உங்கள் கருத்து : நஜிப்புக்கு எல்லாம் குரைப்புத் தான் கடிப்பு இல்லை

நிதி அமைச்சரும் எல்லா முதுநிலை அமைச்சர்களும் இல்லாத சூழ்நிலையில் ஒரு நாட்டின் பட்ஜெட் விவாதம் நிகழ்வது இதுவே உலகில் முதல் முறையாக இருக்கும்”

பட்ஜெட் விவாதம் தொடங்கியது நஜிப் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

கேஎஸ்என்: பட்ஜெட் விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளுடைய கருத்துக்களைச் செவிமடுக்க நிதி அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் இல்லாததது அவமானமாகும். அத்துடன் அது நாடாளுமன்றத்தையும் அவர்களை எம்பி-க்களாக அனுப்பிய வாக்காளர்களையும் அவமதிப்பதாகும்.

நாடாளுமன்றத்தில் கூட உண்மையை எதிர்நோக்கவும் வரவு செலவுத் திட்டம் ஆய்வு செய்யப்படுவதையும் எதிர்நோக்கும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை.

விவரம் தெரியாத பின்னிருக்கை உறுப்பினர்கள் மட்டுமே அங்கு இருந்தனர். அவர்களுக்கு புள்ளி விவரங்கள் தெரியாது. அந்த சூழ்நிலை மிகவும் பொறுப்பற்றதாகும்.

அந்த நிலைமையைச் சரி செய்வதற்கு ஒரே வழி அந்தக் கோழைகளை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பாமல் இருப்பது தான்.

ஒங்: நிதி அமைச்சரும் எல்லா முதுநிலை அமைச்சர்களும் இல்லாத சூழ்நிலையில் ஒரு நாட்டின் பட்ஜெட் விவாதம் நிகழ்வது இதுவே உலகில் முதல் முறையாக இருக்கும்.

ஜனநாயகம்: நஜிப் ரசாக் எத்தகைய பிரதமர் ? தேசிய வரவு செலவுத் திட்டம் மீது எதிர்த்தரப்புத் தலைவர் உரையாற்றும் போது உலகில் எந்தப் பிரதமரும் அவையில் இருக்கத் தவற மாட்டார். இது பொறுப்பற்றது. ஏற்றுக் கொள்ள முடியாதது.

நீங்கள் எதிர்க்கட்சித் தலைவரை வெறுத்தாலும் அவர் ஊமை, முட்டாள் எனக் கருதினாலும் பிரதமர் என்ற முறையில் நீங்கள் அவையில் இருப்பது அவசியமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக இது ஜனநாயக நாடு.

அனோன்: நான் என்னுடைய நிறுவனத்துக்காக எத்தனையோ வரவு செலவுத் திட்டங்களைத் தயாரித்துள்ளேன். அவற்றை சமர்பிப்பது என் கடமையாகும். அதனை விட முக்கியமானது என் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதாகும். பொருத்தமாக இருந்தால் அவற்றை ஏற்றுக் கொள்வதாகும்.

மலேசியாவுக்கு எத்தகையை பிரதமர்/தலைமை நிர்வாக அதிகாரி கிடைத்துள்ளார் பார்த்தீர்களா ? அதனால் ஆளும் கட்சி என்னுடைய மரியாதையையும் வாக்கையும் இழந்து விட்டது.

ரென் ஆய்: பிரதமரும் அவரது குழுவினரும் வேண்டுமென்றே அவைக்கு வரவில்லை எனத் தெரிகிறது. நஜிப்பும் அவரது அமைச்சரவையும் அன்வாருக்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கவில்லை. அத்துடன் முக்கியமான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொள்ளாததால் மலேசியர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவேஇல்லை.

அந்த நடவடிக்கை அவர்களது வளர்ப்பு மோசமானது. சிறுபிள்ளைத்தனமானது. முட்டாள்தனமானது என்பதையே  காட்டுகின்றது.

டிஞ்சி: நஜிப் ஒரு கோழை. அவர் பிரதமராக இருக்கத் தகுதியற்றவர். நடப்புப் பிரதமர் எதிர்த்தரப்புத் தலைவருடன் விவாதம் நடத்த பயப்படக் கூடாது. தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் அந்த எதிர்த்தரப்புத் தலைவர் பிரதமராகி விடுவார். பிரதமர் என்ற முறையில் நஜிப்புக்கு அன்வார் சமமானவர் அல்ல எனச் சொல்வது சரியல்ல

பேச்சற்றவன்: நாடாளுமன்றத்தில் தங்கள் சொந்த பட்ஜெட்டை விவாதிக்கவே பிஎன் அமைச்சர்கள் அஞ்சுகின்றனர். உண்மையில் இது பரிதாபமான சூழ்நிலையாகும்.

Apa Ini?: தமது பட்ஜெட் மீதான கேள்விகளுக்குப் பதில் அளிக்க நஜிப் அங்கு இல்லை. ஆனால் அது வியப்பளிக்கவில்லை.

ஏனெனில் உண்மையில் அவர் அந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்படவில்லை என்பதால் தமக்கு அந்தப் பொறுப்பு இல்லை என அவர் எண்ணியிருக்கலாம்.  அவரே வராத வேளையில் அவரது மூத்த குழு உறுப்பினர்கள் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் ? தலைமைத்துவம் பற்றிப் பேசுங்கள்.

தே கீ கியாட்: பக்காத்தான் ராக்யாட்டின் புக்கு ஜிங்கா அது அச்சிடப்பட்ட காகித மதிப்புக் கூட இல்லாதது என நஜிப் சொல்கிறார். நஜிப்பின் பட்ஜெட் அவர் நாடாளுமன்றத்தில் இருக்கும் மதிப்புக் கூட இல்லாதது என நான் கூறுவேன்.

ஸ்டார்ர்: நமது நாடாளுமன்ற அரசாங்க முறையில் காணப்படும் பரிதாபமான சூழ்நிலையே இதுவாகும். அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பு எங்கே போனது ? அவர்கள் நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்லவில்லை என்றால் வேறு யாருக்குத் தான் பதில் சொல்லப் போகிறார்கள் ?

அலங்கரமான சொற்களைக் காட்டிலும் பொருளாதாரத்தை உருமாற்றம் செய்வது கடினமானது என்பதை நஜிப் உணர வேண்டும். தேர்தலுக்கு முன்னர் அன்பளிப்புக்களை ஆதரவைப் பெருக்க முயலுவது நமது பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கப் போவதில்லை.

ஒய்எப்: மசீச தலைவர்கள் எங்கே போனார்கள் ? தலாம் விவகாரம் பற்றிய விவாதத்தில் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் பங்கு கொள்ளாதது பற்றி அவர்கள் அதிகம் குறைப்பட்டுக் கொண்டனர். இப்போது அவர்கள் எஜமானர் நஜிப்பும் மற்ற மூத்த அம்னோ தலைவர்களும் இல்லாதது பற்றி ஏன் புகார் செய்யவில்லை ? சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று.

அடையாளம் இல்லாதவன்#48810686: நமது பிரதமரது நம்பகத்தன்மை கேள்விக்குரியது. கெரக்கான் மாநாட்டில் உணர்ச்சிகரமாக பேசிய அவர் மிக முக்கியமாக தேவைப்பட்ட வேளையில் பதுங்கி விட்டார். நஜிப்புக்கு எல்லாம் குரைப்புத் தான் கடிப்பு இல்லை.

அப்சலோம்: ஏன் எல்லோரும் பிரதமர் மீது பாய்கின்றீர்கள் ? அவர்க்கு கோல்ப் ஆட்டம் அல்லது தமது மனைவியுடன் பொருள் வாங்கக் கடைக்குச் செல்வது போன்ற வேறு முக்கியமான வேலைகள் இருந்திருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இது வெறும் தேசிய வரவு செலவுத் திட்டம் தானே !

TAGS: