கணக்கறிக்கை: அரசுதுறைகளின் தரம் உயர்ந்துள்ளது

தலைமைக் கணக்காய்வாளரின் 2011ஆம் ஆண்டுக் கணக்கறிக்கை, இரண்டுவார தாமதத்துக்குப் பின்னர் இன்றுகாலை கேள்விநேரத்துக்குப் பின்னர்  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 456 நிதிநிலை விவர அறிக்கைகள் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றில் 413 தணிக்கை செய்யப்பட்டவை என்றும் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் விடுத்த அறிக்கை கூறியது.

“அவற்றில் 388க்கு (85.1விழுக்காடு) கடிந்துரையின்றி தணிக்கைச் சான்றளிப்பு வழங்கப்பட்டிருக்கிறது” என்று தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

“25இல் (5.5விழுக்காடு) கணக்குகள் வைக்கப்பட்டுள்ள முறை தரமாக இல்லை என்ற கடிந்துரையுடன் தணிக்கைச் சான்றளிப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 43-இன்மீது (9.3விழுக்காடு) தணிக்கை இன்னமும் நடைபெறுகிறது”.

அந்த 43 நிதிநிலை விவர அறிக்கைகளும் அரசு நிறுவனங்கள், மாநில இஸ்லாமிய சமய விவகார மன்றங்கள், ஊராட்சி மன்றங்கள் ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்டவையாகும்.

தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால், அது தொடர்ந்துஇரண்டாவது ஆண்டாக பட்ஜெட்டுக்குபின் வெளியிடப்படுகிறது.

TAGS: