மாட் சாபு சொற்பொழிவு நிகழ்வில் சிரம்பான் போலீஸ்காரர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனரா?

 “அன்று இரவு தமது கடமையைச் செய்யத் தவறியதற்காக போலீஸ் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  அல்லது அதுதான் நோக்கமா?”

 

 

 

மாட் சாபு சொற்பொழிவு நிகழ்வில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயமுற்றனர்

பெர்ட் தான்: பாஸ் சொற்பொழிவு நிகழ்வில் பெர்க்காசா ஏன் அத்துமீறி நுழைந்தது? கலவரத்தையும் வன்முறையையும் தூண்டுவதுதான் அதன் நோக்கமா?

அரசாங்கத்தைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு வழி வகுக்கக் கூடிய அமைதியான மெழுகுவர்த்தி ஊர்வலங்கள், தேர்தல் சீர்திருத்த ஊர்வலங்கள், சிறிய கூட்டங்கள் போன்றவை நிகழும் போது போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துவர். நிறுத்துவர் அல்லது கைது செய்வர்.

ஒவ்வொரு சொற்பொழிவு நிகழ்வின் போதும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் நடத்துகின்ற நிகழ்வுகளுக்கு  சிறப்புப் பிரிவு அதிகாரிகள் அனுப்பப்படுவர் என நாங்கள் அறிகிறோம். அவர்கள் நிகழ்ச்சியைக் கண்காணிப்பதோடு உரைகளையும் பதிவு செய்வர்.

மாட் சாபு இப்போது பிரபலமாகி வருவதால் நிச்சயம் சிரம்பானில் அன்றிரவு நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்வுக்கு போலீசார் பெரும் எண்ணிக்கையில் அனுப்பப்பட்டிருப்பர். அந்த சட்டவிரோத பெர்க்காசா ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லை மீறி செல்வதற்கு முன்னர் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

அதனால் தமது கடமையைச் செய்யத் தவறியதற்காக அன்றைய தினம் கடமையில் இருந்த போலீசாருக்கு தலைமை தாங்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லை என்றால் அது தான் நோக்கம் என நாம் எண்ண வேண்டுமா?

அகராதி: ஒன்று கூடவும் எதிர்ப்புத் தெரிவிக்கவும் பெர்க்காசாவுக்கு உரிமை உண்டு. கருத்துக்களைச் சொல்லுங்கள். ஆனால் மனிதர்களைப் போல நடந்து கொள்ளுங்கள். பின்னர் அமைதியாக கலைந்து செல்லுங்கள்.

இத்தகைய நடத்தைகள் பாஸ் கட்சி மீது அனுதாபத்தையே அதிகரிக்கும். அம்னோ மீதும் அதன் துணைக் குத்தகையாளர்களான பெர்க்காசா, போலீஸ் மீது வெறுப்பைத் தூண்டும்.

சந்திரன் சிவா: பெர்சே 2.0 அமைதியான சீரான பேரணியின் போது அப்பாவி மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இரசாயனம் கலந்த நீர் பாய்ச்சப்பட்டது. ஏன் இந்த இரட்டை வேடம் அரச மலேசியப் போலீஸ் படையே?

அர்மகெடோன்: மாட் சாபு-விடம் பெர்க்காசா மனு கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் அவர் மீது ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு விட்டது.

துரதிர்ஷ்டவசமாக, சட்டப்பூர்வமான பாஸ் சொற்பொழிவு நிகழ்வுக்கு இடையூறு செய்ய முயன்ற அந்தக் குண்டர்களை நிறுத்தும் பணியில் போலீஸ்காரர்கள் எப்போதும் மெதுவாகவே செயல்படுகின்றனர்.

விரைவில் மாட் சாபு-வின் பாதுகாப்புக்கு மருட்டல் ஏற்பட்டுள்ளதால் அவர் இனிமேல் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று போலீசார் சொல்லக் கூடும்.

ஜெடி-யார்: இது அம்னோ தூண்டி விட்ட வன்முறை. அவர்களிடமிருந்து எந்தச் சட்டம் மக்களைக் காப்பாற்றும்?

அடையாளம் இல்லாதவன்: பெர்க்காசா மீண்டும் கலவரத்தைத் தூண்டுகிறது. அதன் ஆதரவாளர்கள் குண்டர்களைப் போல இயங்குகின்றனர். பாஸ் சொற்பொழிவு நிகழ்வில் அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

சராஹுன் ஹுடா: நெருப்பு பற்ற வைக்கப்பட்டு புகை எழுந்துள்ளது. பிஎன் -னுக்கு அது விரும்பியது நடக்கா விட்டால் எல்லாம் கொழுந்து விட்டு எரியும். அவசர காலம் பிறப்பிக்கப்பட்டு நாடாளுமன்றம் கூட நிறுத்தி வைக்கப்படலாம். தனக்கு ஏற்பட்ட சேதத்தை கட்டுப்படுத்த போதுமான கால அவகாசம் பிஎன் -னுக்குக் கிடைக்கும்.

ஆகவே தோழர்களே, நமது அமைதியான நாட்டில் வன்முறை மூளாமல் இருக்க இறைவன் அருள் புரியட்டும். என்றாலும் மோசமான நிலைமையும் ஏற்படலாம். அதனால் மன ரீதியாக தயாராக இருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நஜிப் ரசாக், ஒர் அரசியல்வாதி. அதுவும் விரக்தி அடைந்த நிலையில் இருக்கிறார். அதிகாரத்தில் நிலைத்திருக்க அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.

TAGS: