பினாங்கின் தகவல் உரிமைச் சட்டம் என்னவானது?

பினாங்கு அரசு தகவல் உரிமைச் சட்டத்தை இயற்றி அரசிதழிலும் வெளியிட்டிருக்கிறது. ஆனால், அது அதிகாரப்பூர்வமாக இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அச்சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று தெரிந்துகொள்ள சமூக ஆர்வலர்கள் விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.

மனித உரிமைக்காகப் போராடும் என்ஜிஓ-வான சுவாராம், கடந்த ஆண்டு நவம்பரில் மாநிலச் சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இவ்வாண்டு ஏப்ரலில் அரசிதழிலும் வெளியிடப்பட்ட தகவல் உரிமைச் சட்டம் என்னவானது என்பதை பினாங்கு அரசு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

அது எப்போது அமலாக்கம் செய்யப்படும் என்பதை முதலமைச்சர் லிம் குவான் எங் தெரிவிக்க வேண்டுமென பினாங்கு சுவாராம் ஒருங்கிணைப்பாளர் லீ ஹுய் பெய் (வலம்) கூறினார்.

“மாநில அதிகாரிகளிடமிருந்து குறிப்பிட்ட சில தகவல்களைப் பெற பினாங்கு வரி செலுத்துவோர் என்ன செய்ய வேண்டும்?”, என்று லிம்முக்கு அனுப்பிய கடிதத்தில் லீ வினவியுள்ளார்.

அச்சட்டத்தின் இப்போதைய நிலை பற்றித் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு சுவாராம்  இரண்டு கடிதங்களை அனுப்பி விட்டது. இன்னும் பதில் இல்லை.

சிலாங்கூரை அடுத்து தகவல் உரிமைச் சட்டம் கொண்டுவந்த இரண்டாவது மாநிலம் பினாங்கு ஆகும்.

TAGS: