“இந்த நாடு தங்களுக்குச் சொந்தமானது அல்ல என்பதை அம்னோவும் பிஎன் -னும் உணர வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வர்.”
ஜோகூரில் பிகேஆர் குழுவை ஆணிகளும் கற்களும் எதிர்கொண்டன
பெர்ட் தான்: பிகேஆர் தலைமையக ஊழியர் ஒருவருடைய தாயார் காலமானதற்குத் துக்கம் அனுசரிக்கப்பட்டது போது அம்னோ உறுப்பினர்கள் மட்டுமின்றி போலீசாரும் குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தியிருக்கின்றனர். அது காலஞ்சென்றவருக்கு அவர்கள் கொஞ்சம் கூட மரியாதை காட்டவில்லை என்பதையே உணர்த்துகின்றது.
தங்கள் உறுப்பினரது தாயாரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கச் செல்வது எப்படித் தகராற்றை மூட்டுவதாகக் கருதப்படும் ? பாசத்துக்குரிய குடும்ப உறுப்பினர் ஒருவர் காலமானால் எல்லோரும் அனுதாபம் தெரிவிப்பர்.
சண்டை நிகழும் போது கூட இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்களுடைய சடலங்களை அகற்றுவதற்காக தற்காலிக சண்டை நிறுத்தம் அனுசரிக்கப்படும். இறந்தவருக்கு மரியாதை தெரிவிப்பதே அதன் நோக்கமாகும்.
இஸ்லாம் உட்பட எல்லாச் சமயங்களின் கண்ணோட்டத்திலும் அதனை மன்னிக்கவே முடியாது.
ABU உறுப்பினர்: ஆம். இது நிச்சயம் மலாய் பண்பாடு அல்ல. ஆனால் நிச்சயம் அம்னோ பண்பாடு. முறையான அரசியல் பிரச்சாரத்தில் எதிர்த்தரப்பின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அம்னோ தடுமாறுவதையும் அதன் அகங்காரத்தையுமே அது உணர்த்துகின்றது.
இதனால் ஜோகூரில் பிகேஆர் தோற்றத்திற்கு வலுக் கூடும். தனது சொந்தக் கொல்லைப் புறத்திலேயே அம்னோ வீழ்ச்சி காணும்.
அடையாளம் இல்லாதவன்_3e86: இந்த நாடு மக்களுக்கு சொந்தமானது. தங்களுக்குச் சொந்தமானது அல்ல என்பதை அம்னோவும் பிஎன் -னும் உணர வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வர். இந்த நாடு தங்களுக்குச் சொந்தமானது என்று அம்னோவும் பிஎன் -னும் நினைத்துக் கொண்டிருப்பதே பிரச்னை ஆகும்.
அண்மைய ஆண்டுகளில் அவை இந்த நாட்டு வளப்பத்தைக் கொள்ளை அடித்துள்ளன. தங்கள் ஆதிக்கத்துக்கு மருட்டல் ஏற்படும் போது அவை அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு வன்முறையில் இறங்குகின்றன. அவை குண்டர்களைப் போல செயல்படுகின்றன.
மூன் டைம்: அம்னோவில் ரௌடிகளும் எதிரிகள் மீது கூச்சல் போடும் பெண்களும் வன்முறையில் இறங்கும் முதிர்ச்சி அடையாத கிறுக்கர்களுமே நிறைந்துள்ளதாகத் தோன்றுகிறது.
நேசத்துக்குரிய ஒருவர் காலமானதற்கு துக்கம் அனுசரிக்கும் போது மக்களை அச்சுறுத்துவதும் ஆபாச வார்த்தைகளைச் சொல்வதும் மலாய் பண்பாடோ இஸ்லாமியப் போதனைகளோ அல்ல என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் சரியாகச் சொல்லியிருக்கிறார்.
அந்த அம்னோ கோமாளிகளுக்கு என்னுடைய செய்தி இது தான். மற்றவர்கள் உங்களை இது போல நடத்தினால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும் ?
உங்கள் நடவடிக்கை முஸ்லிம்களுடைய தோற்றத்துக்கும் உங்கள் சொந்த இனத்துக்குமே களங்கத்தைக் கொண்டு வரும். வன்முறையும் அடாவடித்தனமும் எந்தப் பிரச்னைக்கும் தீர்வாகாது.
முதிய மலேசியன்: அம்னோ/மசீச/மஇகா/பெர்க்காசா கோமாளிகள் நடத்தும் இந்த வன்முறைகள் ஏதும் அம்னோ/பிஎன் கட்டுக்குள் இருக்கும் ஊடகங்களில் வெளிவராது.
வாய்மொழியாகவே அந்தச் செய்தியைப் பரப்ப வேண்டும். தங்கள் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் செல்லும் ஒவ்வொருவரும் அந்தச் செய்திகளைத் தங்களது குடும்ப உறுப்பினர்களிடம், உறவினர்களிடம் நண்பர்களிடம் பரப்ப வேண்டும்.
அடையாளம் இல்லாதவன்#07988903: வன்முறையும் அச்சுறுத்தலும் பலவீனத்துக்கு அடையாளம். வலிமைக்கு அல்ல. வலிமையைக் காட்டுவதால் யாரும் அடி பணியப் போவதில்லை. விசுவாசமும் காட்டப் போவதில்லை. உலகில் எதிர்ப்பு வலுப் பெறும் போது பல ஆட்சிகள் விழுந்துள்ளன.
டாக்டர் ஜக்#04496187: பிகேஆர், நீங்கள் என்ன செய்தாலும் சரி. போலீசில் மட்டும் புகார் செய்ய வேண்டாம். கோழிக் கூண்டில் இருக்கும் நரியைப் பார்த்து இன்றைக்கு என்ன சமையல் எனக் கேட்பதற்கு ஒப்பாகும் அது.
உங்கள் காவலை மும்மடங்கு உயர்த்துங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை மும்மடங்கு கூட்டுங்கள். நீங்கள் ஒவ்வொரு சண்டையிலும் வெற்றி பெற்றுக் கொண்டு வருகின்றீர்கள். இறுதியில் போரிலும் நிச்சயம் வெற்றி அடைவீர்கள்.