நஸ்ரி: வெளிநாட்டு நிதியுதவி பெறுவதைத் தடுக்கச் சட்டமில்லை

நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவதைத் தடுக்க இப்போதைக்குச் சட்டம் ஏதுமில்லை. எனவே, அப்படி நிதியுதவி பெறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

2013 பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் இதனைக் கூறினார்.

நிறுவனங்களை 1965-ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின்படி நடந்துகொள்ள வேண்டும். அமைப்புகள் 1965ஆம் ஆண்டு சங்கப்பதிவுச் சட்டத்தின்கீழ் வருகின்றன.

“இரண்டு சட்டங்களிலுமே வெளிநாட்டிலிருந்து பண உதவி பெறுவதைத் தடுக்கும் விதி எதுவும் இல்லை”, என நஸ்ரி கூறினார்.

“எனவே, வெளிநாட்டு நிதியுதவி பெறும் எந்த நிறுவனத்துக்கும் அல்லது அமைப்புக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வழியில்லை”.

அண்மையில் வெளிநாட்டு உதவி பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று வினவிய பிஎன், பிஎன்-ஆதரவு எம்பிகளின் கேள்விகளுக்கு நஸ்ரி இவ்வாறு பதிலளித்தார்.

TAGS: