பிரதமர்: மலேசியாவில் மகளிர் உரிமை போராட்ட அமைப்புக்கள் தேவை இல்லை

மலேசியாவில் மகளிருக்கு தொடக்க காலத்திலிருந்தே சம நிலை கொடுக்கப்பட்டு வந்துள்ளதால் ” மலேசியாவில் மகளிர் உரிமை போராட்ட அமைப்புக்கள் தேவை இல்லை” பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறிக் கொண்டுள்ளார்.

அவர் இன்று காலை 50வது தேசிய மகளிர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

அந்த வகையில் வளர்ச்சி அடைந்த நாடுகளைக் காட்டிலும் மலேசியா மிகவும் முன்னேறிய நாடு என்றார் அவர்.

“சில வளர்ச்சி அடைந்த நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்படுவதற்கு முன்னர் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மலேசியாவில் தொடக்கத்திலிருந்தே மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது,” என்றும் நஜிப் சொன்னார்.

“வளர்ச்சி அடைந்த நாடுகளில் எல்லாம் சிறப்பாக இருப்பதாக எண்ண வேண்டாம். நாம் குறிப்பாக பெண்கள் உரிமைகள் விவகாரத்தில் வெகு தொலைவு முன்னுக்குச் சென்றுள்ளோம்.”

TAGS: