‘கறுப்புப் பேரணிகள் சீனர்களின் ஆதிக்கத்தை பெற்றிருந்தது என வருணனை’

அண்மைய பொதுத் தேர்தலில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறிக் கொண்டு பக்காத்தான் ராக்யாட் நடத்தும்  'கறுப்புப் பேரணிகள்' வன்முறையானதுடன் சீனர்களின் ஆதிக்கத்தை பெற்றிருந்தது என அம்னோவுக்குச் சொந்தமான  உத்துசான் மலேசியாவும் அம்னோவுடன் தொடர்புடைய பெரித்தா ஹரியானும் வருணனை செய்துள்ளன. 'சட்ட விரோதப் பேரணிகளில் இளம் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தினர்' என…

உத்துசான்: ஊடுருவல்காரர்கள் பொதுத் தேர்தலின் போது தாக்கத் திட்டமிட்டிருந்தனர்

சபா கம்போங் தண்டுவோ-வில் ஊடுருவிய ஆயுதமேந்திய சுலு கிளர்ச்சிக்காரர்கள் உண்மையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் தங்கள் தாக்குதலைத் தொடங்கத் திட்டமிட்டிருந்ததாக உத்துசான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் மக்கள் உதவியுடன் தேர்தல் காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டை குழப்பத்தில் ஆழ்த்த அந்த ஊடுருவல்காரர்கள் எண்ணம் கொண்டிருந்தனர் என…

பிகேஆர் எம்பி-யிடம் மன்னிப்பு கேள் : உத்துசானுக்கு நீதிமன்றம் உத்தரவு

உத்துசான் மலேசியா நாளேடு, இந்திரா மக்கோத்தா எம்பி அஸான் இஸ்மாயில்மீது அவதூறு கூறியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் இழப்பீடும் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அஸான் இஸ்மாயில் பிகேஆரில் வகித்த எல்லாப் பதவிகளிலிருந்தும் விலகியதுடன் அக்கட்சியைவிட்டும் வெளியேறி இருப்பதாக அந்நாளேடு செய்தி வெளியிட்டதற்காக இத்தண்டனை…

உத்துசான் கட்டுரைக்காக ஜைனுடினைச் சாடினார் இந்தோனேசிய அதிபர்

இந்தோனேசியாவின் மூன்றாவது அதிபர் பிஜே ஹபிபி குறித்து மலேசியாவின் முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின்(ஜாம்) எழுதிய கட்டுரை முறையற்றது அடாவடித்தனமானது என்று சாடியுள்ளார் இந்தோனேசிய அதிபர் சுசிலோ பம்பாங். அக்கட்டுரை இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்குமிடையில் நிலவும் நல்லுறவைக் கெடுத்துவிடலாம் என்றவர் சொன்னதாக பெர்னாமா அறிவித்துள்ளது. இந்தோனோசிய அதிபர், பரஸ்பர…

கர்பாலுக்கு ரிம50 ஆயிரம் கொடுக்குமாறு உத்துசானுக்கு நீதிமன்றம் உத்தரவு

அம்னோவுக்குச் சொந்தமான நாளேடான உத்துசான் மலேசியா, அவதூறு வழக்கு ஒன்றில் குற்றவாளியென தீர்மானிக்கப்பட்டு டிஏபி தலைவர் கர்பால் சிங்குக்கு இழப்பீடாகவும் செலவுத்தொகையாகவும் ரிம70,000 கொடுக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. நான்கு ஆண்டுகளுக்குமுன், பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலுக்கு முந்திய நாள், கர்பால் அங்கு செல்லவில்லை…

நிக் அஜிஸ் உத்துசானை கேலி செய்கிறார், நுருல் மீது கருத்துரைக்க…

சமயச் சுதந்திரம் மீது பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ளதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய அறிக்கை மீது பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கருத்துறைக்க மறுத்துள்ளார். அந்த அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள உத்துசான் மலேசியா நம்பிக்கைக்குரிய வெளியீடு அல்ல என்பதே…

அன்வார் vs உத்துசான் வழக்கில் டிசம்பர் 27ம் தேதி தீர்ப்பு

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், பிபிசி ஒலிபரப்பு நிலையத்துக்கு தாம் வழங்கிய பேட்டி தொடர்பில் உத்துசான் மலேசியாவுக்கு எதிராக தொடுத்துள்ள அவதூறு வழக்கில் முடிவு செய்வதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் டிசம்பர் 27ம் தேதியை நிர்ணயம் செய்துள்ளது. அம்னோவுக்குச் சொந்தமான அந்த நாளேட்டுக்கு ஆதரவாக உத்துசான் மலேசியாவின் முதுநிலை…

உத்துசான் நிருபர்: நான் தேவாலயத் தலைவர்களுடைய வார்த்தைகளை திரிக்கவில்லை

இரண்டு கிறிஸ்துவத் தலைவர்களை மேற்கோள் காட்டி தாம் எழுதிய செய்தி 'முற்றிலும் பொய்' என அவர்கள் இருவரும் கூறிக் கொள்வதை உத்துசான் மலேசியா நிருபர் கஸ்தூரி ஜீவாந்திரன் நிராகரித்துள்ளார். தேவாலயம் அரசியல் மேடையாக பயன்படுத்தப்படுகிறது என தமது செய்தியில் கூறப்பட்ட அவர்கள் கருத்துக்கள் பொருத்தமில்லாமல் கையாளப்பட்டுள்ளதாக கூறப்படுவதை கஸ்தூரி…

உத்துசான்: மலேசியாகினி ‘மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’

மலேசியாகினி செய்தி இணையத் தளத்துக்கு நாணய ஊக வணிகர் ஜார்ஜ் சோரோஸ் நிதி அளித்தார் என்று கூறப்படுவது மீது அது எல்லா மலேசியர்களிடமும் 'மன்னிப்பு' கேட்க வேண்டும் என உத்துசான் மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது. 'அந்நியர்களுடைய கருவியாக இருப்பதை நிறுத்திக் கொள்ள' மலேசியாகினி எண்ணம் கொண்டுள்ளதா என அந்த…

நசாருதின் விலக்கப்படுவார் என உத்துசான் ஆரூடம்

வரும் ஞாயிற்றுக் கிழமை பாஸ் கட்சியின் syura மன்றமும் மத்தியக் குழுவும் கூடும் போது அந்தக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா நீக்கப்படுவார் என உத்துசான் மலேசியா ஆரூடம் கூறியுள்ளது. பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிக்கும் பாஸ் தலைவர்கள் ( Anwarinas…

உத்துசான்: ‘புதிய கொடியை’ வடிவமைத்தவர் பிகேஆர் இளைஞர் தலைவர்

மெர்டேகாவுக்கு முன்தினம் டாட்டாரான் மெர்டேகாவில் விரித்துக் காண்பிக்கப்பட்ட Sang Saka Malaya(சாங் சாக்கா மலாயா) என்றழைக்கப்படும் ‘புதிய கொடி’யை வடிவமைத்தவர் பிகேஆர் இளைஞர் பகுதி பிரச்சாரப் பிரிவு துணைத் தலைவர் நஜ்வான் ஹலிமி என்று உத்துசான் மலேசியா கூறுகிறது. அன்றிரவு நஜ்வான், தம் டிவிட்டர் தளத்தில் பதிவிட்டிருப்பதையும் அந்நாளேடு…

கர்பாலிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரிய உத்துசான் ஆசிரியர்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தாம் எழுதிய கட்டுரை ஒன்றுக்காக உத்துசான் மலேசியாவின் மூத்த எழுத்தாளர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் கர்பால் சிங்கிடம் பலமுறை மன்னிப்புக் கோரினார். ஜுல்கிப்ளி ஜாலில் என்ற அந்த உத்துசான் செய்தி ஆசிரியர் தாம் எழுதிய "DAP diingat jangan bakar perasaan Melayu" என்ற…

உங்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? உத்துசானிடம் சுவாராம் கேள்வி

சுவாராமுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று கேட்கும் உத்துசான் மலேசியா அதன் நிதி மூலங்களைத் தெரிவிக்கத் தயாரா என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் அந்த மனித உரிமை என்ஜிஓ-வின் ஆலோசகர் குவா கியா சூங். “உத்துசானுக்குப் பணம் கொடுப்பது யாரென்று சொல்லுங்களேன்.தெரியவில்லையென்றால் அங்குதானே வேலை செய்கிறீர்கள்.கேட்டுப் பாருங்கள்”.இன்று சுவாராம், மனித…

உத்துசான் மூன்றாவது முறையாக டிஏபி-யுடன் சர்ச்சை

முஸ்லிம்கள் டிஏபி-யை ஆதரிப்பது பாவம் என கூறிக் கொள்ளும் கட்டுரையை வெளியிட்ட உத்துசான் மலேசியா மீது பினாங்கு டிஏபி போலீஸில் புகார் செய்துள்ளது. பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக உத்துசானை நீதிமன்றங்கள் இரண்டு முறை தண்டித்துள்ள போதிலும் அந்த மலாய் நாளேடு…

முதலமைச்சர் “தொடர்பு” மீது கூடுதல் பதில்களை உத்துசான் நாடுகின்றது

மலாக்கா கோத்தா லக்ஸ்மாணா சட்டமன்ற உறுப்பினர் பெட்டி சியூ-வும் தமது கணவருடன் உறவு வைத்துள்ளதாக பிஎன் கூறிக் கொள்கின்ற பெண்ணும் கூட்டாக நிருபர்களைச் சந்திக்க வேண்டும் என உத்துசான் மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது. அந்த விவகாரம் மீது இன்னும் பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்காததால் கூட்டு நிருபர்கள் சந்திப்பு…

உத்துசான் ஆசிரியர்: எதிர்க்கட்சிகளைத் தாக்குவதற்கு விஷயங்களைத் திரிப்பது சரியே

வாசகர்களுக்கு 'விரும்பப்படும் தோற்றத்தை' வழங்குவதற்கு விஷயங்களைத்  திரித்து செய்திகளை வெளியிடுவதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்துசான் மலேசியாவின் துணைத் தலைமை ஆசிரியர் முகமட் ஜைனி ஹசான் கூறினார். விஷயங்களைத் திரித்துக் கூறுவது எதிர்க்கட்சிகள் மீது "நாகரீகமாக தாக்குதல்" (serangan berhemah)  தொடுப்பதற்கான வழிகளில் ஒன்று என முகமட் ஜைனி…

நிஜார் உத்துசான், டிவி3 மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்

உத்துசான் மலேசியாவும் டிவி3-வும் WWW1 கார் எண் தகடு தொடர்பில் அவதூறான செய்திகளை வெளியிட்டதாக கூறப்படுவது மீது அவற்றுக்கு எதிராக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் 50 மில்லியன் ரிங்கிட் வழக்கைத் தொடுத்துள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு…

டிஏபி ‘இட ஒதுக்கீட்டில்’ ஆதிக்கம் செலுத்துவதாக கூறும் உத்துசான் செய்தியை…

டிஏபி அடுத்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 90ல் போட்டியிட்டு புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் தனது தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு வகை செய்துள்ளதாக உத்துசான் மலேசியா இன்று முதல் பக்கத்தில் வெளியிட்ட தலைப்புச் செய்தியை டிஏபி நிராகரித்துள்ளது. அந்தச் செய்தி "குப்பை,குப்பை, குப்பை" என…

உத்துசான்: 13வது பொதுத் தேர்தலுக்கு சிங்கப்பூர் பெரிய திட்டங்களை வைத்துள்ளது

சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சி (பிஏபி) தனது வழியான டிஏபி மூலம் பிஎன் வீழ்ச்சிக்கு பெருந்திட்டத்தை வகுத்துள்ளதாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா குற்றம் சாட்டியுள்ளது. அந்த பிஏபி கட்சி தீவகற்ப மலேசியாவில் தனது 'கனவை' நிறைவேற்றிக் கொள்வதற்கு 48 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறது என உத்துசானின் ஞாயிறு…

ஆஸ்திரேலிய செனட்டர் உத்துசான் மீதும் வழக்குத் தொடர எண்ணுகிறார்

சுயேச்சை தெற்கு ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன், உத்துசான் மலேசியா உட்பட இரண்டு உள்ளூர் நாளேடுகள் தம்மைத் தவறாக மேற்கோள் காட்டி தாம் இஸ்லாத்துக்கு எதிரானவர் எனச் சித்தரித்ததற்காக அவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றிப் பரிசீலித்து வருகிறார். "அது எந்த மொழியில் வெளியிடப்பட்டாலும் (சட்ட நடவடிக்கை…

உத்துசான்: ஹாடி போட்டியிடுகிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தமது முன்னைய முடிவில் உறுதியாக இருந்தாலும் அந்தக் கட்சிக்கு அது முக்கியமனது அல்ல என உத்துசான் மலேசியா ஆசிரியர் சுல்கிபி பாக்கார் கூறுகிறார். அதற்கு அப்துல் ஹாடியைக் காட்டிலும் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக்…