அன்வார் vs உத்துசான் வழக்கில் டிசம்பர் 27ம் தேதி தீர்ப்பு

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், பிபிசி ஒலிபரப்பு நிலையத்துக்கு தாம் வழங்கிய பேட்டி தொடர்பில் உத்துசான் மலேசியாவுக்கு எதிராக தொடுத்துள்ள அவதூறு வழக்கில் முடிவு செய்வதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் டிசம்பர் 27ம் தேதியை நிர்ணயம் செய்துள்ளது.

அம்னோவுக்குச் சொந்தமான அந்த நாளேட்டுக்கு ஆதரவாக உத்துசான் மலேசியாவின் முதுநிலை ஆசிரியர் ஒருவரும் பத்திரிக்கையாளர் ஒருவரும் சாட்சியமளித்த பின்னர் தமது தீர்ப்பை வழங்குவதற்கு நீதிபதி வி டி சிங்கம் அந்தத் தேதியை நிர்ணயம் செய்தார்.

அந்த அவதூறு வழக்கில் வெளியீட்டாளரான உத்துசான் மிலாயு (எம்) பெர்ஹாட், அதன் குழும ஆசிரியர் அப்துல் அஜிஸ் இஷாக் ஆகியோரைப் பிரதிவாதிகளாக அன்வார் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்த்தரப்புத் தலைவர் சார்பில் வழக்குரைஞர்களான என் சுரேந்திரனும் லத்தீப்பா கோயாவும் வாதாடினார்கள். உத்துசான் மலேசியாவைப் பிரதிநிதித்து பிரோஸ் ஹுசேன் அகமட் ஜமாலுதீன் ஆஜரானார்.

TAGS: