ரொக்கப் பணத்தைக் கடத்துவது முறையான வழி அல்லவே

உங்கள் கருத்து: “இதே ரிம40 மில்லியன் விவகாரத்தில் மாற்றுக்கட்சி கூட்டணி அல்லது அக்கூட்டணியின் அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தால் பிரதமர் என்ன சொல்லி இருப்பார்?”

பிரதமர் ரிம40 மில்லியன் நன்கொடை வழங்கியவர் யார் என்பதைத் தெரிவிக்க மறுக்கிறார்

பெயரிலி _3e21:மைய நீரோட்ட ஊடகத்தில் இது இடம்பெறவில்லை. ஆனால், மலேசியர்கள் அதைப் பற்றித்தான் சூடாக விவாதித்து வருகிறார்கள்.

அதுவும் ஹாங்காங் அதிகாரிகள் விழிப்பாக இருந்து செயல்பட்டதால்தான் விசயமே வெளியில் தெரிய வந்தது.

இதற்குமுன்பும் இதுபோன்ற கடத்தல்கள் நடந்திருக்கலாம். ஆனால், பிரதமர் அதைத் தற்காத்துப் பேசியதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

பரதேசி: “எந்த அரசியல் கட்சிக்கும் அரசியல் நன்கொடை பெற உரிமை உண்டு. அது முறையான வழியில் வந்தால் சரிதான்….”என்று நஜிப் கூறியுள்ளார்.

ஹாங்காங்கிலிருந்து சாபாவுக்குப் பணத்தைக் கடத்தி வருவதுதான் முறையான வழியா?

ஆர்ஓஎஸ் (சங்கப் பதிவகம்) இதை விசாரிக்குமா?

மாற்றத்தின் முகவர்: ஒரு தனிப்பட்டவர் அல்லது ஓர் அமைப்பு (சுவாராம் போன்றது) ரிம500,000வரை நிதி உதவி பெற்றால்- வங்கிவழி அனுப்பப்பட்டிருந்தாலும் ஆவணச் சாட்சியங்கள் இருந்தாலும்- அது முறைகேடு.

ஆனால், ஒருவர், அம்னோவுக்கு“அரசியல் நன்கொடையாக” ரிம40 மில்லியன் கொண்டுவரும்போது கையும் களவுமாக பிடிபட்டால் அது முறையான வழியில் வந்த பணமாகவே கருதப்படும்.

சுவைபெண்டர்: பணத்தைக் கொடுத்தவர், பெறுநர் பெயர் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் அந்த “முறையான வழியில்” பணம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.

அலோசியஸ்: பிரதமரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன் ரிம40 மில்லியன் ரொக்கப்பணத்தை அறிவிக்காத முறையில்  எல்லை தாண்டிக் கொண்டு செல்வது சட்டப்படி சரியானதுதானா?

கெலாட்: சிங்கப்பூர் நாணயத்தில் கடத்துவது எளிது. சிங்கப்பூரில் S$10,000 நோட்டுகள் (தாள் நாணயம்) உண்டு. 100 நோட்டுகள் சேர்ந்தால் S$1மில்லியன் ஆகும்.

ஆனால், ரிம40மில்லியனை மாற்றுவது கொஞ்சம் கடினமாக இருக்கும். அதற்கு 2.5 என்ற மாற்று விகிதப்படி பார்த்தால் 1,600 நோட்டுகள் தேவைப்படும்.

ஒரு முறை மலேசியாவில் நாணய மாற்று வியாபாரியிடம் ஒரு S$10,000 நோட்டு பெற முயன்றேன். அதைத் தேடிக் கொடுப்பதற்கே மிகவும் சிரமப்பட்டுப் போனார் அவர்.

ஆக, இவ்வளவு பணத்தை சிங்கப்பூர் நோட்டுகளாக மாற்ற எப்படித் திட்டமிட்டிருப்பார்கள். இதில் ஊழல் இல்லாவிட்டாலும், இது நிச்சயம் நாணயச் சலவை (கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும்) முயற்சிதான்.

பிரளயம்: கொடையாளர் யார் என்று தெரிய வேண்டும். அப்போதுதான் அதற்காக அவர் ஆதாயம் எதையும் பெற்றாரா என்பதைக் கண்டறிய முடியும்.

சின்னவன்: இதே ரிம40 மில்லியன் விவகாரத்தில் மாற்றுக்கட்சி கூட்டணி அல்லது அக்கூட்டணியின் அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தால் பிரதமர் என்ன சொல்லி இருப்பார்?

ரிம40 மில்லியன் என்பது மிகப் பெரிய தொகை. அவ்வளவு பெரிய தொகையை எவரும் சும்மா தூக்கிக் கொடுத்திருக்க மாட்டார். சாபா அம்னோவும் கோலாலம்பூர் அம்னோ தலைமையகமும் இதற்கு விளக்கம் கூற வேண்டும்.

பெர்காசா தலைவர்கள் எங்கே போனார்கள்? கண்ணியம் கட்டிக் காப்பவர்களாயிற்றே. நேர்மையான விளக்கம் கேட்டு அவர்கள் இந்நேரம் அம்னோவுக்கும் பிரதமருக்கும் நெருக்குதல் கொடுத்திருக்க வேண்டுமே.

TAGS: