிகாரத்தை தங்கள் பிடியில் வைத்திருக்க முடியும் என கனவு காணும் மூன்றாம் உலக அரசியல்வாதிகளுக்கு அது உண்மையில் ‘முன்னேற்ற சிந்தனையே’.

 

TAGS: